தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

13 June 2019

Extended EC meeting - 25.06.2019


அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் நலச் சங்கம் 
தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி – 1 
விரிவடைந்த மாவட்டச் செயற்குழுக் கூட்டம் 

தோழர்களே, தோழியர்களே!
       வருகிற 25-06-2019, செவ்வாய்க் கிழமையன்று, நமது தூத்துக்குடி மாவட்டச் செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

இடம் : வங்கிகள் சங்கக் கட்டிடம், வரதராசபுரம், தூத்துக்குடி-1

நேரம் : காலை 10:30 மணி

அனைத்து மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டுகிறோம். நமது சங்கத்தின் பிற உறுப்பினர்களும் கலந்துகொள்ளலாம்.

 நிகழ்ச்சி நிரல் 

1. தலைவர் முன்னுரை
2. வரவேற்புரை
3. இரங்கல்
4. மாவட்டச் சங்க நிகழ்வுகள்
5. மாவட்ட ஆண்டுப் பொதுக்குழு நடத்துவது சம்பந்தமாக.
6. மாநிலச் சங்கச் செயற்குழு வரவேற்புக் குழு அமைத்தல்
7. நிதிநிலை
 8. தலைவர் அனுமதியுடன் பிற
9. நன்றியுரை

தோழமை வாழ்த்துக்களுடன்,
எஸ்.சுப்பையா
மாவட்டச் செயலாளர்