தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

17 June 2019

வருமானவரி வேண்டாம் - நிதித்துறைக்கு DG அவர்களின் கடிதம்

பென்சனுக்கு வருமான வரியிலிருந்து விலக்குஅளிக்கக் கோரி மத்திய சங்க துணைத் தலைவர் தோழர் DG யின் மகஜர் மாதிரி வடிவம்: -

நிதியமைச்சகத்திற்கு நமது சங்கம் சார்பாக கீழ்கண்ட மகஜரை அனுப்ப தயவு செய்து பரிசீலிக்க வேண்டுகிறேன் -

“பென்சனுக்கு வருமான வரியிலிருந்து விலக்களிக்க வேண்டும்” என்பது இந்த நாட்டில் உள்ள அனைத்து பென்சனர்களின் அழுத்தமான உள்ளக்கிடக்கையாக உள்ளது.

 திரும்பத் திரும்ப, பென்சன் என்பது குருதி தொடர்பான ஒத்த சொத்துரிமை போன்றது என மாண்புமிகு உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பை பல தடவை வெளிப்படுத்தியுள்ளது.

 2015-16 பட்ஜெட்டில் மோடி - ஜி தலைமையில் அமைந்த NDA அரசு ரூ.1,000 கோடிக்கு மேல் செல்வ வரி ( wealth Tax) - ஐ ஒழித்துக்கட்டியது .ஏற்கனவே இது 30 லட்சத்திற்கு மேல் வெறும் 1 சதவீதம் தான் இருந்தது.

 2017-2018-ன் பட்ஜெட்டில் 50 கோடிக்கு குறைவாக குறிப்பிட்ட காலத்தில் மொத்த உற்பத்தி செய்யப்பட்ட பொருள், மொத்த விற்பனை ( Turn over ) உள்ள பொதுத் துறை நிறுவனங்கருக்கு 30 சதவீத வருமான வரியை 25 சதவீதமாக குறைத்தது. இதன் மூலம் ரூ.7000 கோடி வருவாயை அரசு இழந்தது. தற்போது ரூ.250 கோடியாக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பை உயர்த்தும் நோக்கமாக இது செய்யப் பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

 2017-2018-ல் மொத்த பென்சன்செலவினமாக (இதர ஓய்வூதிய கொடை உட்பட ) ரூ.1,31, 201 கோடியாக மத்திய அரசுக்கு இருந்தது. பென்சனுக்கு செலவினமாக ரூ.80,000 கோடி மட்டுமே அதில் இருந்தது. அதில் சராசரியாக 10% எடுக்கும் Uட்சத்தில் பென்சனுக்கான வரியை ரத்து செய்தால் ரூ.8000 கோடியை மட்டும் அரசு இழக்க வேண்டியிருக்கும். நுகர்வோர் பொருட்களை வாங்குவதற்கு பென்சன் பணம் செலவிடப்படுவதால், உற்பத்தி தேவை அதிகமாகி விடும். மேலும் உற்பத்தியை அதிகமாக்கவும், வேலை வாய்ப்பை அதிகமாக்கவும் பயன்படும்.

 வங்கிகளிலும், அஞ்சலகங்களிலும் பென்சனர்கள் சேமித்து வைக்கும் தொகை, தொழில் முதலீடுகளுக்கும், அதன் மூலம் வேலை வாய்ப்பை பெறவும் வழி ஏற்படும்.

 மோடி தலைமையிலான அரசு பென்சனுக்கு வருமான வரியை ஒழிக்குமானால் 15 கோடி மக்களின் ( பென்சனர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள்) நன்மதிப்பை பெற முடியும்.

 மேற்கண்ட முன்மொழி தலை சீரிய முறையில் கணக்கில் கொண்டு ஆவண செய்ய வேண்டுகிறோம் " -

- இந்த மகஜர் குறித்த தங்களுடைய கருத்துக்களை, ஆலோசனைகளை 18.06.19-க்குள் வாட்ஸ் அப் ( 80560 66995 - Mohan) அல்லது aibsnlpwatncircle @gmail .com என்கிற இ- மெயிலுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

...தமிழாக்கம்: த.அன்பழகன், மாவட்டச் செயலர், புதுச்சேரி