அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் நலச் சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் தோழர் பி.எஸ்.ராமன்குட்டி அவர்களின் முத்தான கருத்துரை :
தமிழ் மாநில ஆயுள் உறுப்பினர்களின் எண்ணிக்கை 9000 என்பது இந்திய அளவில் நாலில் ஒரு பங்கு என உள்ளதைக் கூறிப் பாராட்டினார்.அதுபோல், இதுவரை நடந்த மாநில மாநாடுகளிலேயே திருச்சி மாநாடு மிகப் பெரியதாகவும் சிறப்பாகவும் உள்ளதெனக் குறிப்பிட்டு மகிழ்ந்தார்.
மத்திய அரசு ஓய்வூதியர் நாம் என்ற நிலையில், CCA Pension Rules 1972 விதிகளின்படிதான் நமக்கு ஓய்வூதியம் என்ற நிலையில், நமது ஓய்வூதியமும் மத்திய ஆரசின் 7வது சம்பளக் குழுவின் பரிந்துரையின்படி மாற்றம் செய்து தர வேண்டியது நியாயமான ஒன்றென வலியுறுத்திக் கூறினார்.
இத்தகைய ஓய்வூதிய மாற்றத்தை நாம் பெறுவதென்மது நமக்குத் தொடர்பிடியான பலனைத் தரக்கூடியதாக இருக்கும். வருங்காலங்களில் ஏற்படுத்தப்படும் மத்திய அரசின் சம்பளக்குழுக்களின் பரிந்துரைகளின் தொடர்ச்சியாக ஓய்வூதிய மாற்றம் தானே கிடைத்துவிடும் நிலைமை உண்டாகிவிடும் என்றும், அதை நாம் வென்று காட்டுவோம் எனவும் கூறினார்.
இத்தகைய ஓய்வூதிய மாற்றத்தின் சிறப்பைப் புரிந்துகொள்ளாமல், பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு வழங்கவிருக்கும் 3வது சம்பள மாற்றத்தினைத் தொடர்புபடுத்திப் பேசும் பிற சங்கங்களின் பேதைமையைக் கூறி வருந்தினார்.
மேலும் நாம் வென்றெடுக்கப் போகும் பல கோரிக்கைகளையும் குறித்து விரிவாகப் பேசி தமிழ் மாநில மாநாட்டுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து அமைந்தார்.