தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

15 October 2018

அக்டோபர், 2வது சனிக்கிழமை - மாதாந்திரக் கூட்டம்



நமது AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், 13-10-2018 அன்று காலை 10:30 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்டத் துணைத் தலைவர் திரு.என்.அம்பிகாபதி அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார். கூட்டத்தில் மாவட்டத் தலைவர் எல்.தாமஸ்,  மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா, மா. இணைச் செயலர் கே.சித்திக் உமர் ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்த விவாதங்களில் பங்கேற்றுப் பேசினர். 

கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின:

1.பூரி அகில இந்திய மாநாட்டின் முக்கிய நிகழ்வுகள் குறித்து தோழர்.என்.அம்பிகாபதி உரையாற்றினார்.

2. KYP விண்ணப்பங்கள் PCCA, சென்னையில் இதுவரை சமர்ப்பித்த 245 போக, இன்னமும் தராதவர்கள் குறித்த பட்டியல் விவாதிக்கப்பட்டது.

3. அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் செயற்குழு குறித்து விவாதிக்கப்பட்டது.


கூட்டத்தில் 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.