தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

20 January 2019

19-01-2019ல் நடைபெற்ற ஜனவரி மாதாந்திரக் கூட்டம்


நமது 
AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின்
 மாதாந்திரக் கூட்டம், 
19-01-2019 அன்று காலை 10:30 மணிக்கு 
 சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 

மாவட்டத் துணைத் தலைவர் திரு.என்.அம்பிகாபதி அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.
கூட்டத்தில் மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜீவானந்தம், , மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா, மாவட்டப் பொருளாளர் எஸ்.பால்சாமி, மா. உதவிப் பொருளாளர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்த விவாதங்களில் பங்கேற்றுப் பேசினர்.

கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின:

1. 249 தோழர்களின் KYP படிவங்கள் ஏற்கனவே அனுப்ப்பியுள்ளோம். மேலும், 79 படிவங்கள் அனுப்புவதற்கு உள்ளது. ஆக, மொத்தம் 328 படிவங்கள் நமது சங்கத்தின் மூலம் தயாராகியுள்ளது.

2. உறுப்பினர் எண்ணிக்கையை உயர்த்தவும், சந்தா தொகையை முழுமையாக வசூல் செய்யவும் வற்புறுத்தப் பட்டது.

3. உறுப்பினர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள் வாட்ஸ்-ஆப்பிலும் இணையதளத்திலும் 1-1-2019 முதல் வெளியிடப்படுகின்றன. மேலும் சிறப்பாகக் கொண்டாட வழிமுறைகள் ஆலோசிக்கப் பட்டன.

4. மருத்துவப் பில்களுக்கான தொகை, செப்டம்பர் 2018 வரை மட்டுமே உறுப்பினர்களுக்குக் கிடைத்ததாகவும் சில தோழர்களுக்கு ஜூலை வரை மட்டுமே கிடைத்துள்ளதாகவும் தகவல் பரிமாறப் பட்டது.

கூட்டத்தில் 19 உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.