19 February 2019
19-02-2019 ஆர்ப்பாட்டம்
19-02-2019: BSNL ஊழியர்களின் 18-02-2019 முதல் 20-02-2019 வரையிலான 3-நாள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து, நமது AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டம் சார்பாக, GM அலுவலகம் முன்பு காலை 11:00 முதல் 12:30 வரை ஆர்ப்பாட்டம் நடத்தப்பெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உதவித் தலைவர் எம்.ஜீவானந்தம் தலைமையேற்றார்.
வேலைநிறுத்தம் ஏன் என்பது குறித்தும், மத்திய அரசுகள் மேற்கொண்டு வரும் BSNL விரோதப் போக்கினால் படிப்படியாக இழப்பை நோக்கி நகரும் அவலத்தை எடுத்துக் கூறியும், BSNL ஊழியர்களின் நியாயமான 8 அம்ச கோரிக்கைகளை விளக்கியும், தோழர்கள் எஸ்.பாலு (AIBSNLPWA), அந்தோணி பிச்சை (SNEA), பாலக் கண்ணண் (NFTE), சொர்ணராஜ் (SNEA) ஆகியோர் உரையாற்றினார்கள்.
AIBSNLPWA மாநில உதவிச் செயலர் எம்.அம்பிகாபதி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
மாவட்டச் செயலாளர் எஸ்.சுப்பையா நன்றியுரை கூற, ஆர்ப்பாட்டம் சிறப்பாக நடந்தேறியது.
காரிலும் ஆட்டோவிலும், பிறர் கைத்தாங்கலாக கோல் ஊன்றி வந்தாலும் , நியாயமான போராட்டத்தில், சுட்டெரிக்கும் வெயிலும் எங்களுக்குப் பொருட்டல்ல, நாங்கள் முன்னிற்போம் என்று வந்து கலந்துகொண்ட நமது ஓய்வூதியர்களை எண்ணி பெருமிதம் கொள்கிறோம்.
போராட்டத்தில் திரளாக வந்திருந்து கலந்துகொண்ட 70 ஓய்வூதியர் தோழர்களுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
BSNL ஊழியர்களின் போராட்டம் வெல்க!