தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

18 September 2018

பூரி, அகில இந்திய மாநாட்டிற்குச் செல்வோம்! வாரீர்!!


பூரி, அகில இந்திய மாநாட்டில் நமது செயலாக்கம்இதோ, ஜகன்னாத் பிரபுவின் புனிதத் தலமாம் பூரியை நோக்கிய நமது பயணத்தில், அகில இந்திய மாநாட்டில் ஒருங்கிணைவதற்காகப் புறப்பட்டுவிட்டோம்.

 ‘மத்திய அரசின் ஊதியப் பொருத்த விதியின்படியான ஓய்வூதியப் புதுப்பிப்பு (Pension Revision according to CPC Fitment Formula)’  என்பதே நமது கோரிக்கை. இதனை வென்றெடுப்பதற்கான  அனைத்து முயற்சிகளையும் நம்மோடு இயைந்து வரக் கூடிய பிற சங்கங்களோடு கூட்டாக இணைந்து முன்னெடுத்துச் செல்வோம்.

முன்னர், ஊதிய மாற்றக் குழு (PRC) விதிகளின்படியே ஓய்வூதிய மாற்றம் என்ற நிலைபாட்டை எடுத்த சில சங்களும்கூட, தற்போது, மெய்ம்மையை உணர்ந்து, CPCயின்படியான ஓய்வூதிய  மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. ஒன்றுபட்ட போராட்டம் மூலம்  கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது என்பதுவே காலத்தின் அறிவுறுத்தல்.

எந்ந்நிலையை யார் இதன் முன்னர் எடுத்தனர் என்பது குறித்த சிந்தை நமக்கில்லை.

மிகச் சரியான நமது வழியில் வந்து பலரும் இணைவதில் நமக்குப் பெரும் மகிழ்ச்சியே.

இது எமது வழி, பிறர் வழி  என்பதல்ல கேள்வி; இது சரியான வழி என்பதே மெய்.!

மத்திய ஓய்வூதிய/ஊதியக் குழு விதிப் பொருத்தத்தின்படி (CPC Fitment Formula)  ஓய்வூதிய மாற்றம் செய்…

தொழில்சாலை அகவிலைப்படியின்படியே (IDA) ஓய்வூதிய மாற்றம் செய்...

ஓய்வூதியம் என்பது பிஎஸ்என்எல் ஊதிய மாற்றத்தின்படிதான் என்பதில் இருந்து விடுவித்துவிடு...

பிஎஸ்என்எல்லின் பொருளாதார நிலையிலிருந்து எமது ஓய்வூதியத்தை விடுவித்துவிடு...

எமது ஓய்வூதிய மாற்றத்திற்காக, பிஎஸ்என்எல்லின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டிய தேவை   அரசுக்கு இல்லை…

இவற்றை, இன்னும் பிறவற்றை, நமது வருங்கால நடவடிக்கைகளை..
பூரி, அகில இந்திய மாநாடு தீர்மானிக்கும்…. …
===============================================
::: மத்திய நிலைக் குழுவின் (CHQ) ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம். :::
===============================================

13 September 2018

AIBSNLPWA Patrika : Sep-Oct 2018

                                                 PENSIONERS'  PATRIKA


The September-October, 2018 issue had been despatched to the subscribers on 04-09-2018 ... ... ... PSR


12 September 2018


செப்டம்பர், 2வது சனிக்கிழமை – மாதாந்திரக் கூட்டம் 

நமது AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், 08-09-2018 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார். கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலர் என்.அம்பிகாபதி, மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா, மா. துணைத் தலைவர் பரமசிவம், மா. இணைச் செயலர் எம்.பர்னபாஸ் ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்த விவாதங்களில் பங்கேற்றுப் பேசினர். 
கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின.

1. பூரி அகில இந்திய மாநாட்டில் நமது தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் சார்பாகக் கலந்துகொள்ளும் 12 உறுப்பினர்களின் பொறுப்பும், மாநாட்டின்மீதான நமது  எதிர்பார்ப்புகளும் குறித்து விவாதிக்கப் பட்டன.

2. உங்கள் ஓய்வூதியரை அறிந்துகொள்ளுங்கள் (KYP) விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் – இதுவரை வரப்பெற்றுள்ள 220 விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப் பெற்று,  CCA, சென்னை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கப்படும்.

3. ரசீது அல்லாத மருத்துவப்படி (without voucher medical allowance) விண்ணப்பங்கள் இதுவரை சமர்ப்பிக்காத உறுப்பினர்களைக் கண்டறிந்து, விண்ணப்பங்களை விரைவில் பொதுமேலாளர், தூத்துக்குடி அலுவலகத்தில் கொடுக்க முயற்சி மேற்கொள்வது.

4. 18-09-2018 அன்று சென்னையில் அதாலத் கூட்டம் நடைபெறுகிறது.  கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கலந்து கொள்வதாகக் கூறியிருக்கிறார்.

இந்த முறை, பொது இடத்தில்(ராஜாஜி பூங்கா) அல்லாது, நமது சங்க அலுவலகத்திலேயே கூட்டம் நடைபெற்றது குறித்த மகிழ்ச்சியை அனைவரும் வெளிப்படுத்தினர். 

கூட்டத்தில் 30 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். 


Extra Increment CaseThe next hearing will be on  28-09-2018

Message from Circle Secretary Com.RV

A brief Narration about what had happened in the Hon.Court:
Our extra increment case came up for hearing yesterday.
BSNL counsel attended.
There is a change in Govt. Counsel. Old counsel informed the court that new counsel will argue.
Our lawyer argued effectively. Before adjourning the case Hon Judge told old Government  counsel that he should inform the court that whether the case before the Hon High court of Kerala is similar to this case and if so what is the difficulty in implementing that order.
Judge wanted to fix a date next month but due to the intervention of our lawyer the case has been adjourned to 28/9/2018.
We expect that the case may be finalized in the next hearing.
R.Venkatachalam, Circle Secretary.

10 September 2018

தூத்துக்குடித் தோழர்களின் கேரளா வெள்ள நிவாரண நிதிதூத்துக்குடித் தோழர்களின் கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. எட்டாயிரம் AIBSNLPWA, Kerala Circle accountல் 10-09-2018 வரை மூன்று தவணையாகச் சேர்க்கப்பட்டுவிட்டது.

தூத்துக்குடித் தோழர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி!

08 September 2018

Happy Wedding - All are invited

   Shri.S.Manikandan S/o. N.Solaiappan, TM (Retd.) Tuticorin.

Dear Comrades
Puri - Chennai Express train Number 22859 has been cancelled due to unavoidable Circumstances. Inconvenience is deeply regretted.
Those who have booked their return tickets on this express train has to reserve there tickets in some other train. Kindly act swiftly and book your return tickets.
Our Conference is on 22-09-2018 and 23-09-2018. So tickets on 24-09-2018 can be booked from KhurdaRoad Junction to Chennai.
Puri and Khurda Road Junction are 47 km apart and there are a lot of trains running between the two points.
You can book return by flight also.
Message very timely conveyed by Circle President Com.V.Ramarao.  

Note:- All the Tuticorin comrades have booked their return ticket on 24-09-2018 at Bhubaneswar-Kanyakumari Express, and they need not worry.

04 September 2018

Monthly Meeting - September 2018


Note: The commencement time of the meeting was wrongly given previously and it may kindly be excused. The correct time is 10:00 AM on 8-9-2018. 

01 September 2018

புதிய முகங்கள் - ஆகஸ்ட், 2018
கடந்த ஆகஸ்ட் மாதம் நமது சங்கத்தில் இணைந்தோர் எழுவரும் ஆயுள் சந்தா உறுப்பினர்கள் என்பது மகிழ்ச்சிக்கு உரிய செய்தி. 

ஜூலை மாத இறுதியில் நமது உறுப்பினர்கள் : 
ஆயுள் சந்தா - 277 பேர்.
ஆண்டுச் சந்தா - 66 பேர்.

இப்போது நம் உறுப்பினர் எண்ணிக்கை : 
 277 + 66 + 7 = 350