தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

13 December 2019


26 October 2019

தீபாவளி வாழ்த்துகள்!


அனைவருக்கும் AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டக் கிளையின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!

08 October 2019

IDA ORDER RELEASED

From 1st October 2019, IDA has been increased by 5.3% . Now total IDA from 01-10-2019 is 152%. The IDA increase order has been released and the same has been posted here under.

02 October 2019

தமிழ் மாநில செயற்குழுக் கூட்டம் - கலந்து கொண்டவர்கள்




Click this Link to view all photos of participants

தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் - தூத்துக்குடி, நாள்:29, 30-09-2019

29-09-2019 மற்றும் 30-09-2019 தேதிகளில் தூத்துக்குடி D A திருமண அரங்கில் தமிழ் மாநிலச் செயற்குழுக் கூட்டம் இனிதே நடைபெற்றது. நிகழ்வுகள் நிழற்படத் தொகுப்பாக :
இந்திய தேசியக் கொடியினை மாநிலத் தலைவர் தோழர். V.ராமராவ் ஏற்றிவைத்தார்.


அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச்சங்கக் கொடியினை தூத்துக்குடியின் மூத்த தோழர் வி.கிருஷ்ணன் ஏற்றி வைத்தார்.


மாநிலச் செயற்குழுக் கூட்டத்தின் தலைவர் தோழர் வி.ராமராவ் கூட்ட நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.


தோழர் என்.எஸ்.தீனதயாளன், மாநில உதவிச் செயலர்,  அஞ்சலி உரை ஆற்றினார்.


மாநில உதவிச் செயலர் என்.அம்பிகாபதி வரவேற்புரையாற்றினார்.


அகில இந்திய துணைச்செயலர் தோழர் கே.முத்தியாலு தொடக்க உரையாற்றினார்.


அகில இந்திய துணைத் தலைவர் தோழர் டி.கோபாலகிருஷ்ணன் தமிழ்நாடு CCA திரு.சித்தரஞ்சன் பிரதான் அவர்களை வரவேற்றுச் சிறப்புரையாற்றினார்.


தமிழ்நாடு தொலைத்தொடர்பு CCA திரு.சித்தரஞ்சன் பிரதான் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.


14 September 2019







10 September 2019




CEC INVITATION

Today (10-09-2019) We met CCA Sri. Chittaranjan Pradhan Ji and presented our Tamilnadu Executive Committee meeting to be held on 29th and 30th September 2019 in Tuticorin. The CCA has heartily accepted our invitation and has given his consent to grace the Meeting. During the brief meeting Com. V.Ramarao, Circle President, Com. R.Venkatachalam, Circle secretary and Com. S.Sundarakrishnan, Assistant Circle secretary were present. With Fraternal Greetins, R.Venkatachalam. Circle Secretary.


07 September 2019

Extra Increment Case

Today it was listed in the last at serial 59.
Our lawyer discussed with Government counsel for early finalisation of the case.
Government counsel said that he is not getting  any proper instructions from the department despite many trials. Hence he told that he is not going to ask for any more adjournments. He told that the case will not come up today and we both can request the bench to list it by last week of this month and place it at the top for final orders.

Finally it would be decided 
by this month end
 and we expect a favourable decision.

The affected pensioners are requested to continue the patience for few more days.

We will inform the exact date later

Today Com A. Sukumaran and myself attended the court.
R Venkatachalam CS

03 September 2019

கோவையில் தோழர் DG அவர்களின் சிறப்புரை

AIBSNLPWA அமைப்பு தினம் - கோவை



திரு DG அகில இந்திய துணை தலைவர் சிறப்புரை
கோவை கிளை 1000 என்ற இலக்குக்கு மிக அருகில்.
இதற்கு உறுதுணை புரிந்த சங்க நிர்வாகிகளை பாராட்டினார்.
2009 ல் சங்கம் அமைக்கும் போது நடந்த நிகழ்வுகளை விவரித்தார்.
கட்சி,சங்க,கேடர் பேதமில்லாமல் இன்று 73000 உறுப்பினர்கள் (43000 ஆயுள் ,30000 ஆண்டு உறுப்பினர் கள்)

பிரேசில் நாட்டில் ஒரு மசோதா மூலம் வழங்கப்படும் பென்ஸன் பற்றிய சில விதிகள் மாற்றிட முயன்றார்கள்.
25 வருடம் பென்ஸன் காண்ட்ரிப்யூட்டின் இருந்தால் மட்டும் முழு பென்ஸன் .
குடும்ப ஓய்வூதியம் குறைப்பு.
70க்கு மேல் மட்டும் பென்ஸன் .
கூட் டனி ஆட்சி 60 % உறுப்பினர் ஆதரவு கிடைக்க வில்லை.
2018 தேர்தல் காரணமாய் மசோதா கைவிடப்ட்ட்து.
பென்ஸன் சங்கங்கள் போராட்டம் வெற்றி பெற்றது.

நிகரகுவா நாடும் பென்ஸன் மாற்றம் கொண்டு வர முயன்றது.
சங்கங்கள் போராடி வென்றது.

ரஷ்யாவில் சில மாற்றம்  கொண்டு வர முயன்றது.

ஐரோப்பிய யூனியனில் பென்ஸன் இனி தனியார் கைவசம் .
தொழிலாளர் சட்டங்கள் இப்போது பெரியளவில் மாறிவிட்டது.
எனவே வாங்கும் பெப்ஷனை தொடர்ந்து காத்திட சங்க ஒற்றுமை தேவை .

பென்ஸன் ரிவிஷன் இந்தியாவில் இன்றைய நிலை.

2013 ல் 7 வது சம்பளக் குழு அறிவித்த போது.
நமது பென்ஸன் மாற்றம்
7 வது குழுவின் பரிந்துரை யின் படி அமல் படுத்திட கோரிக்கை வைத்தோம் .

ஓரல் ஏவிடென்ஸ் நமது செயலர் கங்காதரராவ் கொடுக்கும் போது கமிஷன் தலைவர் இது மிக சரியான  கோரிக்கை என்றார் .
2014ல் கமிஷன் டெலிகாம்  இலக்காவிற்கு அனுப்பிய இது பற்றிய கடிதம் 8 மாதம் ஆகிய பிறகு 2015 ல்  டி ஓ டி பதில் அனுப்பியது.
இது பற்றிய முடிவு டி ஓ பி ஆர் தான் எடுக்க வேண்டும் .
என்று பதில் தந்து.8 மாத இடைவெளியில் பே கமிஷன் பரித்துறைகள் அரசக்கு கொடுத்து விட்ட்து.

இதன் பிறகு பல வகை போராட்டம் நடத்திய பிறகும் நமது கோரிக்கை நிறை வேறா சூழல் .
இதன் பின்னர் பிற சங்கங்களுடன் சேர்ந்து ஒரு கூட்டு குழு அமைக்கப்பட்டது.
தோழர் நம்பூதிரி இடம் தோழர் பக்ஷி பேசி பார்த்தும் பலன் இல்லை.
திரு நடராஜன் தோழர் மிஷரி இடம் பேசியும் பலன் இல்லை
தோழர் பாசுவும் நமது கூட்டத்திற்கு வரவில்லை

நமது கூட்டு குழுவில் இப்போதுப  8 சங்கங்கள் .
தேர்தல் முடிந்ததும்
இப்போது அந்த  பெனஷன் மாற்றம் கோரிக்கை நிறைவேற
திரு ஜோஷி அவர்கள் உதவியுடன் முயற்சிகள்.

டெல்லியில் கடந்த மாதம் இரண்டு முறை அவர்களை சந்தித்தோம்.
டெலிகாம் இணை அமைச் சரை அவர் உதவியுடன் சந்தித்தோம்.
அவர் மனித வள மேம்பாட்டு அமைச்சர்.

இந்த உயர்வு மூலம் ஒருவருக்கு
ரூ 100 க்கு 115 கிடைக்கும் என்று சொன்னோம்.

2ந்தேதி திரு ரவி சங்கர் பிரசாத் அவர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்தார்.
அன்றே மாலை 0600 மணிக்கு சாஸ்திரி பவனில் 6 பேர் சந்தித்தோம்.

என்ன பிரச்சனை என் வினவினார்.பி எஸ் என் எல் நிலையினை சீராக்கிய பிறகுதான்  உங்க  கோரிக்கையினை நிறை வேற்ற  முடியும் என்றார் .
அவரிடம் நம் பிரச்சனை பற்றி விளக்கம் தந்தோம்.

பென்ஸன் மாற்றம் ...அரசுக்கு ஆகும் செலவு ...பயன் படுவோர் பற்றிய தகவல் தந்தோம் .
அவர் வினவிய வினாவுக்கு.பணியில் இருக்கும் பணியாளர் சங்கம்
பென்ஸன் ரிவிஷன் க்கும் பே ரிவிஷன் க்கும் தொடர்பு வேண்டாம்
 என்ற கோரிக்கை வைத்துள்ளார்கள் என்ற  தகவலை  தந்தோம் .

ஆமைச்சர் ஆவன செய்வதாய் சொன்னர்.

இதில் உள்ள சிக்கல் ...
டி லிங்க் பென்ஸன்
மற்றும்
சம்பள மாற்றம்...அலுவலகங்கிடையே நடந்த கடிதங்கள் பரி மாற்றம்  பற்றிய விபரம் தந்தார்.
பென்ஸன் இலாகா மற்றும் டெலிகாம் இலாகா.
0%,5%,10%,15%,7 cpc ...இந்த 5 சிபரிசுக்ள் அனுப்பபட்டு அவர்களின் முடிவு படி பென்ஸன் மாற்றம் வரும் என்றது .

இதன் பிறகு இன்றைக்கு நாம் கொடுத்துள்ள புதிய திட்டம்.
நமது கோரிக்கைகைக்கு  நிரந்தர தீர்வு ஆகும் .

இதன் படி ..01.01.2016 முதல்
( IDA ) ஐ டி ஏ பென்ஸனை ( CDA  )சி டி எ பென்ஸனாக மாற்றும் திடடம்

212.2 ÷ 225....94.4

100 ரூ  IDA  பென்ஸன் என்றால்
 ரூ 94.40 அதற்கு இணையான (CDA) சி டிஏ பென்ஸன் .
இதனை 7 வது குழு பரிந்துரை படி
2.57 .. ஆல்  பெருக்கினால் வருவது
1.1.2016 ல்  புதிய ( REVISION )  படி BASIC PENSION  ஆகும்

இதன் பின் 0 % DA .
அதன் பின் 6 மாதத்திற்கு ஒருமுறை மத்திய அரசு  DA
முறையில் நமக்கு  DA கிடைக்கும்

இந்த புதிய கணக்கீடு முறையின் அடிப்படையில் கணக்கிட்டால்
தோழர் சுகுமாரன்
தோழர் ராமாராவ்
தோழர் DG
இவர்களுக்கு கிடைக்கும் கூடுதல் பற்றிய  தகவல் தந்தார்.

உத்தேசமாய ரூ3000+ முதல் 6000 + வரை கூடுதல் கிடைக்கும்.

1.10.2000, 1.1.2006 ..இவர்களுக்கும்
2016 க்கு பிறகு ஓய்வு பெற்றவர்கள்.
கணக்கீடு பற்றியும்  விளக்கம் தந்தார்.

இதற்கெல்லாம் தனித்தனியாக கணக்கு போட்டு   விளக்கமளித்தார் .
இவர்களுக்கு
1.1.2016 ல் பென்ஸன் கண்கிடப்பட்டு. வழங்கும் முறையினையும் விளக்கினார் .

பென்ஸன் இலாகா இந்த  திட்டம் சரி என்று இருந்தாலும்.
டெலிகாம் இலாகா சொல்வதே நடைபெறும்.

முதலில் டி லிங்க் பண்ண வேண்டும்
இதன் பிறகு பல தடைகள் தாண்ட வேண்டும் .



இதற்கு எதிராய் சில ஓய்வூதியர் சங்கங்கள்  செயல் பட்டு வருகின்றன ,
மீதமுள்ள  3 சங்கங்களுக்கும் கடிதம் (மின் அஞ்சல்) அனுப்பியுள்ளோம்

அதற்கு 15 % பிட்மெண்ட் உடன் பென்ஸன் கோரிக்கை
பி ஆர் சி  பரிந்துரை படி..என
6.7.2019 ல் டெலிகாம் அமைச்சருக்கு திரு மிஸ்த்ரி எழுதிய கடிதம் பற்றி விளக்கினார்.

நமது சங்கம் அரசியல் சார்பு இல்லை என்பதை கூறி
அவர் எழுதிய  கடிதத்தில் உள்ள சில விமர்சனங்களை பற்றி விவரித்தார்.
இந்த சங்கங்களில் உள்ள உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்தார்

விரைவில் பி எஸ் என் எல் லிருந்து
ஒரு லட்சம் பணியாளர்கள் ஓய்வு பெறும் சூழல் நிலவுகிறது

37 a ல் துணை விதியில் (10)  சில மாற்றம் செய்ய வேண்டியுள்ளது.

நமது புதிய திட்டத்திற்கு  பெருவாரியயான  ஓய்வூதியர்கள் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.

இந்த திட்டம் வெற்றி பெற முயற்சிகள் தொடர்கிறது

முன்பு நமது கோரிக்கை நிறை வேறியது போல்
இதனையும் நிறைவேற்ற முயலுவோம்.

நமது சங்கம் மாவட்ட  அளவில். உறுப்பினர் பிரச்சனை களை தீர்க்கும்
முறை தொடர்ந்திட வாழ்த்தினார் .

வட மாநிலங்களில் ஏற்பட்டுள்ள
பெரும் வெள்ள பாதிப்புகளை மக்களின் துயர் துடைத்திட தாரளமாய்  நிதி உதவிட வேண்டினார்...


நன்றி : UTK.
திருமலைக்குமாரசாமி, நெல்லை AIBSNLPWA 


17 August 2019


14 August 2019

Our Next Target


ஆகஸ்டு மாதக் கூட்டம் - 10-08-2019

மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.

கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலர் என்.அம்பிகாபதி, மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜீவானந்தம், மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா , மாவட்ட இணைச் செயலர் எம்.பர்னபாஸ், மாவட்டப் பொருளாளர் எஸ்.பால்சாமி ஆகியோர் விவாதங்களில் சிறப்பாகப் பங்கேற்றுப் பேசினர்.


கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின:

1. 23-07-2019 அன்று நடந்து முடிந்த ஆண்டு விழா பொதுகூட்டத்தின் நிகழ்வுகள் குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டது.

2.  மாநில செயற்குழுக் கூட்டத்திற்கான நன்கொடைகள் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாதது சுட்டிக்காட்டப்பட்டது.

3.  தன்னார்வம் கொண்டோர்களை இணைத்து குழுவாகச் சென்று உறுப்பினர்களைச் சந்தித்து நன்கொடை பெறுவதென்று கருத்துகள் கூறப்பட்டன.

4.  மாநிலச் செயற்குழுவின் வரவேற்புக் குழு முதலாவற்றிற்கான உத்தேசப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. விருப்பமுள்ளவர்கள் மாவட்ட நிர்வாகிகளைத் தொடர்புகொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டது. 

5. வருகிற சுதந்திர தினத்தை எளிய முறையில் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.

6. வருகிற 20-08-2019 அன்று சங்க அமைப்பு தினத்தைச் சிறப்பாகக்  கொண்டாடப்பட முடிவு செய்யப்பட்டது. 

விவாதங்களில் அனைத்துத் தோழர்களும் சிறப்பாகப் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 15 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

10 August 2019

PERMANENT SOLUTION

We want a Permanent solution to the problem, for the benefit of 1.68 lakhs existing pensioners as on 1.1.2016, and 1.65 lakhs future pensioners too.




31 July 2019

7வது சம்பளக் குழு அறிக்கையின்படியான ஓய்வூதிய மாற்றம் = கோரிக்கை விளக்கம்




அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்

 பி எஸ் என் எல்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மத்திய அரசின் consolidate fund of India (Civil estimate) கன்சாலிடெட் பண்டிலிருந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு ஏழாவது சம்பள குழு அறிக்கை படி 1 .1 .2017 முதல் பென்ஷன் மாற்றம் தர வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதை நாம் அறிவோம்.

 பெரும்பாலான ஓயவூதியர் சங்கங்கள் ஏழாவது சம்பளக் குழுவின் அறிக்கைப்படி பென்ஷன் மாற்றம் கேட்கும் நிலையில், ஒரு சில சங்கங்கள் மீண்டும் மீண்டும் பிஎஸ்என்எல் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் வந்த பிறகுதான் பென்ஷன் மாற்றம் வேண்டும் என்ற நிலையில் உள்ளதை நாம் அறிவோம் . (அந்த நண்பர்களுக்கும் விளக்கம் தரும் பதிவுதான் இந்த பதிவு) .

இந்த பதிவு பிஎஸ்என்எல்/ எம்டிஎன்எல் ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு அதனுடைய கன்வீனர் திரு கங்காதரராவ் அவர்களின் அருமையான விளக்கப் பதிவு .

      இது ஒரு நீண்ட பதிவு இதை பொறுமையாக படிக்கவும். *
     இது ஒரு ஆறு பக்கம் உள்ள pdf கோப்பு அதனுடைய ஆங்கில கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. ***
     அதனுடைய சுருக்கம் தமிழில் எளிதாக புரிந்து கொள்ளும் முறையில் உங்கள் பார்வைக்கு ****

பிஎஸ்என்எல் சம்பள மாற்றத்திற்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியம் மாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை :
இதற்கு காரணங்கள்:-

 1.)மத்திய அரசு ஊழியர்களும் பிஎஸ்என்எல்/ எம்டிஎன்எல் இருந்து ஓய்வு பெற்றவர்களும் ccs pension rules 1972 கீழ் வருகிறார்கள்

 2.) அதனுடைய துணைவிதி 8 விதி 37 of ccs pension rules 1972 .... என்ன சொல்கிறது என்றால் ஒரு நிரந்தர அரசு ஊழியர் பின்னாட்களில் பொதுத்துறையில் சேர்க்கப்பட்டால் அவர் அரசு துறையில் பணியாற்றிய காலத்தையும் பொதுத் துறையில் பணியாற்றிய காலத்தையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

 3 .)இந்த விதியின் படி இந்தியாவில் உள்ள பொதுத் துறைகளில் பிஎஸ்என்எல் மட்டுமே இந்த சிறப்பு விதிக்கு கட்டுப்பட்டது .

 4 .) ஆறாவது சம்பளக் குழுவின் பரிந்துரையின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட (DCRG )டி ஸி ஆர் ஜி (பணிக்கொடை) அதனுடைய உச்சவரம்பு அதனுடைய கமுடேஷன் டேபிள். உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் பத்து வருடங்களுக்கு ... 80, 90, 100 வயதைக் கடந்தவர்களுக்கு கொடுக்கப்படும் உயர்ந்த பட்ச பென்சன்(அடிஷனல்,) இது எல்லாம் 1 .1 .2006 முதல் bsnl ida ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட்டதை நாம் அறிவோம்.

 5.)அதேபோல் பிஎஸ்என்எல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் அதிகபட்சம் ஓய்வூதியம் பிஎஸ்என்எல் சம்பளவிகிதம் படி வழங்காமல் (பி எஸ் என் எல் சம்பள விகிதம் அதிகமாய் இருந்தாலும் )மத்திய அரசின் சம்பள விதிகப்படி குறைத்து வழங்கப்பட்டுள்ளது.

 6.)மத்திய அரசு ஓய்வூதியர்களும் பிஎஸ்என்எல்/ எம்டிஎன்எல் ஓய்வூதியர்களும் பென்ஷன் பெறுவது சி வில் எஸ்டிமேட்டில் இருந்து .

 7 .)மத்திய அரசு ஓய்வூதியர்களும் பிஎஸ்என்எல் எங்கள் ஓய்வூதியர்களும் மத்திய அரசு மத்திய அரசு மருத்துவ திட்டங்களின் உறுப்பினர்கள். (Central Govt Health Services )

 8 .)இவர்களின் ஓய்வு ஊதியம் மத்திய அரசின் நிதியிலிருந்து கொடுக்கப்படுவதால் பிஎஸ்என்எல்/எம் டி என் எல் நிதி நிலைமைக்கும் பென்ஷன் வழங்குவதற்கும் சம்பந்தமில்லை.

 9 .)2000 ல் பிஎஸ்என்எல் உருவாக்கும்போது சேர்க்கப்பட்ட அலுவலர்கள், அதிகாரிகள் அத்தனை பேரும் 2026ல் ஓய்வு பெற்று விடுவார்கள் அதன்பின் அங்கு பிஎஸ்என்எல் க்கு தேர்ந்தெடுத்த பணியாளர்கள் மட்டுமே இருப்பார்கள் . ஆனால் 2026 ல் ஓய்வு பெறுபவர்கள் 2027 க்கு பிறகு இன்னும் 20 வருடங்கள் இருப்பார்கள் . எனவே பிஎஸ்என்எல் சம்பள மாற்றத்திற்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதிய மாற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.

 *** ( இதில் இணைக்கப்பட்டுள்ள இனைப்புகள் 2 ,3,4 இவைகளில் பென்ஷன் மாற்றம் சி டி ஏ ...ஐ டி ஏ கன்வெர்ஷ்ன் எளிமையாய் ..அரசுக்கு ஆகும் செலவு..... ஓய்வூதியருக்கு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு கிடைக்கும் தொகை போன்ற விளக்கங்கள் மிக அழகாக கொடுத்துள்ளார்கள்.

 இதன்படி ஒருவருக்கு 14.22 % மட்டுமே கூடுகிறது இது மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த அளவுக்குள் தான். 

இதில் இன்னொரு முக்கியமான அம்சம் பணியாற்றிய காலத்தில் பிஎஸ்என்எல் பணியாளரின் உயர்ந்த பட்ச சம்பளம் விகிதத்திற்கு pension contribution ....பி எஸ் என் எல் நிர்வாகதால் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது உத்தேசமாக இதே சம நிலையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு செலுத்தியதை விட பிஎஸ்என்எல் நிர்வாகம் 90 கோடி அதிகமாக செலுத்தியுள்ளது ).

 தர்மம் வெல்லும்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 UTK,NELLAI

தமிழாக்கம் : AIBSNLPWA, TIRUNELVELI
(நன்றி : U திருமலை குமாரசாமி, நெல்லை)

Senior Pensioners above 80 years are allowed to submit Life-Certificate from 1st October every year


CGHS Subscription Rates for BSNL Retirees & Ward entitlements at private hospitals




28 July 2019

23-07-2019 : தூத்துக்குடி மாவட்ட 9வது ஆண்டு விழா நிகழ்வுகள்

அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச் சங்க தூத்துக்குடி மாவட்டக் கிளையின் 9வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் 
நாள் : 23-07-2019 (செவ்வாய்க் கிழமை) 
இடம் : DA கல்யாண மண்டபம், வடக்கு ரதவீதி, தூத்துக்குடி 
நேரம் : காலை 10:30 மணி 

ஆண்டு விழாத் தொடக்கமாக மாவட்டத் தலைவர் திரு எல்.தாமஸ் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். அகில இந்தியத் துணைப் பொதுச் செயலர் தோழர். எஸ்.அருணாச்சலம் அவர்கள் சங்கக் கொடி ஏற்றினார். மாநிலத் துணைச் செயலர் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பினார்.



 ஆண்டு விழா பொதுக்கூட்ட அவைக்கு மாவட்டத் தலைவர் எல்.தாமஸ் அவர்கள் தலைமையேற்றார்.
 தமிழ் வாழ்த்துப் பா உடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

 அஞ்சலி :
கடந்த ஆண்டு மறைந்த தோழர்களுக்கு அவையில் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தலைவர் முன்னுரை :
அவைத் தலைவர் எல்.தாமஸ் தனது தலைமை உரையில், சங்க வளர்ச்சியின் தேவை குறித்தும் .பென்ஸன் ரிவிஷன் இன்றைய நிலை பற்றியும் முன்னுரையாகத் தந்தார்.

 வரவேற்புரை :



 மாவட்ட இணைச் செயலர் திரு எம்.திரு பர்னபாஸ் அவர்கள் தமது உரையில் மத்திய அரசு ஓய்வூதிய மாற்றம் 1.1.2017 முதல் ஏன் வழங்கிட வேண்டும் என்பது குறித்தும் அதன் நியாயங்கள் குறித்தும் விவரித்தார். முன்பு 2006 ல் நடந்த ஓய்வூதியம் மாற்றம் நடந்த நிகழ்வு போல் இதுவும் நமக்குத் தரப்படும் என உறுதியாகச் சொன்னார்.
பணியாளர் சங்கம், தங்களது சம்பள மாற்றத்துக்குப் பின்னர்தான் ஓய்வூதியம் மாற்றம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்து உள்ளது. அது நமக்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது. ஆயினும் நாம் வெற்றி பெறுவோம்.
மேலும் நாம், 78.2 % DA இணைப்புடன் கூடிய ஓய்வூதியத்தை 1.1.2017 முதல் பின் தேதி கணக்கிட்டு நிலுவை வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
 பென்சனுக்கு வருமான வரி விலக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
 கேரளா வெள்ள நிவாரணம் மற்றும் கஜா புயல், புனே புயல் ஆகியவற்றிற்கும் நமது தோழர்கள் தாராளமாகப் பண உதவிகள் கொடுத்துள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

 வாழ்த்துரை வழங்கியோர் :







 மாவட்டத் துணைத் தலைவர் திரு எம். ஜீவானந்தம் அவர்கள் :
 நமது சங்கத்தில் 70000 + உறுப்பினர்கள் உள்ளனர். மிகவும் வலிமையாய் உள்ளோம்; ஓய்வூதியர் நலம் காக்கும் முறையில் சிறப்பாய்.2009 ல் ஆரம்பித்து 10 வருடத்தில் இன்று மிகப் பெரிய சங்கமாய் உள்ளோம். 2006 க்கு முன்பு ஓய்வுபெற்றவருக்கு பென்ஸன் ரிவிஷன் போராடி வாங்கிக் கொடுத்த வரலாறு பற்றி விவரித்தார். 10 ஆண்டு பணி முடித்தோருக்கும் ஓய்வூதியம், கடைசி மாச சம்பளத்தில் 50%. குடும்ப பென்ஷன், ஆதரவற்ற கைம்பெண்ணுக்கும் சலுகை, எனப் பல சலுகைகளைப் பெற்றுத் தந்தது நமது சங்கம்.  நன்மைகள் தொடர்ந்து பல செய்யும் நமது சங்கம், தீராத கோரிக்களை நீதி மன்றத்தை அணுகி வழக்குகள் தொடர்ந்து போராடித் தீர்வு காணும் முயற்சி எடுக்கிறது என பரப்புரை தந்தார்.

 திரு எஸ். இசக்கியப்பன் :
 மாவடட பொறுப்பாளர்களின் சேவைகளைப் பாராட்டினார். சங்கம் பலம் பொருந்திய சங்கமாய் மிளிர்ந்திட வாழ்த்தினார்.

 திரு எஸ்.பால்சாமி, மாவட்டப் பொருளாளர்:
சங்கம் வளர்பிறை போல வளரும் நிலையில், உறுப்பினர் பிரச்சனைகளை மாநில, அகில இந்தியத் தலைவர்கள் சரியாகப் புரிந்து தீர்த்து வருவது பாராட்டுக்கு உரியது என உரைத்தார். .

 திரு ஏ. பரமசிவம், மாவட்டத் துணைத் தலைவர் :
 2000 ல் DOT என்பது BSNL ஆக மாற்றப் பட்டபோது, அரசு ஓய்வூதியத்தை உறுதி செய்து போட்டது வரலாற்று ஒப்பந்தம் என்றார். கிராமங்களில் டெலிபோன் சேவைகள் தருவதால் பி எஸ் என் எல் பெரும் நிதி இழப்பு ஆகிறது. அதற்கு அரசு நிது உதவி தரவேண்டும் என்பது நியாயமான ஒன்று என்றார். ஆனால் இன்று உலா வரும் செய்திகள் மிகவும் கவலை தருவதாய் உள்ளது; பி எஸ் என் எல் சொத்துக்களைக் கபளீகரம் செய்திட சிலபல முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது பற்றியும் சொன்னார்.

 திரு ஏ.மாடசாமி, மாவட்ட துணைச் செயலர் :
மத்திய, மாநில, மாவட்டச் சங்கத்தின் சாதனைகள் பற்றி விவரித்தார். ஓய்வுதியர் பிர ச்சனைகள் தீர்க்கும் முறையினை பாராட்டினார். சங்கத்தின் பொருளாதர நிலையை உயர்த்திட உதவிய உறுப்பினர்களை நன்றி பாராட்டினார். சங்க வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என கூறினார் .

நெல்லை பாலு, மாவட்ட அமைப்புச் செயலர் :
 1968 போராட்டம் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். Fr 17 பற்றி விளக்கமும் தந்தார். தந்தார் .இதற்கு திரு அருணாச்சலம் அவர்கள் தரும் பதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார். பணியாளர் சங்க பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். மருத்துவப் படிக்கான உதவித் தொகை ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்தார். பணியாளர் பணியின் போது இறந்தால், அவர்ஊம் வாரிசுக்கு இனி மத்திய அரசுப் பணி வழங்கிட முயற்சிகள் செய்திடல் வேண்டும் என்றும் உரையாற்றினார்.

சிறப்புரை :



 திரு.என்.அம்பிகாபதி, மாநிலத் துணைச் செயலர்

 தோழர் எஸ். அருணாச்சலம், அகில இந்திய துணைச் செயலர் : (அவர்களது உரை, தனித் தொகுப்பாகத் தரப்பட்டுள்ளது)

 ஆண்டறிக்கை :



 கடந்த ஆண்டு நடைபெற்ற 8வது பொதுக் குழுவுக்குப் பின்னரான .. முதல் .. வரையிலான காலத்திற்கான ஆண்டறிக்கையினை அவையின் முன் மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா அவர்கள் வாசித்தளித்தார். அவை ஒப்புதல் அளித்தது.

 நிதி நிலை அறிக்கை :



 … முதல் … வரையிலான காலத்திற்காண பொருளாதார நிதிநிலை அறிக்கையினை, திரு.எஸ்.பால்சாமி, மாவட்டப் பொருளாளர் அவர்கள் அவை முன் வாசித்தளித்தார். அவை ஒப்புதல் அளித்தது.

 நன்றியுரை :
 மாவட்ட இணைச் செயலர் திரு. கே.சித்திக் உமர் அவர்கள், கூட்டத்தில் கலந்துகொண்ட 162 உறுப்பினர்களுக்கும் மற்றும் நிகழ்வினைச் செம்மையாக நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றியுரை கூற, கூட்டம் இனிதே நிறைவுற்றது.