தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

18 September 2018

பூரி, அகில இந்திய மாநாட்டில் நமது செயலாக்கம்



இதோ, ஜகன்னாத் பிரபுவின் புனிதத் தலமாம் பூரியை நோக்கிய நமது பயணத்தில், அகில இந்திய மாநாட்டில் ஒருங்கிணைவதற்காகப் புறப்பட்டுவிட்டோம்.

 ‘மத்திய அரசின் ஊதியப் பொருத்த விதியின்படியான ஓய்வூதியப் புதுப்பிப்பு (Pension Revision according to CPC Fitment Formula)’  என்பதே நமது கோரிக்கை. இதனை வென்றெடுப்பதற்கான  அனைத்து முயற்சிகளையும் நம்மோடு இயைந்து வரக் கூடிய பிற சங்கங்களோடு கூட்டாக இணைந்து முன்னெடுத்துச் செல்வோம்.

முன்னர், ஊதிய மாற்றக் குழு (PRC) விதிகளின்படியே ஓய்வூதிய மாற்றம் என்ற நிலைபாட்டை எடுத்த சில சங்களும்கூட, தற்போது, மெய்ம்மையை உணர்ந்து, CPCயின்படியான ஓய்வூதிய  மாற்றத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர் என்பதில் நமக்கு மிக்க மகிழ்ச்சி. ஒன்றுபட்ட போராட்டம் மூலம்  கோரிக்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டியது என்பதுவே காலத்தின் அறிவுறுத்தல்.

எந்ந்நிலையை யார் இதன் முன்னர் எடுத்தனர் என்பது குறித்த சிந்தை நமக்கில்லை.

மிகச் சரியான நமது வழியில் வந்து பலரும் இணைவதில் நமக்குப் பெரும் மகிழ்ச்சியே.

இது எமது வழி, பிறர் வழி  என்பதல்ல கேள்வி; இது சரியான வழி என்பதே மெய்.!

மத்திய ஓய்வூதிய/ஊதியக் குழு விதிப் பொருத்தத்தின்படி (CPC Fitment Formula)  ஓய்வூதிய மாற்றம் செய்…

தொழில்சாலை அகவிலைப்படியின்படியே (IDA) ஓய்வூதிய மாற்றம் செய்...

ஓய்வூதியம் என்பது பிஎஸ்என்எல் ஊதிய மாற்றத்தின்படிதான் என்பதில் இருந்து விடுவித்துவிடு...

பிஎஸ்என்எல்லின் பொருளாதார நிலையிலிருந்து எமது ஓய்வூதியத்தை விடுவித்துவிடு...

எமது ஓய்வூதிய மாற்றத்திற்காக, பிஎஸ்என்எல்லின் முடிவுக்காகக் காத்திருக்க வேண்டிய தேவை   அரசுக்கு இல்லை…

இவற்றை, இன்னும் பிறவற்றை, நமது வருங்கால நடவடிக்கைகளை..
பூரி, அகில இந்திய மாநாடு தீர்மானிக்கும்…. …
===============================================
::: மத்திய நிலைக் குழுவின் (CHQ) ஆங்கிலச் செய்தியின் தமிழாக்கம். :::
===============================================