அனைவருக்கும் வணக்கம்!
மாநாடு முடிந்து அனைவரும் பத்திரமாக ஊர் திரும்பி இருப்பீர்கள் என்று நம்புகிறேன். இரண்டு நாள் திட்டமிட்ட மாநாடு, திமுக தலைவர் மு.கருணாநிதி அவர்களின் மறைவை ஒட்டி முன்னரே முடிக்க வேண்டிய நிலை. இருப்பினும் முதல் நாள் (07-08-18) நிகழ்ச்சிகளிலேயே நமது ஆய்படு பொருளை முழுமையாக இல்லாவிட்டாலும், நிறைவாக நடத்தி முடித்தோம். நமது அகில இந்தியத் தலைவர்கள், தோழர்கள் ராமன்குட்டி, நடராஜன் D.G, விட்டோபன், அருணாசலம், முத்தியாலு ஆகியோர் நமது கோரிக்கைகளை விளக்கி சிறப்புரையாற்றினர். மாநாட்டில் முத்தாய்ப்பாக வரவேற்புக் குழுத் தலைவர் டாக்டர்.செந்தில்குமார் நல்லுசாமி அவர்களின் வரவேற்பு உரையும், இதயத்தை பாதுகாப்பது எப்படி? என்ற அவரின் செயல்முறை விளக்கமும் அமைந்து அனைவரின் பாராட்டையும் பெற்றது என்பது சிறப்பாகும். உணவு, தங்கும் வசதி, மாநாட்டு ஏற்பாடு என்று அனைத்திலும் ஒரு குறைகூட சொல்ல முடியாத அளவிற்கு மிகச் சிறப்பாக மாநில மாநாட்டை நடத்தி முடித்த வரவேற்புக் குழுவிற்கு பாராட்டும், நன்றியும், திருச்சி என்றாலே “திருப்பு முனை” என்ற சொல் வழக்கிற்கு அச்சாரம் சேர்க்கும் வகையில் மாநாடு நெஞ்சில் நீங்காத நிகழ்வாகி உள்ளது. நீண்ட அனுபவம் மிக்க மாநிலத் தலைவர் தோழர் வி.ராமராவின் தலைமையில் ஒரு மனதாக தேர்ந்தேடுக்கப்பட்ட அனைத்து நிர்வாகிகளின் ஆலோசனைகள், ஒத்துழைப்போடு நமது மாநில சங்கத்தின் செயல்பாட்டை சிறப்பாக்க நாம் எல்லோரும் உழைப்போம். விடைபெற்ற முன்னாள் நிர்வாகிகளின் ஆலோசனைகளையும் கேட்டறிவோம்.
நமது அமைப்பு தினத்தை (20-08-18) சிறப்பாக கொண்டாடுங்கள்.
18-09-18ல் நடைபெறும் அதாலத்திற்கு 16-08-18-க்குள் மாவட்டங்கள் பிரச்சனைகளை CCA அலுவலகத்திற்கு அதற்குண்டான படிவத்தில் அனுப்பி அதன் நகலை மாநிலச் சங்கத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தோழர் முத்தையாலு மாநாட்டில் அறிவித்ததை நினைவூட்ட விரும்புகிறேன்.
நமது முக்கிய கோரிக்கையான 7-வது ஊதியக் குழுவின் ஓய்வூதியப் பரிந்துரைகள் நமக்கும் நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளை முன் எடுத்து சென்று வெற்றி பெற அகில இந்திய சங்கம் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் நமது மாநில சங்கம் உறுதுணையாக நிற்கும்.
அகில இந்திய மாநாட்டை வெற்றிகரமாக்கிட “பூரி”க்குச் செல்ல ஆயத்தமாவோம். புதிய மாநில சங்க நிர்வாகிகள் தங்களது முகவரியையும் செல் பேசி எண்ணையும் அனுப்பி வைக்கவும்.
தோழமையுள்ள, R.வெங்கடாசலம், மாநிலச் செயலாளர்
எனது முகவரி :-
CSK Jains West Minster,
Arunachalam Road,
Saligramam, Chennai – 600 093
Email. rvtrichy@gmail.com
Cell No. 94433 71722