நாள் : 07-08-2018 : செவ்வாய்க் கிழமை
இடம்: திருச்சி, வாசவி மகால்.
6வது தமிழ் மாநில மாநாடு காலை 0930 மணியளவில் தேசியக் கொடிஏற்றத்துடன் திருச்சி வாசவி மகாலில் இனிதே தொடங்கியது!
மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலைவர் தோழர்.வி.பி.காத்தபெருமாள் அவர்கள் நமது இந்தியத் தேசியக் கொடியினை ஏற்ற,
நமது அகில இந்திய பி.எஸ்.என்.எல் ஓய்வூதியர் நலச் சங்கக் கொடியினை தமிழ் மாநிலத் தலைவர் தோழர்.வி.ராமராவ் அவர்கள் ஏற்ற,
தமிழ்மாநிலச் செயலாளர் தோழர்.கே.முத்தியாலு அவர்கள் கோரிக்கைகளை விண்ணதிர முழங்க, அதைக் காணுமுகத்தான் –
அட, ஆடி பிறந்ததே எனத்
திருவரங்கன் மனம் குளிர
வாசவி அரங்கம் உவகையுற,
இருமருங்கும் நீர் தழும்பிக் காவிரியும் ஓடிவர
மூத்தோர்கள் இல்லை இவர்கள் இளையோர் என
மலைக்கோட்டை நாதனும் தன் துந்துபியை முழங்க,
ஓய்வறியா ஓய்வூதியர்களின் எழுச்சி மாநாடு
இனிதே தொடங்கியது!