27 November 2018
CBMPA Joint Memorandum dated 21.11.2018 to DOT Secretary
Committee of BSNL/MTNL Pensioners' Association is formed. The following Letter has been sent to the Secretary, Telecom Mrs. Aruna Sundararajan.
25 November 2018
கஜா புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ வாரீர்!
நேற்று நடைபெற்ற கூட்டு ஆலோசனை கூட்டத்தில் தமிழ் மாநில சங்கம் மற்றும் சென்னை தொலைபேசி மாநில சங்கம் இணைந்து நிதி வசூல் செய்து புயலால் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு நிவாரண நிதி வழங்க ஒருமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் படி தமிழ்மாநில சங்கம் ரூ 50,000/-, வேலூர் மாவட்டம் ரூ 50,000/- , STR சென்னை மாவட்டம் ரூ 40,000/-, கோயம்புத்தூர் மாவட்டம் ரூ 40,000/- , திருநெல்வேலி மாவட்டம் ரூ 30,000/- கடலூர் மாவட்டம் ரூ 25,000/- , திருச்சி மாவட்டம் ரூ 10,000/- அளிப்பதாக தெரிவித்துள்ளன . மற்ற மாவட்ட செயலர்களும் அவசர அவசியம் கருதி தங்கள் மாவட்ட சங்கத்தால் எவ்வளவு ரூபாய் கொடுக்க இயலும் என்று ஓரிரு நாட்களுக்குள் தெரிவித்தால் மாநில சங்கம் உடனடியாக அந்த நிதியினை பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நிவாரணமாக அளிக்க இசைந்துள்ளது. அந்த ஒப்புக்கொண்டுள்ள நிதியை பின்னர் அந்தந்த மாவட்டங்கள் மாநில சங்கத்தின் வங்கிக்கணக்கிற்கு அனுப்பி வைக்க வேண்டும்.
கடந்த வாரம் கஜா புயல் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் , திருவாரூர் , தஞ்சாவூர் , புதுக்கோட்டை ,கடலூர் ,திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத பேரழிவினை ஏற்படுத்தி உள்ளது. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த நெல், தென்னை , வாழை உள்ளிட்ட பயிர்கள் அதிக அளவில் அழிந்துள்ளன.ஏராளமான வீடுகள் , குடிசைகள் , கட்டிடங்கள் இடிந்து போயுள்ளன , சேதமடைந்துள்ளன .கடும் புயலின் கோரத்தாண்டவத்தில் ஏறத்தாழ 100 பேர் பலியாகி விட்டனர். நமக்கு வாழ்வாதாரமாக இருந்த ஆடு, மாடு போன்ற உயிரினங்கள் பலியாகி உள்ளன. பல மீன்பிடி படகுகள் சேதமடைந்துள்ளன.ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்து அடிப்படை மின் வசதிகள் முற்றிலும் முடங்கிப்போய் உள்ளது. உண்ண உணவின்றி , குடிக்க நீரின்றி தவித்து வருகின்றனர் இங்கு வாழ்ந்து வரும் மக்கள்.
இந்தப் பேரழிவில் சிக்கித் தவித்துக்கொண்டிருப்பவர்களுக்கு நமது ஓய்வூதியர் நல சங்கத்தின் சார்பில் உடனடியாக உதவுகின்ற வகையில் நிவாரண நிதி வழங்க வேண்டுமென்று , ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் முடிவடைந்த பிறகு தமிழ்நாடு , சென்னை தொலைபேசி மாநிலம் மற்றும் சில மத்திய சங்க நிர்வாகிகள் கலந்து ஆலோசித்து நிதி உதவி வழங்க அறைகூவல் விடுவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே மாவட்ட செயலர்கள், சென்னை தொலைபேசி மாநில கிளை செயலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இவ்வார இறுதிக்குள் நிவாரண நிதியை மாநில சங்கங்களுக்கு அனுப்பி வைக்க அன்புடன் அறைகூவல் விடுக்கிறோம்.
பாதிக்கப்பட்டோரின் விழி நீரைத் துடைக்க , இரு கரம் நீட்டுவோம்.
அவர்தம் துயர் நீக்க அள்ளித்தருவோம் வெள்ளிப்பணத்தை.
தோழமையுள்ள
ஆர்.வெங்கடாசலம் , எஸ். தங்கராஜ்.
மாநில செயலர்கள்.
22 November 2018
உண்ணாவிரதம் - 22/11/2018 - வாழ்த்துரை
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை வாழ்த்திப் பேசிய மாவட்டப் பொருளாளர் எஸ். பால்சாமி.
நன்றியுரையாற்றிய மாவட்டச் செயலர் எஸ். சுப்பையா :-
போராட்டத்தை முடித்து வைத்த இணைச் செயலர் கே.சித்திக் உமர்
Fast on 22/11/2018 started
அகில இந்திய BSNL ஓய்வூதியர் சங்கத்தின் மத்தியச் செயலகத்தின் அறைகூவலை ஏற்று, தூத்துக்குடி மாவட்டத்தில், மாவட்டத் தலைவர்.எல்.தாமஸ் தலைமையேற்க, திரு.எம்.ஜீவானந்தம், எஸ்.பால்சாமி, எஸ்.சுப்பையா ஆகியோர் முன்னிலை வகிக்க மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கியது.
தூத்துதுக்குடி பொது மேலாளர் அலுவலகத்தின் முன்பு காலை 10:00 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. 81 தோழர்கள் இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தலைமை : எல். தாமஸ், மா. தலைவர்:-
தூத்துதுக்குடி பொது மேலாளர் அலுவலகத்தின் முன்பு காலை 10:00 மணிக்கு உண்ணாவிரதம் தொடங்கியது. 81 தோழர்கள் இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
தலைமை : எல். தாமஸ், மா. தலைவர்:-
தொடக்க உரை : எம். பர்னபாஸ், மா.இணைச் செயலர்:-
15 November 2018
13 November 2018
Submission of Life Certificate - Procedures - a clarification
What are the three ways that a pensioner can submit his/her Life Certificate?
What are the procedures to be adopted by the drawal Branch, viz., Bank/Post Office, when the pensioner could not personally appear because of serious illness or in-capacitance.?
Can a Bank/Post Office insist a pensioner to appear personally before him?
All the above questions are clarified!
Click here to read the letter dated 23-10-2018 issued by CPAO to the CPPC/Department.

12 November 2018
அன்னாரது மறைவு குறித்த அஞ்சலி கூட்டம் இன்று காலை 1100 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அவரது மறைவு குறித்த இரங்கற் செய்தியை மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் அறிவித்தார்கள். திரு.H.N.அனந்த்குமார் அவர்கள் தந்த பேருதவியின் பயனால் நமக்குக் கிடைத்த 78.2% ஓய்வூதிய இணைப்பையும், 60:40 என்ற தடைக்கல் உடைந்ததையும், மாநில உதவிச் செயலாளர் திரு.என்.அம்பிகாபதி அவர்கள் நன்றியோடு நினைவு கூர்ந்து உரையாற்றினார்கள்.
அன்னாரது மறைவுக்கு தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் சார்பாக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப் பெற்றது.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக!
05 November 2018
Life Certificate - Submission
Please donot forget to submit your Life Certificate during November 2018
1. Pension drawal branch , ie., Bank/ Post Office - for pension drawal purpose.
2. Land-Line Telephone utility. Form to be submitted to the GM, BSNL.
Note: - Both the forms are available at this site for download under the TAB "Forms" .

04 November 2018
2-11-2018 அன்று DOT செயலருடன் AUAB அனைத்துச் சங்கத் தலைவர்கள் சந்திப்பு
DOT செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்களுடன் 02/11/2018 அன்று AUAB அனைத்து சங்கத்தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
DOT மற்றும் BSNL உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
அவருடன் நடைபெற்ற சந்திப்பின்போது 24/02/2018 அன்று இலாக்கா அமைச்சர் தொழிற்சங்கங்களிடம் அளித்த உறுதிமொழிகள் ஒன்று கூட DOTயால் பரிசீலிக்கப்படவில்லை என்பதை கூட்டமைப்புத் தலைவர்கள் அழுத்தமாக சுட்டிக்காட்டினர்.
DOTயின் பாராமுகம் காரணமாகவே அனைத்து தொழிற்சங்க அமைப்பு தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன:
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன்பாக ஊதியமாற்றம் அமுல்படுத்தப்பட வேண்டும் என அனைத்து சங்க கூட்டமைப்பு கோரிக்கை எழுப்பியது.
ஊதிய மாற்றம் சம்பந்தமாக சில கேள்விகளை BSNL நிர்வாகத்திடம் DOT எழுப்பியுள்ளதாகவும்… உரிய பதில் வந்தடைந்த பின்பு…
ஊதியமாற்றம் அமுல்படுத்துவது சம்பந்தமான முன்மொழிவு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைச்செயலருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும்… DOT செயலர் உறுதியளித்துள்ளார்.
BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக அமைச்சர்கள் உபகுழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு என்னும் நமது நீண்ட நாள் கோரிக்கை சாதகமாக பரிந்துரைக்கப்பட்டு DOE என்னும் செலவின இலாக்காவின் பரிசீலனைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படும் ஓய்வூதிய மாற்றத்தை ஊதியமாற்றத்துடன் முடிச்சுப்போடும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை DOT செயலரால் செவிமடுத்து கேட்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தன்னுடன் விவாதிப்பதற்கு MEMBER(SERVICES) அவர்களை DOT செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பங்களிப்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் மீது BSNL நிர்வாகமே முடிவெடுக்கலாம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நமது CMD கூடுதலாக 2 சதம் ஓய்வூதியப்பங்களிப்பை உயர்த்துவதற்கு இசைவு தெரிவித்துள்ளார்.
DOT செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்கள், தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் எதிர்மறையாக நடந்து கொள்பவர் என்பதுவும் அவர் தொழிற்சங்கங்களை சந்திப்பதில்லை.. மதிப்பதில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் 02/11/2018 அன்று நடந்த கூட்டத்தில் நேர்மறையாகப் பிரச்சினைகளை கையாண்டுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது.
முக்கியப் பிரச்சினையான 3வது ஊதியமாற்றம் தவிர ஏனைய பிரச்சினைகளான, 4G ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதியப் பங்களிப்பு ஆகிய பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில்.. DOT செயலருடனான சந்திப்பு
4க்கு3 பழுதில்லை என்ற வகையில் அமைந்துள்ளது.
::: நன்றி காரைக்குடி NFTE இணையதளம் ::

02 November 2018
Nation-wide day-long fast on 22/11/2018 - Notice to DOT Secretary
ALL INDIA BSNL PENSIONER'S WELFARE ASSOCIATION
Central Head Quarters [ Regd. No. T 1833/09 ]
H. No 6, G No 12th Street, Jogupalya, Halasuru, Bangalore 560008
email: bsnlpensioner@gmail.com
Website: ww.bsnlpensioner.in
President: P S Ramankutty
General Secretary: P Gangadhara Rao
Phone: 9447551555
Phone: 9448088404
Date: 30/10/2018
To
Smt. Aruna Sundararajan,
Secretary (Telecom),
Sanchar Bhawan,
20, Asoka Road,
New Delhi-110001
Respected Madam,
Sub: Nation-wide day-long fast on 22/11/2018 by the pensioners intimation – reg
We have been demanding pension revision, for those who retired from BSNL/MTNL, covered under CCS (Pension) Rules 1972. The demand is simple viz. Existing pension plus Dearness Relief as on 1/1/2017 plus 32% weightage (of basic pension) as recommended by 7th CPC and implemented to 62 lakh C.G. pensioners. C.G. pensioners got the benefit nearly 2 years back. We have written more than dozen letters on the subject. We met Hon. MoC on 12/9/2017, present Secretary (T) twice during November 17 and March 18 and explained the demand in person. Asper the decision of our Central Working Committee, we conducted nationwide ‘demonstration’ on 20/6/18 & ‘dharna’ on 18/7/18, passed resolutions and sent to Hon. Prime Minister, Hon. MoC & Secretary (T).
Despite all these efforts, DoT has not even prepared the Cabinet Note for circulation among the nodal departments. Pensioners have become restive. So, our AIC, held at Puri in September 18, decided to organize a nation-wide fast on 22/11/18. Pensioners at the age of 80+, 70+ are forced to sit on hunger fast because of the inordinate delay. The fast will be held in front of Corporate office/CGM/PGM/GM, BSNL & CCA offices throughout the country. We earnestly request you, madam, to take necessary action for getting the approval of the cabinet for pension revision without further loss of time.
Thanking you
Yours faithfully,
(P.Gangadhara Rao)
General Secretary.

01 November 2018
மாநிலச் செயலரின் வாட்ஸ்-அப் செய்தி
மாநிலச் செயலரின் வணக்கம்!
நமது பொதுச்செயலர் தோழர் கங்காதரராவ் ஆலோசனையின் படி நமது மாநிலத்திற்கு சிஇ சி டிஎன் என்ற புதிய வாட்ஸ்-அப் உருவாக்கபட்டுள்ளது. 26 10 18 அன்று நடை பெற்ற மாநிலச் செயலக முடிவின் படி இதன் பொறுப்பாளராக (அட்மின் ) மாநில உதவிச் செயலாளர் தோழர். சுந்தர கிருஷ்ணன் இருப்பார். இதில் மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தமிழ்மாநிலத்தில் உள்ள மத்தியச் சங்க நிர்வாகிகள் உள்ளடக்கம். இதே போன்று மாவட்ட மட்டத்திலும் மாவட்ட சங்க நிர்வாகிகள், மாநில செயலாளர், உங்கள் மாவட்டத்தில் உள்ள மாநில சங்கபொறுப்பளர்கள் உள்ளடக்கிய ஒரு புது வாட்ஸ்-அப் உருவாக்க வேண்டும். மத்திய சங்க மற்றும் மாநில சங்க செய்திகள் தவிர மற்றவை இடம்பெறாது.மாநில செயலக முடிவுகள்:
1. 22.11.18 அன்று ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த பென்ஷன் பலன்கள் நமக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள சி சி ஏ அலுவலக வளாகத்தில் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தோடு இணைந்து சரியாகக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
உண்ணாவிரதத்தை அ. இந்திய துணை பொதுசெயலாளர் தோழர் முத்தியாலு துவக்கி வைப்பார். அகில இந்திய பென்ஷனர் சம்மேளனத்தின் (எ ஐ எப் பி எ ) பொதுச்செயலாளர் தோழர் பால சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி முடித்து வைப்பார். நமது தலைவர்கள் டி ஜி, ஜி. நடராஜன், விட்டோபன், மற்றும் இரண்டு மாநில சங்க நிர்வாகிகள் உரையாற்றுவர். போராட்டம் பற்றிய தட்டிகள் தமிழ் நாடு, சென்னை தொலைபேசி தலைமை பொதுமேலாளர் அலுவலங்கங்கள்,
சி சி ஏ, ஆர் கே நகர் பி சி சி ஏ அலுவலகங்கள், பூக்கடை தொலைபேசி நிலைய வளாகங்களில் வைக்கப்படும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இதேபோன்று ஏற்பாடுகளைச் செய்ய ஆயத்தம் ஆவீர். மாநில சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்வீர்.
2. 17.12.18 "பென்ஷனர் தினத்தை" எல்லா இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
3. 2019 மார்ச் 15&16 தேதிகளில் மாநில செயற்குழுவை சிறப்பாக நடத்த குடந்தை மாவட்டசங்கம் பொறுப்பு ஏற்று கொண்டுள்ளது.
4.ஓய்வூதியர்கள் அனைவரும் இம்மாதம் லைப் சர்டிபிகேட்டை வங்கி / அஞ்சலங்களில் தவறாமல் தர வேண்டும்.
5.அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ஆர். வீ.
மாநில செயலாளர். 1 11.18
CHQ on Proposed Direct Payment of Pension
CHQ writes to Hon.Minister for Communications on Direct Payment of Pension by CCAs
Click to view details
Subscribe to:
Posts (Atom)