நமது
AIBSNLPWA தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின்
பெப்ரவரி மாதக் கூட்டம்,
09-02-2019 அன்று காலை 11:00 மணிக்கு
சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத் தலைவர் திரு.எல்.தாமஸ் அவர்கள் கூட்டத்திற்குத் தலைமையேற்றார். கூட்டத்தில் மாநிலத் துணைச் செயலர் என்.அம்பிகாபதி, மாவட்டத் துணைத் தலைவர் எம்.ஜீவானந்தம், , மாவட்ட இணைச் செயலர்கள் எம்.பர்னபாஸ், கே.சித்திக் உமர், மாவட்டப் பொருளாளர் எஸ்.பால்சாமி ஆகியோர் ஓய்வூதிய மாற்றம் சம்பந்தமான தற்போதைய நிகழ்வுகள் குறித்து விரிவாகப் பேசினர்.
கூட்டத்தில் கீழ்க்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின:
1) 29-01-2019ல் நடைபெற்ற CBMPA கூட்டத்தில் முடிவு செய்யப்பெற்ற தீர்மானங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டது.
1a) CBMPA கூட்டத்தில் தீர்மானிக்கப் பெற்றபடி நமது தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் உறுப்பினர்களிடமிருந்து பெறப்பட்ட 217 கோரிக்கை அஞ்சல் அட்டைகள் அனுப்புவதற்குத் தயாராக உள்ள செய்தி தரப்பட்டது.
1b) 8-2-2019 அன்று புது தில்லியில் நடைபெற்ற மாபெரும் பேரணி குறித்த செய்தி பெருமையுடன் பரிமாறப்பட்டது.
1c) நமது மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.நட்டார்ஜி அவர்களைச் சந்தித்து ஓய்வூதியம் சம்பந்தமான குறிப்பாணையைத் தந்து அவருடைய ஆதரவைப் பெறுவது குறித்த தகவல் விவாதிக்கப்பட்டது.
2) சிறப்பாக நடைபெற்றுவரும் வாட்ஸ்-ஆப்பில் நமது உறுப்பினர்களின் கடமை மற்றும் பொறுப்பு குறித்த விவாதத்தில் உறுப்பினர் அனைவரும் தங்கள் சிறப்பான கருத்துக்களைத் தெரிவித்தனர்.
3) வருகிற 8-3-2019 அன்று மகளிர் தின விழாவினைச் சிறப்பாக நடாத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
கூட்டத்திற்கு 16 உறுப்பினர்கள் வருகை தந்து சிறப்பித்தனர்.