தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

31 July 2019

7வது சம்பளக் குழு அறிக்கையின்படியான ஓய்வூதிய மாற்றம் = கோரிக்கை விளக்கம்




அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்

 பி எஸ் என் எல்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மத்திய அரசின் consolidate fund of India (Civil estimate) கன்சாலிடெட் பண்டிலிருந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு ஏழாவது சம்பள குழு அறிக்கை படி 1 .1 .2017 முதல் பென்ஷன் மாற்றம் தர வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதை நாம் அறிவோம்.

 பெரும்பாலான ஓயவூதியர் சங்கங்கள் ஏழாவது சம்பளக் குழுவின் அறிக்கைப்படி பென்ஷன் மாற்றம் கேட்கும் நிலையில், ஒரு சில சங்கங்கள் மீண்டும் மீண்டும் பிஎஸ்என்எல் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் வந்த பிறகுதான் பென்ஷன் மாற்றம் வேண்டும் என்ற நிலையில் உள்ளதை நாம் அறிவோம் . (அந்த நண்பர்களுக்கும் விளக்கம் தரும் பதிவுதான் இந்த பதிவு) .

இந்த பதிவு பிஎஸ்என்எல்/ எம்டிஎன்எல் ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு அதனுடைய கன்வீனர் திரு கங்காதரராவ் அவர்களின் அருமையான விளக்கப் பதிவு .

      இது ஒரு நீண்ட பதிவு இதை பொறுமையாக படிக்கவும். *
     இது ஒரு ஆறு பக்கம் உள்ள pdf கோப்பு அதனுடைய ஆங்கில கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. ***
     அதனுடைய சுருக்கம் தமிழில் எளிதாக புரிந்து கொள்ளும் முறையில் உங்கள் பார்வைக்கு ****

பிஎஸ்என்எல் சம்பள மாற்றத்திற்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியம் மாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை :
இதற்கு காரணங்கள்:-

 1.)மத்திய அரசு ஊழியர்களும் பிஎஸ்என்எல்/ எம்டிஎன்எல் இருந்து ஓய்வு பெற்றவர்களும் ccs pension rules 1972 கீழ் வருகிறார்கள்

 2.) அதனுடைய துணைவிதி 8 விதி 37 of ccs pension rules 1972 .... என்ன சொல்கிறது என்றால் ஒரு நிரந்தர அரசு ஊழியர் பின்னாட்களில் பொதுத்துறையில் சேர்க்கப்பட்டால் அவர் அரசு துறையில் பணியாற்றிய காலத்தையும் பொதுத் துறையில் பணியாற்றிய காலத்தையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.

 3 .)இந்த விதியின் படி இந்தியாவில் உள்ள பொதுத் துறைகளில் பிஎஸ்என்எல் மட்டுமே இந்த சிறப்பு விதிக்கு கட்டுப்பட்டது .

 4 .) ஆறாவது சம்பளக் குழுவின் பரிந்துரையின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட (DCRG )டி ஸி ஆர் ஜி (பணிக்கொடை) அதனுடைய உச்சவரம்பு அதனுடைய கமுடேஷன் டேபிள். உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் பத்து வருடங்களுக்கு ... 80, 90, 100 வயதைக் கடந்தவர்களுக்கு கொடுக்கப்படும் உயர்ந்த பட்ச பென்சன்(அடிஷனல்,) இது எல்லாம் 1 .1 .2006 முதல் bsnl ida ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட்டதை நாம் அறிவோம்.

 5.)அதேபோல் பிஎஸ்என்எல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் அதிகபட்சம் ஓய்வூதியம் பிஎஸ்என்எல் சம்பளவிகிதம் படி வழங்காமல் (பி எஸ் என் எல் சம்பள விகிதம் அதிகமாய் இருந்தாலும் )மத்திய அரசின் சம்பள விதிகப்படி குறைத்து வழங்கப்பட்டுள்ளது.

 6.)மத்திய அரசு ஓய்வூதியர்களும் பிஎஸ்என்எல்/ எம்டிஎன்எல் ஓய்வூதியர்களும் பென்ஷன் பெறுவது சி வில் எஸ்டிமேட்டில் இருந்து .

 7 .)மத்திய அரசு ஓய்வூதியர்களும் பிஎஸ்என்எல் எங்கள் ஓய்வூதியர்களும் மத்திய அரசு மத்திய அரசு மருத்துவ திட்டங்களின் உறுப்பினர்கள். (Central Govt Health Services )

 8 .)இவர்களின் ஓய்வு ஊதியம் மத்திய அரசின் நிதியிலிருந்து கொடுக்கப்படுவதால் பிஎஸ்என்எல்/எம் டி என் எல் நிதி நிலைமைக்கும் பென்ஷன் வழங்குவதற்கும் சம்பந்தமில்லை.

 9 .)2000 ல் பிஎஸ்என்எல் உருவாக்கும்போது சேர்க்கப்பட்ட அலுவலர்கள், அதிகாரிகள் அத்தனை பேரும் 2026ல் ஓய்வு பெற்று விடுவார்கள் அதன்பின் அங்கு பிஎஸ்என்எல் க்கு தேர்ந்தெடுத்த பணியாளர்கள் மட்டுமே இருப்பார்கள் . ஆனால் 2026 ல் ஓய்வு பெறுபவர்கள் 2027 க்கு பிறகு இன்னும் 20 வருடங்கள் இருப்பார்கள் . எனவே பிஎஸ்என்எல் சம்பள மாற்றத்திற்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதிய மாற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.

 *** ( இதில் இணைக்கப்பட்டுள்ள இனைப்புகள் 2 ,3,4 இவைகளில் பென்ஷன் மாற்றம் சி டி ஏ ...ஐ டி ஏ கன்வெர்ஷ்ன் எளிமையாய் ..அரசுக்கு ஆகும் செலவு..... ஓய்வூதியருக்கு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு கிடைக்கும் தொகை போன்ற விளக்கங்கள் மிக அழகாக கொடுத்துள்ளார்கள்.

 இதன்படி ஒருவருக்கு 14.22 % மட்டுமே கூடுகிறது இது மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த அளவுக்குள் தான். 

இதில் இன்னொரு முக்கியமான அம்சம் பணியாற்றிய காலத்தில் பிஎஸ்என்எல் பணியாளரின் உயர்ந்த பட்ச சம்பளம் விகிதத்திற்கு pension contribution ....பி எஸ் என் எல் நிர்வாகதால் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது உத்தேசமாக இதே சம நிலையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு செலுத்தியதை விட பிஎஸ்என்எல் நிர்வாகம் 90 கோடி அதிகமாக செலுத்தியுள்ளது ).

 தர்மம் வெல்லும்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

 UTK,NELLAI

தமிழாக்கம் : AIBSNLPWA, TIRUNELVELI
(நன்றி : U திருமலை குமாரசாமி, நெல்லை)