செப்டம்பர், 2வது சனிக்கிழமை – மாதாந்திரக் கூட்டம்
நமது AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் மாதாந்திரக் கூட்டம், 08-09-2018 அன்று காலை 10:30 மணிக்கு நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார். கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலர் என்.அம்பிகாபதி, மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா, மா. துணைத் தலைவர் பரமசிவம், மா. இணைச் செயலர் எம்.பர்னபாஸ் ஆகியோர் சங்க வளர்ச்சி குறித்த விவாதங்களில் பங்கேற்றுப் பேசினர்.
கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின.
1. பூரி அகில இந்திய மாநாட்டில் நமது தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் சார்பாகக் கலந்துகொள்ளும் 12 உறுப்பினர்களின் பொறுப்பும், மாநாட்டின்மீதான நமது எதிர்பார்ப்புகளும் குறித்து விவாதிக்கப் பட்டன.
2. உங்கள் ஓய்வூதியரை அறிந்துகொள்ளுங்கள் (KYP) விண்ணப்பங்கள் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் – இதுவரை வரப்பெற்றுள்ள 220 விண்ணப்பங்கள் முறையாகப் பரிசீலிக்கப் பெற்று, CCA, சென்னை அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கப்படும்.
3. ரசீது அல்லாத மருத்துவப்படி (without voucher medical allowance) விண்ணப்பங்கள் இதுவரை சமர்ப்பிக்காத உறுப்பினர்களைக் கண்டறிந்து, விண்ணப்பங்களை விரைவில் பொதுமேலாளர், தூத்துக்குடி அலுவலகத்தில் கொடுக்க முயற்சி மேற்கொள்வது.
4. 18-09-2018 அன்று சென்னையில் அதாலத் கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில் மாவட்டத் தலைவர் கலந்து கொள்வதாகக் கூறியிருக்கிறார்.
இந்த முறை, பொது இடத்தில்(ராஜாஜி பூங்கா) அல்லாது, நமது சங்க அலுவலகத்திலேயே கூட்டம் நடைபெற்றது குறித்த மகிழ்ச்சியை அனைவரும் வெளிப்படுத்தினர்.
கூட்டத்தில் 30 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.