தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

04 November 2018

2-11-2018 அன்று DOT செயலருடன் AUAB அனைத்துச் சங்கத் தலைவர்கள் சந்திப்பு

DOT செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்களுடன் 02/11/2018 அன்று AUAB அனைத்து சங்கத்தலைவர்களின் சந்திப்பு நடைபெற்றது.
DOT மற்றும் BSNL உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்டனர்.
அவருடன் நடைபெற்ற சந்திப்பின்போது 24/02/2018 அன்று இலாக்கா அமைச்சர் தொழிற்சங்கங்களிடம் அளித்த உறுதிமொழிகள் ஒன்று கூட DOTயால் பரிசீலிக்கப்படவில்லை என்பதை கூட்டமைப்புத் தலைவர்கள் அழுத்தமாக சுட்டிக்காட்டினர்.
DOTயின் பாராமுகம் காரணமாகவே அனைத்து தொழிற்சங்க அமைப்பு   தொடர் போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது என்பதுவும் சுட்டிக்காட்டப்பட்டது.
கீழ்க்கண்ட பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன:
விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அதற்கு முன்பாக ஊதியமாற்றம் அமுல்படுத்தப்பட வேண்டும் என அனைத்து சங்க கூட்டமைப்பு கோரிக்கை எழுப்பியது.
ஊதிய மாற்றம் சம்பந்தமாக சில கேள்விகளை BSNL நிர்வாகத்திடம் DOT எழுப்பியுள்ளதாகவும்… உரிய பதில் வந்தடைந்த பின்பு…
ஊதியமாற்றம் அமுல்படுத்துவது சம்பந்தமான முன்மொழிவு இம்மாத இறுதிக்குள் அமைச்சரவைச்செயலருக்கு அனுப்பி வைக்கப்படும்  எனவும்… DOT செயலர் உறுதியளித்துள்ளார்.
BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்வது சம்பந்தமாக அமைச்சர்கள் உபகுழுக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு என்னும் நமது நீண்ட நாள் கோரிக்கை சாதகமாக பரிந்துரைக்கப்பட்டு DOE என்னும் செலவின இலாக்காவின் பரிசீலனைக்கு ஒரு வார காலத்திற்குள் அனுப்பி வைக்கப்படும் ஓய்வூதிய மாற்றத்தை ஊதியமாற்றத்துடன் முடிச்சுப்போடும் நடைமுறையை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை DOT செயலரால் செவிமடுத்து கேட்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக தன்னுடன் விவாதிப்பதற்கு MEMBER(SERVICES) அவர்களை DOT செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.

BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு ஓய்வூதியப் பங்களிப்பு உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் மீது BSNL நிர்வாகமே முடிவெடுக்கலாம் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. நமது CMD கூடுதலாக 2 சதம் ஓய்வூதியப்பங்களிப்பை  உயர்த்துவதற்கு இசைவு தெரிவித்துள்ளார்.
  DOT செயலர் அருணா சுந்தர்ராஜன் அவர்கள், தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் எதிர்மறையாக நடந்து கொள்பவர் என்பதுவும்  அவர் தொழிற்சங்கங்களை சந்திப்பதில்லை.. மதிப்பதில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது. ஆயினும் 02/11/2018 அன்று நடந்த கூட்டத்தில் நேர்மறையாகப் பிரச்சினைகளை கையாண்டுள்ளார் என்பது வரவேற்கத்தக்கது.
முக்கியப் பிரச்சினையான  3வது ஊதியமாற்றம் தவிர ஏனைய பிரச்சினைகளான, 4G ஒதுக்கீடு, ஓய்வூதிய மாற்றம், ஓய்வூதியப் பங்களிப்பு ஆகிய பிரச்சினைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில்.. DOT செயலருடனான சந்திப்பு
4க்கு3   பழுதில்லை என்ற வகையில் அமைந்துள்ளது.

::: நன்றி காரைக்குடி NFTE இணையதளம் ::