மாவட்டச் செயற்குழுக் கூட்டம்
25-06-2019 அன்று காலை 10:30 மணிக்கு
வரதராசபுரம் வங்கிகள் சங்கக் கட்டிடத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார். தொடக்கமாக இறைவணக்கமும் அதைத் தொடர்ந்து கூட்டத்தலைவரின் முன்னுரையும் அமைந்தன.
25-06-2019 அன்று மறைந்த தோழர் U. முருகேசன், திருவைகுண்டம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப் பெற்றது.
அதன் பின்னர், கடந்த 8-6-2019ல் தீர்மானிக்கப்பட்டதன் அடிப்படையில் , நிகழ்ச்சிகள் குறித்த விவாதங்கள் பின்வருமாறு நடந்தேறின.
மாவட்டச் செயலாளர் திரு எஸ்.சுப்பையா அவர்கள் சங்க நடவடிக்கைகள் குறித்து விரிவாகப் பேசினார். அவர் தனது உரையில், (1) மருத்துவப் படி தரவேண்டிய தூத்துக்குடி BSNL அலுவலகத்தில் ஏற்படும் தாமதம், (2) அதாலத் கூட்டரங்கில் நமது சங்கம் எடுத்துக்கொண்ட வழக்கு மற்றும் தீர்வுகள், (3) கடந்த இரண்டு மாதத்தில் நமது சங்கத்தின்உறுப்பினர் சேர்க்கை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் ஆகியன குறித்து விரிவாகப் பேசினார்.
மாவட்ட இணைச் செயலாளர் தனது உரையில் (1) அதாலத்துக்கான வழக்குகளைக் கையாண்ட முறைகள் அதன் தொடர் நடவடிக்கைகள் (2) உறுப்பினர்கள் தங்களது ஓய்வூதியம் மற்றும் வருமான வரி குறித்து அறிந்துகொள்ள வேண்டிய செய்திகள் (3) சங்கத்தைப் பலப்படுத்திட உறுப்பினர்கள் தவறாது தரவேண்டிய சந்தா மற்றும் நன்கொடைகள் ஆகியன குறித்துப் பேசினார்.
தொடர்ந்து, மாவட்டப் பொதுக்குழுக் கூட்டத்தை ஜூலை மாதம் நடத்துவதென்றும், செப்டம்பர் 28, 29ஆம் தேதிகளில் மாநிலச் செயற்குழுக் கூட்டத்தை ஏற்று நடத்துவதென்றும் பெரும்பான்மை அடிப்படையில் தீர்மானிக்கப் பட்டது. தோழர் ஏ. தேவதாஸ், தோழர் ஏ. சோமசுந்தரம், தோழர் எம்.பர்னபாஸ், தோழர் கே.பாலசுப்பிரமணியன் ஆகியோர் இது குறித்த விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இரண்டு கூட்டங்களுக்கான செலவுகள் குறித்த விவாதத்தில் அனைவரும் சிறப்பாகப் பங்கேற்றனர். ஒவ்வொரு உறுப்பினரிடமிருந்து குறைந்த பட்சம் ரூ.500ம், செயற்குழு உறுப்பினர்களிடம் ரூ.1000மும் வசூலிக்க வேண்டுமென்றும், இது குறித்த நோட்டீஸ் ஒன்று அச்சடித்து வழங்குவதென்றும் தீர்மானிக்கப்பட்டன.
தோழர் எஸ்.பால்சாமி, மா.பொருளாளர் அவர்கள் நிதிநிலை குறித்த அறிக்கையினையும், இரண்டு கூட்டங்கள் நடத்திடத் தேவையான தோராயமான தொகையினையும், நன்கொடைகளை மும்முரமாகச் செயல்பட்டுப் பிரிக்க வேண்டியதன் தேவையையும் குறித்தும் உரையாற்றினார்.
தோழர்.டி.செந்தூர்பாண்டி அவர்கள் நன்றியுரை ஆற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது.