மாநிலச் செயலரின் வணக்கம்!
நமது பொதுச்செயலர் தோழர் கங்காதரராவ் ஆலோசனையின் படி நமது மாநிலத்திற்கு சிஇ சி டிஎன் என்ற புதிய வாட்ஸ்-அப் உருவாக்கபட்டுள்ளது. 26 10 18 அன்று நடை பெற்ற மாநிலச் செயலக முடிவின் படி இதன் பொறுப்பாளராக (அட்மின் ) மாநில உதவிச் செயலாளர் தோழர். சுந்தர கிருஷ்ணன் இருப்பார். இதில் மாநிலச் சங்க நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தமிழ்மாநிலத்தில் உள்ள மத்தியச் சங்க நிர்வாகிகள் உள்ளடக்கம். இதே போன்று மாவட்ட மட்டத்திலும் மாவட்ட சங்க நிர்வாகிகள், மாநில செயலாளர், உங்கள் மாவட்டத்தில் உள்ள மாநில சங்கபொறுப்பளர்கள் உள்ளடக்கிய ஒரு புது வாட்ஸ்-அப் உருவாக்க வேண்டும். மத்திய சங்க மற்றும் மாநில சங்க செய்திகள் தவிர மற்றவை இடம்பெறாது.மாநில செயலக முடிவுகள்:
1. 22.11.18 அன்று ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்த பென்ஷன் பலன்கள் நமக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, சென்னை எத்திராஜ் சாலையில் உள்ள சி சி ஏ அலுவலக வளாகத்தில் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தோடு இணைந்து சரியாகக் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்.
உண்ணாவிரதத்தை அ. இந்திய துணை பொதுசெயலாளர் தோழர் முத்தியாலு துவக்கி வைப்பார். அகில இந்திய பென்ஷனர் சம்மேளனத்தின் (எ ஐ எப் பி எ ) பொதுச்செயலாளர் தோழர் பால சுப்ரமணியன் கோரிக்கைகளை விளக்கி முடித்து வைப்பார். நமது தலைவர்கள் டி ஜி, ஜி. நடராஜன், விட்டோபன், மற்றும் இரண்டு மாநில சங்க நிர்வாகிகள் உரையாற்றுவர். போராட்டம் பற்றிய தட்டிகள் தமிழ் நாடு, சென்னை தொலைபேசி தலைமை பொதுமேலாளர் அலுவலங்கங்கள்,
சி சி ஏ, ஆர் கே நகர் பி சி சி ஏ அலுவலகங்கள், பூக்கடை தொலைபேசி நிலைய வளாகங்களில் வைக்கப்படும். அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் இதேபோன்று ஏற்பாடுகளைச் செய்ய ஆயத்தம் ஆவீர். மாநில சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பயன்படுத்திக் கொள்வீர்.
2. 17.12.18 "பென்ஷனர் தினத்தை" எல்லா இடங்களிலும் சிறப்பாகக் கொண்டாடுங்கள்.
3. 2019 மார்ச் 15&16 தேதிகளில் மாநில செயற்குழுவை சிறப்பாக நடத்த குடந்தை மாவட்டசங்கம் பொறுப்பு ஏற்று கொண்டுள்ளது.
4.ஓய்வூதியர்கள் அனைவரும் இம்மாதம் லைப் சர்டிபிகேட்டை வங்கி / அஞ்சலங்களில் தவறாமல் தர வேண்டும்.
5.அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.
ஆர். வீ.
மாநில செயலாளர். 1 11.18