வங்கிகள் சங்கக் கட்டிடம், வரதராஜபுரம், தூத்துக்குடியில்
AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டம் சார்பாக
“உலக மகளிர் நாள்” கொண்டாடப்பட்டது.
திருமதி B.செல்வபிரமிளா அவர்கள் கூட்ட நிகழ்வுகளுக்குத் தலைமையேற்றுத் தலைமை உரையாற்றி நிகழ்வுகளைத் தொடங்கி வைத்தார். திருமதி S. பாக்கியலெட்சுமி அவர்கள் முன்னிலை வகித்தார்.
தோழர். கிருஷ்ணமூர்த்தி, தூத்துக்குடி நகர வங்கிகள் சங்கம் மற்றும் தோழர். கைலாசமூர்த்தி ஆகியோர் மகளிர் நாள் வாழ்த்துக்களைக்கூறி அருமையாக உரையாற்றினர். அதனைத் தொடர்ந்து, AIBSNLPWA தமிழ் மாநிலச் சங்க உதவிச் செயலர் தோழர்.என்.அம்பிகாபதி அவர்கள் சிறப்பான வாழ்த்துரை வழங்கினார்.
கூட்ட நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகத் திருமதி அ.ம.சோனல், உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை, தூய மரியன்னைக் கல்லூரி, தூத்துக்குடி, அவர்கள் கலந்துகொண்டு , “சங்க இலக்கியத்தில் மக்களின் வாழ்வியல் நெறி” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
திருமதி அ.ம.சோனல் அவர்கள் தமது உரையில், சங்க இலக்கியங்களில் குறிப்பாகக் காப்பியங்களில் கண்ணகி, மாதவி போன்றோரின் அறநெறி வாழ்க்கையை எடுத்துக்காட்டாகக் கொண்டு விளக்கினார். அதேவேளையில், தற்காலச் சமூகச் சூழ்நிலையில் மகளிர் தம் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய தேவையினையும் எடுத்துக்கூறி மிகச் சிறப்பாக உரையாற்றினார்.