தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

26 May 2019

பென்சனுக்கு வரி விதிப்பதை எதிர்த்து ஒருசொல் : 

பென்சனர்களுக்கு நேரடி வரி விதிப்பு பற்றி பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை கர்நாடக P&T பென்சனர் சங்க பொதுச் செயலரும், SCOVA அமைப்பின் உறுப்பினருமான தோழர் k. B.கிருஷ்ணராவ் அவர்களிடம் கருத்து,ஆலோசனைகளை கேட்டுள்ளது.

இதுபற்றி வருமானத்துறையிடம் பட்ஜெட் உருவாக்கத்தில் வைப்பதற்கு உதவும் என கேட்கப்பட்டுள்ளது. தோழர்.கிருஷ்ணாராவ் அவர்கள் நமது AIBSNLPWA சங்கத்திடம் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கேட்டுள்ளார். நமது சங்கமும் கீழ்கண்ட ஆலோசனைகளையும்அதற்கான காரணங்களையும் தெரிவித்துள்ளது :

ஆலோசனை :
முன்னாள் அரசு ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் அரசே பென்சன் வழங்குவதால் அதற்கு வரி விதிக்கக் கூடாது.

 காரணங்கள் :

1. பென்சன் சம்பளம் அல்ல. அப்படியே சம்பளமாக கருதப்பட்டாலும், அது தரப்பட வேண்டிய பட்டுவாடாவே என நீதிமன்றம் கருதியது. காலதாமதப்படுத்தப்பட்ட நிலுவை சம்பளம் அல்லது பென்சன் பட்டுவாடா செய்யும்போது ஊழியர் தம் படிவம் 10E - ன் படி . குறிப்பிட்ட வருடத்திற்கான ஆய்வின் மொத்த தொகையையும் கணக்கிடுவது கிடையாது.

 2. முன்னாள் MP-க்கள், அவர்களது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் பென்சனுக்கு வரி கிடையாது. ஏனென்றால் " பென்சன் சம்பளம் அல்ல, இதர வழியாக (other sources) கிடைக்கும் வருமானம்,, என கருதப்படுகிறது. இதர வழியாக(othersources) என்பது ஒன்றுமில்லை, அரசு நிதியிலிருந்து தான் தரப்படுகிறது. இந்திய அரசு, அரசின் நிதியிலிருந்து தான் அவர்களுக்கு பென்சன் தரப்படுகிறதே ஒழிய, அவர்களை தேர்வு செய்த மக்களிடமிருந்து அல்ல. அவ்வாறேஅவர்களின் குடும்பத்தினருக்கு குடும்ப ஓய் வூதியத்தை இந்திய அரசு தான் வழங்குகிறது'அதே சமயம், பதவியில் உள்ள MP-க்கள் Ex-MP-க்களுக்கும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், மருத்துவ சலுகைகள் CGHS மூலம் மத்திய அரசு ஊழியர்கள், பென்சனர்களுக்கு நிகரான சலுகைகள் தரப்படுகிறது. முன்னாள் MP, மற்றும் அவர்களது குடும்பத்தினர்களுக்கு வழங்கப்படும் பென்சனுக்கு வரி விதிக்காத பட்சத்தில், அதேஅரசில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் அவர்களது குடும்பத்தினர் பெறும் பென்சனுக்கும் வரி விதிப்பது நியாயமில்லை.

 3. பிரேசில், ரஷ்ய கூட்டமைப்பு, இலங்கை மற்றும்USA -வில் உள்ள மாகாணங்களிலும் பென்சனுக்குவரி விதிப்பது கிடையாது .

= தமிழாக்கம்: த.அன்பழகன், மாவட்டச் செயலர்,புதுச்சேரி
Article appearing in CHQ web site is translated in Tamil By DS Pondy.