தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

16 December 2020

2020, டிசம்பர் மாதக்கூட்டம்

  12-12-2020, மாதத்தின் இரண்டாவது 
சனிக்கிழமையன்று 
 காலை 10:30 மணிக்கு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாவட்டத் துணைத்தலைவர்  எம். ஜீவானந்தம் அவர்கள் தலைமையேற்றுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

மாநில துணைத் தலைவர் என்.அம்பிகாபதி, மாவட்டச் செயலர் திரு.எஸ். சுப்பையா, இணைச் செயலர் எம்.பர்னபாஸ் மற்றும் கே.சித்திக் உமர், பொருளாளர் எஸ்.பால்சாமி ஆகியோர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். 

கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின: 

1.  17-12-2020 அன்று ஓய்வூதியர் தினத்தைச் சிறப்பாகக் கொண்டாடுவது

2.  70 அகவை நிறைவு செய்த ஒன்பது தோழர்களைக் கௌரவிப்பது. 

3.  VRSன் காரணமாக ஓய்வு பெற்றுச் சங்கத்தில் இணைந்துள்ள புதிய தோழர்களைக் கௌரவிப்பது. 

விவாதங்களில் அனைத்துத் தோழர்களும் சிறப்பாகப் பங்கேற்றனர். 

கூட்டத்தில் 30 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.  

15 November 2020

Pensioners' Patrika May-September 2020


மே முதல் செப்டம்பர் 2020 வரையிலான பென்சனர் பத்திரிகை செய்தியை வாசிக்க,  கீழ்க்காணும் இணைப்பை Click செய்யவும் 

மே - செப்டம்பர் 2020

குறிப்பு : எல்லா மாதங்களுக்கான பத்திரிகையையும் 'Patrika' என்ற மேலுள்ள இணைப்பைத் தேர்ந்தெடுத்து அதில் தேவையுள்ள பத்திரிகையைத் தேர்ந்தெடுத்து  வாசிக்கலாம். 

26-11-2020 அகில இந்திய வேலை நிறுத்தம்

 


26-11-2020 அன்று நடைபெறவிருக்கும் அகில இந்திய போராட்டத்துக்கு நமது அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இது குறித்து,  தலமட்ட அளவில் ஆலோசித்து மாவட்டச் சங்கங்கள் இப் போராட்டத்தில் இணைந்துகொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளது. 


14 November 2020

11 October 2020

10-10-2020 : அக்டோபர் மாத மாதாந்திரக் கூட்டம்

 நமது தூத்துக்குடி மாவட்டத்தின் அக்டோபர்-2020க்கான மாதாந்திரக் கூட்டம் 10-10-2020 இரண்டாம் சனிக்கிழமையன்று மாவட்டத் தலைவர் எல்.தாமஸ் அவர்கள் தலைமையில், மாவட்டச் சங்க அலுவலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

கூட்டத்தினை மாவட்ட இணைச் செயலர் எம்.பர்னபாஸ் அவர்கள் தொடங்கி வைத்து உரையாற்றினார். கூட்டத்தில் கடந்த மாதங்களில் நம்மை விட்டு மறைந்த தோழர்கள், 

வி.கிருஷ்ணன்

வை.கோவிந்தன்

வெயிலுகந்தன்

ஆர்.ஜெயபால்

ஆகியோர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

கூட்டத்தில் கீழ்க்கண்ட கருத்துகள் ஆலோசிக்கப்பட்டன.

1. கொரோனா காலத்தில் நமது சங்க உறுப்பினர்கள் கவனத்துடன் செயல்படுவதற்கான நடைமுறைகள். 

2. கடந்த ஆண்டு VRSல் சென்ற 139 தோழர்களில் இதுவரை 108 உறுப்பினர்கள் சேர்ந்துள்ள நல்ல நிகழ்வு. 

3. சங்க கட்டிடத்திற்குத் தரவேண்டிய வாடகை, மின்கட்டணம், தொலைபேசிக் கட்டணம் ஆகியவற்றுக்கான நன்கொடைகளை உறுப்பினர்கள் மனமுவந்து கொடுப்பது. 

4. இதுவரை Life Certificate கொடுக்காத VRS தோழர்கள் உடனே கொடுக்கவேண்டியது.

5. நமது சங்க உறுப்பினர்களின் பயன்பாட்டுக்காக Finger Print கருவி உடனே வாங்குவது. 

இதுகுறித்த உரையாடல்களில் மாவட்டத் தலைவர் எல்.தாமஸ், சொர்ணராஜ், சித்திக் உமர் என அனைவரும் தங்கள் கருத்துகளைச் சிறப்பாகத் தந்தனர். 
தொடர்ந்து மாவட்டப் பொருளாளர் எஸ்.பால்சாமி அவர்கள் நிதிநிலை குறித்துப் பேசினார். நிதிநிலை சீராக உள்ளதாகக் குறிப்பிட்டார். 

மேலும், சங்கச் செயல்பாடுகள், தீர்க்க/தீர்க்கப்பட்ட பிரச்சனைகள், நீதிமன்ற வழக்குகள், மாநில நிர்வாகத்துடனான தொடர்புகள் என பரந்துபட்ட கருத்துகளை முன்வைத்து உரையாற்றினார். 

இக்கட்டான கொரோனா சூழ்நிலையிலும் 18 உறுப்பினர்கள் வந்திருந்து கூட்டத்தில் சிறப்பாகப் பங்கேற்றனர்.