தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

29 August 2018

குறைகளும் தீர்வுகளும் (மாவட்ட அளவிலானவை)



தூத்துக்குடி  மாவட்ட  அளவிலான  சில  குறைகளைத்  தீர்க்க  வேண்டி  17-08-2018 அன்று நமது தூத்துக்குடி மாவட்டச் சங்கம்,  தூத்துக்குடி BSNL பொது மேலாளருக்குக் கடிதம் சமர்ப்பித்திருந்தது. (இது குறித்த செய்தி ஏற்கனவே நமது இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்தது)
சிலபல காரணங்களால் தள்ளிப்போன அமர்வு, தூத்துக்குடி மாவட்டத் துணைப்  பொது மேலாளர் திரு.சேவியர் லூர்துசாமி அவர்களின் முன்முயற்சியால் 24-08-2019 அன்று ஏற்பாடானது.

துணைப் பொது மேலாளர் திரு.சேவியர் லூர்துசாமி அவர்களுடனான நமது சந்திப்பு  24-08-2018 அன்று மாலை 4 மணியளவில் நடந்தேறியது. மிகக் குறைந்த நேர அவகாசம் கிடைத்தபோதும் நமது சங்கச் செயலர் எஸ்.சுப்பையா, இணைச் செயலர் எம்.பர்னபாஸ் மற்றும் இணைச் செயலர் கே.சித்திக் உமர் மூவரும் அமர்வில் கலந்துகொண்டனர்.
கீழ்க் கண்டவாறு குறைகள் விவாதம் செய்யப்பட்டு, அலுவலகம் சார்பாக முடிவுகள் தரப்பட்டுள்ளன:

1 & 2 :திருமதி. சாந்தி முத்துக்கிருஷ்ணன் & திரு. ஆல்பர்ட் வின்சென்ட் – இருவருக்கும் தர வேண்டிய 78.2% பாக்கி பணத்தைத் தரவேண்டியது சரியென்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பணப்பட்டுவாடா விரைவில் நடக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

3 : திரு.ராமலிங்கம் பெயர் மாற்றம் என்பது தமிழ்நாடு அரசு கெஸட் அல்லாது இந்தியக் கெஸட்டில் செய்யப்பட வேண்டும் எனத் துறையின் தரப்பில் எழுப்பப்பட்ட விசாரிப்பின்  சட்ட முன்வடிவை நமது சங்கம் கேள்வியாக வைத்திருக்கிறது. அலுவலகத் தரப்பிலான பதில் தரப்படும் என எதிர்பார்க்கிறோம்.

4. நமது சங்க உறுப்பினர்கள் 24+4 பேர்களுக்கு 2017-18ஆம் ஆண்டுக்கான  ரசீது அல்லாத மருத்துவப்படி கிடைக்காதது குறித்த குறை AO (Drawal) அவர்களிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வார அவகாசத்தில் தீர்வு தரப்படுமென்று எதிர்பார்க்கிறோம்.

5. எஸ்.சுந்தரராஜ் மற்றும் திரு.சத்தியசீலன் இருவருக்கும் 2வது NEPP பணப்பலன் கிடைக்காமல் ஏழாண்டுகளாக இழுத்தடிக்கப்படுவது குறித்த விவாதத்திற்கு, A.O இதை விரைவில் முடிவு செய்வார் என்ற பதில் தரப்பட்டது. (இது முந்தைய கூட்டத்தில் நம்மால் தரப்பட்ட கோரிக்கை. ) விரைவில் தீர்வு கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்.

கூட்ட ஏற்பாடு செய்து குறைகளைப் பேசித் தீர்க்க உதவிய துணைப் பொது மேலாளர் திரு.சேவியர் லூர்துசாமி அவர்களுக்கு எம் நன்றி!