தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

21 March 2019

கொறுக்கைப் பள்ளி மாணவியின் "நன்றி கவிதை"

கொறுக்கை நடு நிலைப்பள்ளி தமிழ் மாநிலம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில AIBSNLPWA  சங்கங்களின் கூட்டு முயற்சியால் சீரமைக்கப்பட்டு பள்ளி நிர்வாகத்திடம் கடந்த ஞாயிறு  (17 03-2019 ) அன்று ஒப்படைக்கப்பட்டது.

நன்றிப் பெருக்கால் நெகிழ்ந்து போன பள்ளி மாணவ மாணவிகள்  பாடல் மூலமாகவும் கவிதை மூலமாகவும் தெரிவித்து மகிழ்ந்தனர் . எட்டாவது வகுப்பில் பயிலும் மாணவி ஜெனிதா அளித்த கவிதையினை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்.

ஓய்வூதியர் நலம் மட்டுமல்ல சமூக நலத்திலும் நாம் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளோம்.





மாவட்டச் செயற்குழு - 30.03.2019


18 March 2019

கஜா புயலில் பாதிப்படைந்த கொறுக்கைப் பள்ளி சீரமைப்பு

கஜா புயலினால் பாதிக்கப்பட்ட கொறுக்கையில் உள்ள அரசு நிதியுதவியுடன் நடந்து வரும் பள்ளிக்கு,  நமது சங்கம் ரூ.5,50,000/- நிதியுதவி செய்து நிழல்கூரையுடன் கூடிய வகுப்பறைகளைச் சீரமைத்தது.



17-03-2019 அன்று நமது சங்கம் சீரமைப்புப் பணிகளை முடித்து ஒப்படைத்துள்ளது.









Achievements - Congratulations


14 March 2019

11 March 2019

உலக மகளிர் நாள் : 08-03-2019

 08-03-2019 வெள்ளிக்கிழமை காலை 10:30 மணிக்கு,
வங்கிகள் சங்கக் கட்டிடம், வரதராஜபுரம், தூத்துக்குடியில்
AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டம் சார்பாக
“உலக மகளிர் நாள்” கொண்டாடப்பட்டது.

திருமதி B.செல்வபிரமிளா அவர்கள் கூட்ட நிகழ்வுகளுக்குத் தலைமையேற்றுத் தலைமை உரையாற்றி நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார். திருமதி S. பாக்கியலெட்சுமி அவர்கள் முன்னிலை வகித்தார்.


தோழர். கிருஷ்ணமூர்த்தி,  தூத்துக்குடி நகர வங்கிகள் சங்கம்   மற்றும் தோழர். கைலாசமூர்த்தி ஆகியோர்  மகளிர் நாள் வாழ்த்துக்களைக்கூறி அருமையாக உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து, AIBSNLPWA தமிழ் மாநிலச் சங்க உதவிச் செயலர் தோழர்.என்.அம்பிகாபதி அவர்கள் சிறப்பான வாழ்த்துரை வழங்கினார்.




கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகத் திருமதி அ.ம.சோனல், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, தூய மரியன்னைக் கல்லூரி, தூத்துக்குடி, அவர்கள் கலந்துகொண்டு , “சங்க இலக்கியத்தில் மக்களின் வாழ்வியல் நெறி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.




திருமதி அ.ம.சோனல் அவர்கள் தமது உரையில், சங்க இலக்கியங்களில் குறிப்பாகக் காப்பியங்களில் கண்ணகி, மாதவி போன்றோரின் அறநெறி வாழ்க்கையை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கினார். அதேவேளையில், தற்காலச் சமூகச் சூழ்நிலையில் மகளிர் தம் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய தேவையினையும் எடுத்துக்கூறி மிகச் சிறப்பாக உரையாற்றினார்.






காக்கும் கரங்கள்!

“மகளிர் தம் கருணைக்கும் அளவுண்டோ?”

08-03-2019 : உலக மகளிர் நாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளின் தொடர்ச்சி!

AIBSNLPWA, தூத்துக்குடி மகளிரின் கூட்டு முயற்சியில் மகளிரிடமிருந்து நன்கொடை பெற்று,
நல்லாயன் செவித்திறன் குறைந்தோர் உறைவிடம் மற்றும் லூத்தரன் மேல்நிலைப் பள்ளி, தூத்துக்குடி மாணவச் செல்வங்களுக்கு,

 12லி.ஃபிரஷர் குக்கர் ஒன்று
இரண்டு  பர்னர் கேஸ் ஸ்டவ் ஒன்று,
 குளியல் சோப்புகள்  
மற்றும் எண்ணெய் பாக்கட்டுகள்
 ஆகியவற்றை வழங்கினர்.

 சேய் துயருறப் பொறுப்பாளோ, அன்னை? 







புறவிருந்து நோக்கி 
வரஇருந்து காத்துப் 
பெண்ணாய்ப் பிறந்ததனால், 
பிறந்தஇடம் வாழ்த்தப் 
புகுந்தஇடம் போற்றப் 
பொறுமை காத்திடுவர் - பெண்கள் 
பொறுமை காத்திடுவர்! 

வரவிருந்தால் சேமித்துக் 
குறையிருந்தால் நிறைவித்துக் 
குடும்பத்தைக் காத்திடுவர்; 
வரவில்லாப் பொழுதினிலே 
சேமிப்பைத் தந்துதவி 
உற்றுளி உதவிடுவர் - பெண்கள் 
உற்றுளி உதவிடுவர். 

குன்றாப் புகழுடைய 
மாதர் பலருண்டு 
கொண்டாடும் குணமுமுண்டு; 
பொன்றாத் துணையாய்க் 
கொண்டவர்பால் நின்று 
பொருந்தி வாழ்ந்தனரே - இசைபடப் 
பொருந்தி வாழ்ந்தனரே! 

அறவழியும் சத்தியமும் 
காத்துநின்ற காந்திக்கும் 
முன்வடிவு யாரென்பீர்? 
அறம்காத்தத் தில்லையாடி 
வள்ளியம்மை அறிவீரோ? 
அறம்காத்து உயிரிழந்தார் - மாண்பின் 
அறம்காத்து உயிரிழந்தார்! 

விஞ்ஞானம் கைக்கொள்வர் 
விண்ணையும் சாடிடுவர்! 
எல்லையில் அச்சுறுத்தும் 
அஞ்சலர் வெருண்டோட 
ஆயுதமும் கைக்கொண்டு 
வீரம் விளைக்க வந்தார் - குன்றா 
வீரம் விளைக்க வந்தார். 

போக்கிட மில்லாமல் 
பெண்ணில்லை காண்பீர்! 
புறங்காணல் என்றுமிலை; 
போற்றும் நீதியினால் 
புவியாள வந்துற்ற 
பெண்கள் உயர்ந்தவரே! - என்றும் 
பெண்கள் உயர்ந்தவரே! 

சட்டங்கள் திட்டங்கள் 
அத்தனையும் ஆளவந்தார்; 
சாற்றும் நெறிகண்டு, 
பட்டங்கள் பலபெற்று 
பாரினில் ஓங்கிநின்றார்; 
வாழிய வாழியவே!- பெண்கள் 
வாழிய வாழியவே! 


07 March 2019

உயிர்ப் பெண் எழுத்து



சொர்க்கம் நரகம் அதிருக்குது ஒருபுறம்;
வர்க்கம் சாதி ஏதும் அழிக்கும் மறுபுறம்!

அத்தனையும் வென்றுவர,
பெண்ணேநீ எழுந்துவர,
நூலும் அறிவும் இறைந்து கிடக்குது;
உயிரோடு மெய்யும்
இணைந்து கடக்குது.

பெண்ணே, நீ எழுந்து வா!

::::::  உலக மகளிர் நாள் வாழ்த்துக்கள்! :::::

:: AIBSNLPWA தூத்துக்குடி

06 March 2019

Extra Increment Case at Chennai Bench

06-03-2019 : The extra Increment case came before Chennai Bench today for hearing.
Our lawyer argued the delay in revision of pension @78.2% for some of the pensioners. The Govt. lawyer insisted for time.

The Honourable judge postponed the case to 3-4-2019.

Com.A.Sugumaran, Com.K.Muthialu, & Com.P.Mohan attended the court.

உலக மகளிர் தின விழா : 08-03-2019