தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

28 July 2019

23-07-2019 : தூத்துக்குடி மாவட்ட 9வது ஆண்டு விழா நிகழ்வுகள்

அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச் சங்க தூத்துக்குடி மாவட்டக் கிளையின் 9வது ஆண்டு விழா பொதுக்கூட்டம் 
நாள் : 23-07-2019 (செவ்வாய்க் கிழமை) 
இடம் : DA கல்யாண மண்டபம், வடக்கு ரதவீதி, தூத்துக்குடி 
நேரம் : காலை 10:30 மணி 

ஆண்டு விழாத் தொடக்கமாக மாவட்டத் தலைவர் திரு எல்.தாமஸ் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். அகில இந்தியத் துணைப் பொதுச் செயலர் தோழர். எஸ்.அருணாச்சலம் அவர்கள் சங்கக் கொடி ஏற்றினார். மாநிலத் துணைச் செயலர் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பினார்.



 ஆண்டு விழா பொதுக்கூட்ட அவைக்கு மாவட்டத் தலைவர் எல்.தாமஸ் அவர்கள் தலைமையேற்றார்.
 தமிழ் வாழ்த்துப் பா உடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.

 அஞ்சலி :
கடந்த ஆண்டு மறைந்த தோழர்களுக்கு அவையில் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தலைவர் முன்னுரை :
அவைத் தலைவர் எல்.தாமஸ் தனது தலைமை உரையில், சங்க வளர்ச்சியின் தேவை குறித்தும் .பென்ஸன் ரிவிஷன் இன்றைய நிலை பற்றியும் முன்னுரையாகத் தந்தார்.

 வரவேற்புரை :



 மாவட்ட இணைச் செயலர் திரு எம்.திரு பர்னபாஸ் அவர்கள் தமது உரையில் மத்திய அரசு ஓய்வூதிய மாற்றம் 1.1.2017 முதல் ஏன் வழங்கிட வேண்டும் என்பது குறித்தும் அதன் நியாயங்கள் குறித்தும் விவரித்தார். முன்பு 2006 ல் நடந்த ஓய்வூதியம் மாற்றம் நடந்த நிகழ்வு போல் இதுவும் நமக்குத் தரப்படும் என உறுதியாகச் சொன்னார்.
பணியாளர் சங்கம், தங்களது சம்பள மாற்றத்துக்குப் பின்னர்தான் ஓய்வூதியம் மாற்றம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்து உள்ளது. அது நமக்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது. ஆயினும் நாம் வெற்றி பெறுவோம்.
மேலும் நாம், 78.2 % DA இணைப்புடன் கூடிய ஓய்வூதியத்தை 1.1.2017 முதல் பின் தேதி கணக்கிட்டு நிலுவை வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
 பென்சனுக்கு வருமான வரி விலக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
 கேரளா வெள்ள நிவாரணம் மற்றும் கஜா புயல், புனே புயல் ஆகியவற்றிற்கும் நமது தோழர்கள் தாராளமாகப் பண உதவிகள் கொடுத்துள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.

 வாழ்த்துரை வழங்கியோர் :







 மாவட்டத் துணைத் தலைவர் திரு எம். ஜீவானந்தம் அவர்கள் :
 நமது சங்கத்தில் 70000 + உறுப்பினர்கள் உள்ளனர். மிகவும் வலிமையாய் உள்ளோம்; ஓய்வூதியர் நலம் காக்கும் முறையில் சிறப்பாய்.2009 ல் ஆரம்பித்து 10 வருடத்தில் இன்று மிகப் பெரிய சங்கமாய் உள்ளோம். 2006 க்கு முன்பு ஓய்வுபெற்றவருக்கு பென்ஸன் ரிவிஷன் போராடி வாங்கிக் கொடுத்த வரலாறு பற்றி விவரித்தார். 10 ஆண்டு பணி முடித்தோருக்கும் ஓய்வூதியம், கடைசி மாச சம்பளத்தில் 50%. குடும்ப பென்ஷன், ஆதரவற்ற கைம்பெண்ணுக்கும் சலுகை, எனப் பல சலுகைகளைப் பெற்றுத் தந்தது நமது சங்கம்.  நன்மைகள் தொடர்ந்து பல செய்யும் நமது சங்கம், தீராத கோரிக்களை நீதி மன்றத்தை அணுகி வழக்குகள் தொடர்ந்து போராடித் தீர்வு காணும் முயற்சி எடுக்கிறது என பரப்புரை தந்தார்.

 திரு எஸ். இசக்கியப்பன் :
 மாவடட பொறுப்பாளர்களின் சேவைகளைப் பாராட்டினார். சங்கம் பலம் பொருந்திய சங்கமாய் மிளிர்ந்திட வாழ்த்தினார்.

 திரு எஸ்.பால்சாமி, மாவட்டப் பொருளாளர்:
சங்கம் வளர்பிறை போல வளரும் நிலையில், உறுப்பினர் பிரச்சனைகளை மாநில, அகில இந்தியத் தலைவர்கள் சரியாகப் புரிந்து தீர்த்து வருவது பாராட்டுக்கு உரியது என உரைத்தார். .

 திரு ஏ. பரமசிவம், மாவட்டத் துணைத் தலைவர் :
 2000 ல் DOT என்பது BSNL ஆக மாற்றப் பட்டபோது, அரசு ஓய்வூதியத்தை உறுதி செய்து போட்டது வரலாற்று ஒப்பந்தம் என்றார். கிராமங்களில் டெலிபோன் சேவைகள் தருவதால் பி எஸ் என் எல் பெரும் நிதி இழப்பு ஆகிறது. அதற்கு அரசு நிது உதவி தரவேண்டும் என்பது நியாயமான ஒன்று என்றார். ஆனால் இன்று உலா வரும் செய்திகள் மிகவும் கவலை தருவதாய் உள்ளது; பி எஸ் என் எல் சொத்துக்களைக் கபளீகரம் செய்திட சிலபல முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது பற்றியும் சொன்னார்.

 திரு ஏ.மாடசாமி, மாவட்ட துணைச் செயலர் :
மத்திய, மாநில, மாவட்டச் சங்கத்தின் சாதனைகள் பற்றி விவரித்தார். ஓய்வுதியர் பிர ச்சனைகள் தீர்க்கும் முறையினை பாராட்டினார். சங்கத்தின் பொருளாதர நிலையை உயர்த்திட உதவிய உறுப்பினர்களை நன்றி பாராட்டினார். சங்க வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என கூறினார் .

நெல்லை பாலு, மாவட்ட அமைப்புச் செயலர் :
 1968 போராட்டம் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். Fr 17 பற்றி விளக்கமும் தந்தார். தந்தார் .இதற்கு திரு அருணாச்சலம் அவர்கள் தரும் பதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார். பணியாளர் சங்க பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். மருத்துவப் படிக்கான உதவித் தொகை ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்தார். பணியாளர் பணியின் போது இறந்தால், அவர்ஊம் வாரிசுக்கு இனி மத்திய அரசுப் பணி வழங்கிட முயற்சிகள் செய்திடல் வேண்டும் என்றும் உரையாற்றினார்.

சிறப்புரை :



 திரு.என்.அம்பிகாபதி, மாநிலத் துணைச் செயலர்

 தோழர் எஸ். அருணாச்சலம், அகில இந்திய துணைச் செயலர் : (அவர்களது உரை, தனித் தொகுப்பாகத் தரப்பட்டுள்ளது)

 ஆண்டறிக்கை :



 கடந்த ஆண்டு நடைபெற்ற 8வது பொதுக் குழுவுக்குப் பின்னரான .. முதல் .. வரையிலான காலத்திற்கான ஆண்டறிக்கையினை அவையின் முன் மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா அவர்கள் வாசித்தளித்தார். அவை ஒப்புதல் அளித்தது.

 நிதி நிலை அறிக்கை :



 … முதல் … வரையிலான காலத்திற்காண பொருளாதார நிதிநிலை அறிக்கையினை, திரு.எஸ்.பால்சாமி, மாவட்டப் பொருளாளர் அவர்கள் அவை முன் வாசித்தளித்தார். அவை ஒப்புதல் அளித்தது.

 நன்றியுரை :
 மாவட்ட இணைச் செயலர் திரு. கே.சித்திக் உமர் அவர்கள், கூட்டத்தில் கலந்துகொண்ட 162 உறுப்பினர்களுக்கும் மற்றும் நிகழ்வினைச் செம்மையாக நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றியுரை கூற, கூட்டம் இனிதே நிறைவுற்றது.