29-09-2019 மற்றும் 30-09-2019 தேதிகளில் தூத்துக்குடி D A திருமண அரங்கில் தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இனிதே நடைபெற்றது. நிகழ்வுகள் நிழற்படத் தொகுப்பாக :
இந்திய தேசியக் கொடியினை மாநிலத் தலைவர் தோழர். V.ராமராவ் ஏற்றிவைத்தார்.
அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கக் கொடியினை தூத்துக்குடியின் மூத்த தோழர் வி.கிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.
மாநிலச் செயற்குழுக் கூட்டத்தின் தலைவர் தோழர் வி.ராமராவ் கூட்ட நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.
தோழர் என்.எஸ்.தீனதயாளன், மாநில உதவிச் செயலர், அஞ்சலி உரை ஆற்றினார்.
மாநில உதவிச் செயலர் என்.அம்பிகாபதி வரவேற்புரையாற்றினார்.
அகில இந்திய துணைச்செயலர் தோழர் கே.முத்தியாலு தொடக்க உரையாற்றினார்.
அகில இந்திய துணைத் தலைவர் தோழர் டி.கோபாலகிருஷ்ணன் தமிழ்நாடு CCA திரு.சித்தரஞ்சன் பிரதான் அவர்களை வரவேற்றுச் சிறப்புரையாற்றினார்.
தமிழ்நாடு தொலைத்தொடர்பு CCA திரு.சித்தரஞ்சன் பிரதான் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.