தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

14 August 2019

ஆகஸ்டு மாதக் கூட்டம் - 10-08-2019

மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.

கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலர் என்.அம்பிகாபதி, மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜீவானந்தம், மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா , மாவட்ட இணைச் செயலர் எம்.பர்னபாஸ், மாவட்டப் பொருளாளர் எஸ்.பால்சாமி ஆகியோர் விவாதங்களில் சிறப்பாகப் பங்கேற்றுப் பேசினர்.


கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின:

1. 23-07-2019 அன்று நடந்து முடிந்த ஆண்டு விழா பொதுகூட்டத்தின் நிகழ்வுகள் குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டது.

2.  மாநில செயற்குழுக் கூட்டத்திற்கான நன்கொடைகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது சுட்டிக்காட்டப்பட்டது.

3.  தன்னார்வம் கொண்டோர்களை இணைத்து குழுவாகச் சென்று உறுப்பினர்களைச் சந்தித்து நன்கொடை பெறுவதென்று கருத்துகள் கூறப்பட்டன.

4.  மாநிலச் செயற்குழுவின் வரவேற்புக் குழு முதலாவற்றிற்கான உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. 

5. வருகிற சுதந்திர தினத்தை எளிய முறையில் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.

6. வருகிற 20-08-2019 அன்று சங்க அமைப்பு தினத்தைச் சிறப்பாகக்  கொண்டாடப்பட முடிவு செய்யப்பட்டது. 

விவாதங்களில் அனைத்துத் தோழர்களும் சிறப்பாகப் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.