கடந்த 21-06-2019 அன்று சென்னையில் நடந்த குறைதீர் மன்றத்தில் (அதாலத்) நமது தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மா.தலைவர் எல்.தாமஸ், மா.செயலர் எஸ்.சுப்பையா, மற்றும் மா.இணைச் செயலர் கே.சித்திக் உமர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நமது மாவட்டத்திலிருந்து சென்னை CCAவுக்கு ஏழு குறைகள் தீர்வுக்காக அனுப்பியிருந்தோம்.
தீர்வுகள் :
திருமதி.சேக்கம்மா மற்றும் திரு.எஸ்.மாரியப்பன் ஆகியோரது குறைகளுக்கு முழுமையானத் தீர்வு தரப்பட்டது. பணம் அவர்களுக்கு விரைவில் கிடைக்குமென்று எதிர்பார்க்கிறோம்.
திரு.சுப்பாராயலுக்கு look-on officiating என்பதால் ஓய்வூதிய மாற்றம் தரமுடியாது என மறுக்கப் பட்டது.
திரு.எஸ்.பால்சாமி அவர்களுக்கான ஓய்வூதிய மாற்றம் CAT வழக்கின் தீர்ப்பு சாதகமாக இருந்தால் மட்டுமே தரப்படுமென்று கூறப்பட்டது.
வி.செல்வராஜ் அவர்களது 2 குறைகளும் விரைவில் தீர்க்கப்படுமென்ற உறுதி தரப்பட்டது.
பி.கடற்கரையாண்டி அவர்கள் தங்கள் குறைக்காகப் பிஎஸ்என்எல்லை அணுகக் கூறப்பட்டது.
அதாலத் அரங்கில் தரப்பட்டப் பதிலின் நகல் கீழே காண்க: