அன்னாரது மறைவு குறித்த அஞ்சலி கூட்டம் இன்று காலை 1100 மணிக்கு நமது சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. அவரது மறைவு குறித்த இரங்கற் செய்தியை மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் அறிவித்தார்கள். திரு.H.N.அனந்த்குமார் அவர்கள் தந்த பேருதவியின் பயனால் நமக்குக் கிடைத்த 78.2% ஓய்வூதிய இணைப்பையும், 60:40 என்ற தடைக்கல் உடைந்ததையும், மாநில உதவிச் செயலாளர் திரு.என்.அம்பிகாபதி அவர்கள் நன்றியோடு நினைவு கூர்ந்து உரையாற்றினார்கள்.
அன்னாரது மறைவுக்கு தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் சார்பாக இரண்டு நிமிடம் அஞ்சலி செலுத்தப் பெற்றது.
அன்னாரது ஆன்மா சாந்தி அடைவதாக!