தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

09 June 2019

ஜூன் மாதக் கூட்டம் - 08-06-2019

ஜூன் மாதக் கூட்டம், 
 08-06-2019 அன்று காலை 10:300 மணிக்கு, 
சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 


மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.

கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலர் என்.அம்பிகாபதி, மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜீவானந்தம், , மாவட்ட இணைச் செயலர்கள் எம்.பர்னபாஸ், மாவட்டப் பொருளாளர் எஸ்.பால்சாமி ஆகியோர் விவாதங்களில் சிறப்பாகப் பங்கேற்றுப் பேசினர்.

மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா அவர்கள், சங்கச் செயல்பாடுகள் குறித்தும், கடந்த இரண்டுமாத உறுப்பினர்கள் வரவு குறித்தும், 2018-19 ஆண்டுக்கான மருத்துவப் படிகள் வழங்கப்படுவது தாமதம் ஆவது குறித்தும் பேசினார்.

கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின:

1. வருகிற 25-06-2019 அன்று நமது மாவட்டச் சங்கத்தின்.

2. செயற்குழுக் கூட்டத்தில் இவ்வாண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நடத்தும் நாள் குறித்து விவாதிப்பது.

 3. வருகிற செப்டம்பர் 28, 29 தேதிகளில் நாம் நடத்தவிருக்கிற மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பது.

 4. வருகிற 21-06-2019 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஓய்வூதியர் அதாலத்திற்கு நமது மாவட்டச் சங்கத்தின் சார்பில் கே.சித்திக் உமர் அவர்கள் கலந்து கொள்வார்.

விவாதங்களில் அனைத்துத் தோழர்களும் சிறப்பாகப் பங்கேற்றனர்.

கூட்டத்தில் 16 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.