29 August 2018
குறைகளும் தீர்வுகளும் (மாவட்ட அளவிலானவை)
தூத்துக்குடி மாவட்ட அளவிலான சில குறைகளைத் தீர்க்க வேண்டி 17-08-2018 அன்று நமது தூத்துக்குடி மாவட்டச் சங்கம், தூத்துக்குடி BSNL பொது மேலாளருக்குக் கடிதம் சமர்ப்பித்திருந்தது. (இது குறித்த செய்தி ஏற்கனவே நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது)
சிலபல காரணங்களால் தள்ளிப்போன அமர்வு, தூத்துக்குடி மாவட்டத் துணைப் பொது மேலாளர் திரு.சேவியர் லூர்துசாமி அவர்களின் முன்முயற்சியால் 24-08-2019 அன்று ஏற்பாடானது.
துணைப் பொது மேலாளர் திரு.சேவியர் லூர்துசாமி அவர்களுடனான நமது சந்திப்பு 24-08-2018 அன்று மாலை 4 மணியளவில் நடந்தேறியது. மிகக் குறைந்த நேர அவகாசம் கிடைத்தபோதும் நமது சங்கச் செயலர் எஸ்.சுப்பையா, இணைச் செயலர் எம்.பர்னபாஸ் மற்றும் இணைச் செயலர் கே.சித்திக் உமர் மூவரும் அமர்வில் கலந்துகொண்டனர்.
கீழ்க் கண்டவாறு குறைகள் விவாதம் செய்யப்பட்டு, அலுவலகம் சார்பாக முடிவுகள் தரப்பட்டுள்ளன:
1 & 2 :திருமதி. சாந்தி முத்துக்கிருஷ்ணன் & திரு. ஆல்பர்ட் வின்சென்ட் – இருவருக்கும் தர வேண்டிய 78.2% பாக்கி பணத்தைத் தரவேண்டியது சரியென்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.
3 : திரு.ராமலிங்கம் பெயர் மாற்றம் என்பது தமிழ்நாடு அரசு கெஸட் அல்லாது இந்தியக் கெஸட்டில் செய்யப்பட வேண்டும் எனத் துறையின் தரப்பில் எழுப்பப்பட்ட விசாரிப்பின் சட்ட முன்வடிவை நமது சங்கம் கேள்வியாக வைத்திருக்கிறது. அலுவலகத் தரப்பிலான பதில் தரப்படும் என எதிர்பார்க்கிறோம்.
4. நமது சங்க உறுப்பினர்கள் 24+4 பேர்களுக்கு 2017-18ஆம் ஆண்டுக்கான ரசீது அல்லாத மருத்துவப்படி கிடைக்காதது குறித்த குறை AO (Drawal) அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார அவகாசத்தில் தீர்வு தரப்படுமென்று எதிர்பார்க்கிறோம்.
5. எஸ்.சுந்தரராஜ் மற்றும் திரு.சத்தியசீலன் இருவருக்கும் 2வது NEPP பணப்பலன் கிடைக்காமல் ஏழாண்டுகளாக இழுத்தடிக்கப்படுவது குறித்த விவாதத்திற்கு, A.O இதை விரைவில் முடிவு செய்வார் என்ற பதில் தரப்பட்டது. (இது முந்தைய கூட்டத்தில் நம்மால் தரப்பட்ட கோரிக்கை. ) விரைவில் தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்.
கூட்ட ஏற்பாடு செய்து குறைகளைப் பேசித் தீர்க்க உதவிய துணைப் பொது மேலாளர் திரு.சேவியர் லூர்துசாமி அவர்களுக்கு எம் நன்றி!
27 August 2018
Happy Weddings -All are invited
26 August 2018
Our Social Commitment
23 August 2018
20 August 2018
Organisational Day Celebrations at Tuticorin.
AIBSNLPWA 10th Organisational day was celebrated in Tuticorin, presided by Com.M.Jeevanandam, District Vice President and Welcome address given by Com.M.Barnabas, District Joint Secretary.
The President spoke about the growth of our organisation in the past 9 years. Com. S.Subbiah, District Secretary spoke about the difficulties we are facing in our path. Com.N.Ambigapathi, ACS gave a speech elaborately of our organisation which has successfully handled in 2011 for pension revision and 78.2% IDA Merger in 2017. To improve our membership, hard work to be dedicated by each member, he added. Our Technical Webmaster Com.K.Chiddiq Omar described about the technical infra-strucure of the website and it's necessity for our future developments of our organisation.
The meeting was celebrated with great enthusiasm and convened by nearly in total of 50 members including ladies.
In addition, the District Executive meeting was held. The District conference report was presented by the District Secretary, S.Subbiah. And, the financial Report was also submitted by the District Treasurer, S.Paulsamy. The details of KYP AND Medical Allowance claims without voucher were also discussed by the Executive Members.
Vote of thanks was given by Com.S.Pauldamy, District Treasurer.
Both the functions of the organisational day & the Executive meeting were jointly conducted and celebrated.
19 August 2018
18 August 2018
Grievances
A meeting with DGM (Admin.) O/o. GM, BSNL, Tuticorin had been arranged for settling grievances of our AIBSNLPWA, Tuticorin members on 17.08.2018 (Friday) at 03:30 pm.
Due to unavoidable circumstances, the meeting could not be conducted and the DGM (Admin) is pleased to fix an another date during next week for discussions.
The following cases were given in writing to the o/o. GM, TTN for settling :
1. Shanthi Muthukrishnan – 78.2% to be fixed and arrears to be paid.
2. Albert Vincent : One increment Case – arrears to be paid
3. Ramalingam – Change of Name to be effected
4. 24 members – Medical Allowance w.o.voucher for 2017-18 yet to be paid.
The cases will be taken on next week for discussions and settlements
Our Circle President Com.V.Ramarao and out-going Circle Secretary Com.K.Muthiyalu met Tamilnadu CCA Sri.Pradhan and CGM Projects Sri.Raghavkumar on 17.08.2018 and introduced our Circle Secretary Com.R.Venkatachalam.
The memento of TN Circle Conference which was held in Trichy was presented to them.
CCA TN Sri.Pradhan assured our leaders that the problems and demands of our pensioners would be considered with great consideration.
16 August 2018
ஏ.பி.வாஜ்பாய் மறைவு - அஞ்சலி
பாரத ரத்னா ஏ.பி.வாஜ்பாய் அவர்கள்
இன்று மறைந்தார்கள்.
அவரது மறைவுக்கு
அஞ்சலி செலுத்துகிறோம்.
Organisational Day 2018
The Organisational Day (20th August) celebration & the Executive Committee meeting is proposed to be conducted on 20-08-2018 at 10:00 AM.
Venue : AIBEA Building, Varadharajapuram, Tuticorin
All the members are requested to attend.
KERALA ON FLOOD
=====================================================
All India Association has sent RS.20,000 for Kerala Flood Releif Fund.
Tamil Nadu circle has sent Rs.10,000 for Kerala Flood Relief Fund.
Districts are requested to extend their extend their help.
K.Muthiyalu,
All India Organising Secretary.
======================================================
Donations shall be sent to :-
Bank: VIJAYA BANK
Branch:Ernakulam M G Road
Account No: 202201011000787
Account holder: AIBSNLPWA, Kerala Circle
IFSC: VIJB0002022
=======================================================
15 August 2018
14 August 2018
Pension Adalat at Chennai
The notification has been issued by the DOP & PW, GOI for holding National Adalat throughout the country on 18-09-2018 vide Ltr. No. F.No.42/11/2018-P&PW(G) dtd the 10th July, 2018.
Accordingly, the PCCA Chennai is holding Adalat on 18-09-2018 at Chennai and we, Tuticorin Association, have forwarded FIVE grievances on 14-08-2018 for settlements :
1.C.Jekkammal, F/P
2. S.Subbarayalu, Retd. DE
3. Mohideen Abdul Cader, Retd. SDE Civil
4. R.Saratha, F/P
5.S.Paulsamy, Retd. STS (O).
===========================================================
Copy of the Letter :-
Government of India
Ministry of Personnel Public Grievances & Pensions
Department of Pension & Pensioners Welfare
Loknayak Bhavan, Khan Market
New Delhi - 110003
F. No.42/11/2018-P&PW(G) 10th July, 2018
I would like to draw your attention, to the suggestion of the Departmental Parliamentary Standing Committee for this Ministry, that a day may be dedicated to the Pensioners, as part of goodgovernance, and efforts made to minimize their grievances. It has been suggested to hold Pension Adalats, on a particular day, across Ministries, throughout the country, with this objective in view.
It has therefore been decided, to conductnation-wide Pension Adalats by eachMinistry/Department/Organisation/Field formation on September 18, 2018. Wide publicity should be given to Pension Adalats of your Ministry and cases for the Adalat be shortlisted latest byAugust 15, 2018. The main objective of these Adalats would be prompt and quick redressal ofpensioners' grievances, within the framework of extant policy guidelines. While holding theseAdalats, each Ministry should ensure the presence of all concerned stake-holders across the table viz. officials in charge of pay fixation & Pension processing, PPO issuing branch, Pay & Accounts Office as well as senior officials of the concerned Banks. A notice, in advance intimatingthe time and venue of the Adalat, should also be sent to the Pensioner so that he or hisrepresentative can be present to plead his case. For effective redressal across the table, it isimperative that the Departments should in advance examine the cases and make preparations for the Adalat.
An indicative list of grievances of your Pvtinistry/DepartmentiOrganisation, pending inCPENGRAMS. received by Department of Pensions & Pensioners' Welfare, is enclosed, which can be taken up in the Pension Adalat of your Ministry in addition to other Pensioners' grievances of your Ministry/Department. However, only those grievances are to be taken up which fall within the four walls of extant Pension policy/guidelines. The MinistrieslDepartments/Organisations having field formations in different parts of the country, mayorganise Pension Adalats in these formations also, so that this effort has a pan-India effect.
A nodal officer. may be nominated from your Ministry, who will coordinate both within yourMinistry and will also intimate Department of Pension & Pensioners' Welfare the status ancnumber of cases being taken up in the Pension Adalats of your Ministry and also intimate theoutcome of the Adalats organized by your Ministry/Department/Organisation in the prescribedproforma (copy enclosed).
I hope that through cooperation and involvement of your Ministry in this exercise. We could be able to redress the grievances of pensioners to a large extent.
Secretary
ALL INDIA CONFERENCE RECEPTION COMMITTEE BULLETIN
The All India Conference Reception Committee at Puri has issued the bulletin for informations to all union heads and participants.
10 August 2018
மாநிலச் செயலரின் கடிதம்
அனைவருக்கும் வணக்கம்!
மாநாடு முடிந்து அனைவரும் பத்திரமாக ஊர் திரும்பி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இரண்டு நாள் திட்டமிட்ட மாநாடு, திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் மறைவை ஒட்டி முன்னரே முடிக்க வேண்டிய நிலை. இருப்பினும் முதல் நாள் (07-08-18) நிகழ்ச்சிகளிலேயே நமது ஆய்படு பொருளை முழுமையாக இல்லாவிட்டாலும், நிறைவாக நடத்தி முடித்தோம். நமது அகில இந்தியத் தலைவர்கள், தோழர்கள் ராமன்குட்டி, நடராஜன் D.G, விட்டோபன், அருணாசலம், முத்தியாலு ஆகியோர் நமது கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். மாநாட்டில் முத்தாய்ப்பாக வரவேற்புக் குழுத் தலைவர் டாக்டர்.செந்தில்குமார் நல்லுசாமி அவர்களின் வரவேற்பு உரையும், இதயத்தை பாதுகாப்பது எப்படி? என்ற அவரின் செயல்முறை விளக்கமும் அமைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது என்பது சிறப்பாகும். உணவு, தங்கும் வசதி, மாநாட்டு ஏற்பாடு என்று அனைத்திலும் ஒரு குறைகூட சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறப்பாக மாநில மாநாட்டை நடத்தி முடித்த வரவேற்புக் குழுவிற்கு பாராட்டும், நன்றியும், திருச்சி என்றாலே “திருப்பு முனை” என்ற சொல் வழக்கிற்கு அச்சாரம் சேர்க்கும் வகையில் மாநாடு நெஞ்சில் நீங்காத நிகழ்வாகி உள்ளது. நீண்ட அனுபவம் மிக்க மாநிலத் தலைவர் தோழர் வி.ராமராவின் தலைமையில் ஒரு மனதாக தேர்ந்தேடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைகள், ஒத்துழைப்போடு நமது மாநில சங்கத்தின் செயல்பாட்டை சிறப்பாக்க நாம் எல்லோரும் உழைப்போம். விடைபெற்ற முன்னாள் நிர்வாகிகளின் ஆலோசனைகளையும் கேட்டறிவோம்.
நமது அமைப்பு தினத்தை (20-08-18) சிறப்பாக கொண்டாடுங்கள்.
18-09-18ல் நடைபெறும் அதாலத்திற்கு 16-08-18-க்குள் மாவட்டங்கள் பிரச்சனைகளை CCA அலுவலகத்திற்கு அதற்குண்டான படிவத்தில் அனுப்பி அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தோழர் முத்தையாலு மாநாட்டில் அறிவித்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
நமது முக்கிய கோரிக்கையான 7-வது ஊதியக் குழுவின் ஓய்வூதியப் பரிந்துரைகள் நமக்கும் நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளை முன் எடுத்து சென்று வெற்றி பெற அகில இந்திய சங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நமது மாநில சங்கம் உறுதுணையாக நிற்கும்.
அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக்கிட “பூரி”க்குச் செல்ல ஆயத்தமாவோம். புதிய மாநில சங்க நிர்வாகிகள் தங்களது முகவரியையும் செல் பேசி எண்ணையும் அனுப்பி வைக்கவும்.
தோழமையுள்ள, R.வெங்கடாசலம், மாநிலச் செயலாளர்
எனது முகவரி :-
CSK Jains West Minster,
Arunachalam Road,
Saligramam, Chennai – 600 093
Email. rvtrichy@gmail.com
Cell No. 94433 71722
09 August 2018
தூத்துக்குடித் தோழர்கள் * 6வது தமிழ் மாநில மாநாடு
6வது தமிழ் மாநில மாநாட்டில் 19 தோழர்கள் தூத்துக்குடி சார்பாளர்களாகப் பங்கேற்றனர்.
மாநாட்டில் எமது தூத்துக்குடித் தோழர் என்.அம்பிகாபதி அவர்கள் மாநிலத் துணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமைக்கு எமது நன்றி!
6வது மாநாட்டில் தலைவர்கள்!
ஆறாவது தமிழ் மாநில மாநாட்டில்
தலைவர்களும் முன்னணித் தோழர்களும்
ஆற்றிய எழுச்சியுரை!
கண்டு கேட்டு இன்புற்ற
எமது தோழர்கள்!
Newly elected office bearers of AIBSNLPWA Tamilnadu circle
In the recently conducted Tamilnadu Circle Conference in Trichy, the following comrades have been elected for the ensuing tenure unanimously.
President : Com. V.Ramarao Chennai Tfc
Vice presidents : 1. Com. G.R.Dharmarajan Madurai
2. Com. T.vediappan Dharmapuri
3. Com. C.Palanisamy Coimbatore
4. Com. V.Kathaperumal Trichy
5. Com. V.Chandramohane Cuddalore
6. Com. D.Victorraju STR Chennai
7. Com. S.Sridharan STR Chennai
8. Com. S.Jeyachandran Karaikudi.
Secretary : Com. R.Venkatachalam Trichy.
Assistant
Secretaries : 1.Com.S.Sampathkumar Chn.Tfc
2. com S.Sammanasu Tirunelveli
3.Com N.Ambikapathy Tuticorin
4. Com.N.S.Dheenadayalan STR Chn
5. Com.S.Sundarakrishnan STR Chn
6. Com. K.Ramani Salem
7. Com.S.Suriyan Madurai
8. Com. B.Arunachalam Coimbatore
9. Com. S.Pattabhiraman Salem East
Treasurer : Com. S.Kalidas Chennai Tfc
Assistant
Treasurers : 1.Com. T.Murugesan Thanjavur
2. Com.Mangai SoundararajanChn.Tfc
Organising
Secretaries : 1. Com.V.S.Muthukumaran Vellore
2. Com.E.Kanagaraj Tirunelveli
3. Com. M.M.Vairamani Virudunagar
4. Com.B.David Nagercoil
5. Com. N.Dhanabal Kumbakonam
6. Com. Balasubramanian Madurai
7. Com. S.Francis Xavier Thanjavur
8. Com. M.Sambasivam Puducherry
Special Invitee : Com. R.Arumugam Trichy
Wish all the new office bearers all the very best.
அகில இந்தியத் தலைவர் தோழர் ராமன்குட்டி அவர்கள் உரை
அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் பி.எஸ்.ராமன்குட்டி அவர்களின் முத்தான கருத்துரை :
தமிழ் மாநில ஆயுள் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9000 என்பது இந்திய அளவில் நாலில் ஒரு பங்கு என உள்ளதைக் கூறிப் பாராட்டினார்.அதுபோல், இதுவரை நடந்த மாநில மாநாடுகளிலேயே திருச்சி மாநாடு மிகப் பெரியதாகவும் சிறப்பாகவும் உள்ளதெனக் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.
மத்திய அரசு ஓய்வூதியர் நாம் என்ற நிலையில், CCA Pension Rules 1972 விதிகளின்படிதான் நமக்கு ஓய்வூதியம் என்ற நிலையில், நமது ஓய்வூதியமும் மத்திய ஆரசின் 7வது சம்பளக் குழுவின் பரிந்துரையின்படி மாற்றம் செய்து தர வேண்டியது நியாயமான ஒன்றென வலியுறுத்திக் கூறினார்.
இத்தகைய ஓய்வூதிய மாற்றத்தை நாம் பெறுவதென்மது நமக்குத் தொடர்பிடியான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். வருங்காலங்களில் ஏற்படுத்தப்படும் மத்திய அரசின் சம்பளக்குழுக்களின் பரிந்துரைகளின் தொடர்ச்சியாக ஓய்வூதிய மாற்றம் தானே கிடைத்துவிடும் நிலைமை உண்டாகிவிடும் என்றும், அதை நாம் வென்று காட்டுவோம் எனவும் கூறினார்.
இத்தகைய ஓய்வூதிய மாற்றத்தின் சிறப்பைப் புரிந்துகொள்ளாமல், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு வழங்கவிருக்கும் 3வது சம்பள மாற்றத்தினைத் தொடர்புபடுத்திப் பேசும் பிற சங்கங்களின் பேதைமையைக் கூறி வருந்தினார்.
மேலும் நாம் வென்றெடுக்கப் போகும் பல கோரிக்கைகளையும் குறித்து விரிவாகப் பேசி தமிழ் மாநில மாநாட்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து அமைந்தார்.
08 August 2018
மாநாட்டு வரவேற்புக் குழு
திருச்சி மாநாட்டு வரவேற்புக் குழு - இவர்கள்,
எங்கள் வருகையை ஏற்று
வரவேற்று
ஊண் தந்து
உறையுள் தந்து
எங்களது மனமகிழ்வில் மனம் கனிந்தவர்கள்!
வரவேற்புக் குழுவின் திருச்சி தோழர்கள் அனைவருக்கும்,
தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் சார்பாக அன்பான வாழ்த்துகள்!
6வது தமிழ் மாநாடு தொடங்கியது!
நாள் : 07-08-2018 : செவ்வாய்க் கிழமை
இடம்: திருச்சி, வாசவி மகால்.
6வது தமிழ் மாநில மாநாடு காலை 0930 மணியளவில் தேசியக் கொடிஏற்றத்துடன் திருச்சி வாசவி மகாலில் இனிதே தொடங்கியது!
மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் தோழர்.வி.பி.காத்தபெருமாள் அவர்கள் நமது இந்தியத் தேசியக் கொடியினை ஏற்ற,
நமது அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் நலச் சங்கக் கொடியினை தமிழ் மாநிலத் தலைவர் தோழர்.வி.ராமராவ் அவர்கள் ஏற்ற,
தமிழ்மாநிலச் செயலாளர் தோழர்.கே.முத்தியாலு அவர்கள் கோரிக்கைகளை விண்ணதிர முழங்க, அதைக் காணுமுகத்தான் –
அட, ஆடி பிறந்ததே எனத்
திருவரங்கன் மனம் குளிர
வாசவி அரங்கம் உவகையுற,
இருமருங்கும் நீர் தழும்பிக் காவிரியும் ஓடிவர
மூத்தோர்கள் இல்லை இவர்கள் இளையோர் என
மலைக்கோட்டை நாதனும் தன் துந்துபியை முழங்க,
ஓய்வறியா ஓய்வூதியர்களின் எழுச்சி மாநாடு
இனிதே தொடங்கியது!
05 August 2018
திருச்சி மாநாடு
6வது தமிழ் மாநில மாநாட்டுச் சார்பாளர்களாகச் செல்லவிருக்கும் நமது தூத்துக்குடித் தோழர்கள் - பட்டியல் 2