31 July 2019
7வது சம்பளக் குழு அறிக்கையின்படியான ஓய்வூதிய மாற்றம் = கோரிக்கை விளக்கம்
அன்பு நண்பர்களுக்கு இனிய காலை வணக்கம்
பி எஸ் என் எல்லில் பணிபுரிந்து ஓய்வு பெற்று மத்திய அரசின் consolidate fund of India (Civil estimate) கன்சாலிடெட் பண்டிலிருந்து ஓய்வு ஊதியம் பெறுபவர்களுக்கு ஏழாவது சம்பள குழு அறிக்கை படி 1 .1 .2017 முதல் பென்ஷன் மாற்றம் தர வேண்டும் என்ற கோரிக்கை இருப்பதை நாம் அறிவோம்.
பெரும்பாலான ஓயவூதியர் சங்கங்கள் ஏழாவது சம்பளக் குழுவின் அறிக்கைப்படி பென்ஷன் மாற்றம் கேட்கும் நிலையில், ஒரு சில சங்கங்கள் மீண்டும் மீண்டும் பிஎஸ்என்எல் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள மாற்றம் வந்த பிறகுதான் பென்ஷன் மாற்றம் வேண்டும் என்ற நிலையில் உள்ளதை நாம் அறிவோம் . (அந்த நண்பர்களுக்கும் விளக்கம் தரும் பதிவுதான் இந்த பதிவு) .
இந்த பதிவு பிஎஸ்என்எல்/ எம்டிஎன்எல் ஓய்வூதியர்களின் கூட்டமைப்பு அதனுடைய கன்வீனர் திரு கங்காதரராவ் அவர்களின் அருமையான விளக்கப் பதிவு .
இது ஒரு நீண்ட பதிவு இதை பொறுமையாக படிக்கவும். *
இது ஒரு ஆறு பக்கம் உள்ள pdf கோப்பு அதனுடைய ஆங்கில கோப்பு இணைக்கப்பட்டுள்ளது. ***
அதனுடைய சுருக்கம் தமிழில் எளிதாக புரிந்து கொள்ளும் முறையில் உங்கள் பார்வைக்கு ****
பிஎஸ்என்எல் சம்பள மாற்றத்திற்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதியம் மாற்றத்திற்கும் சம்பந்தம் இல்லை :
இதற்கு காரணங்கள்:-
1.)மத்திய அரசு ஊழியர்களும் பிஎஸ்என்எல்/ எம்டிஎன்எல் இருந்து ஓய்வு பெற்றவர்களும் ccs pension rules 1972 கீழ் வருகிறார்கள்
2.) அதனுடைய துணைவிதி 8 விதி 37 of ccs pension rules 1972 .... என்ன சொல்கிறது என்றால் ஒரு நிரந்தர அரசு ஊழியர் பின்னாட்களில் பொதுத்துறையில் சேர்க்கப்பட்டால் அவர் அரசு துறையில் பணியாற்றிய காலத்தையும் பொதுத் துறையில் பணியாற்றிய காலத்தையும் சேர்த்து ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
3 .)இந்த விதியின் படி இந்தியாவில் உள்ள பொதுத் துறைகளில் பிஎஸ்என்எல் மட்டுமே இந்த சிறப்பு விதிக்கு கட்டுப்பட்டது .
4 .) ஆறாவது சம்பளக் குழுவின் பரிந்துரையின் போது மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுக்கப்பட்ட (DCRG )டி ஸி ஆர் ஜி (பணிக்கொடை) அதனுடைய உச்சவரம்பு அதனுடைய கமுடேஷன் டேபிள். உயர்த்தப்பட்ட குடும்ப ஓய்வூதியம் பத்து வருடங்களுக்கு ... 80, 90, 100 வயதைக் கடந்தவர்களுக்கு கொடுக்கப்படும் உயர்ந்த பட்ச பென்சன்(அடிஷனல்,) இது எல்லாம் 1 .1 .2006 முதல் bsnl ida ஓய்வூதியர்களுக்கும் வழங்கப்பட்டதை நாம் அறிவோம்.
5.)அதேபோல் பிஎஸ்என்எல் பணியாளர்களுக்கு குறைந்தபட்சம் அதிகபட்சம் ஓய்வூதியம் பிஎஸ்என்எல் சம்பளவிகிதம் படி வழங்காமல் (பி எஸ் என் எல் சம்பள விகிதம் அதிகமாய் இருந்தாலும் )மத்திய அரசின் சம்பள விதிகப்படி குறைத்து வழங்கப்பட்டுள்ளது.
6.)மத்திய அரசு ஓய்வூதியர்களும் பிஎஸ்என்எல்/ எம்டிஎன்எல் ஓய்வூதியர்களும் பென்ஷன் பெறுவது சி வில் எஸ்டிமேட்டில் இருந்து .
7 .)மத்திய அரசு ஓய்வூதியர்களும் பிஎஸ்என்எல் எங்கள் ஓய்வூதியர்களும் மத்திய அரசு மத்திய அரசு மருத்துவ திட்டங்களின் உறுப்பினர்கள். (Central Govt Health Services )
8 .)இவர்களின் ஓய்வு ஊதியம் மத்திய அரசின் நிதியிலிருந்து கொடுக்கப்படுவதால் பிஎஸ்என்எல்/எம் டி என் எல் நிதி நிலைமைக்கும் பென்ஷன் வழங்குவதற்கும் சம்பந்தமில்லை.
9 .)2000 ல் பிஎஸ்என்எல் உருவாக்கும்போது சேர்க்கப்பட்ட அலுவலர்கள், அதிகாரிகள் அத்தனை பேரும் 2026ல் ஓய்வு பெற்று விடுவார்கள் அதன்பின் அங்கு பிஎஸ்என்எல் க்கு தேர்ந்தெடுத்த பணியாளர்கள் மட்டுமே இருப்பார்கள் . ஆனால் 2026 ல் ஓய்வு பெறுபவர்கள் 2027 க்கு பிறகு இன்னும் 20 வருடங்கள் இருப்பார்கள் . எனவே பிஎஸ்என்எல் சம்பள மாற்றத்திற்கும் பிஎஸ்என்எல் ஓய்வூதிய மாற்றத்திற்கும் சம்பந்தமே இல்லை.
*** ( இதில் இணைக்கப்பட்டுள்ள இனைப்புகள் 2 ,3,4 இவைகளில் பென்ஷன் மாற்றம் சி டி ஏ ...ஐ டி ஏ கன்வெர்ஷ்ன் எளிமையாய் ..அரசுக்கு ஆகும் செலவு..... ஓய்வூதியருக்கு கூடுதலாக மாதம் ஒன்றுக்கு கிடைக்கும் தொகை போன்ற விளக்கங்கள் மிக அழகாக கொடுத்துள்ளார்கள்.
இதன்படி ஒருவருக்கு 14.22 % மட்டுமே கூடுகிறது இது மத்திய அரசு ஊழியர்களுக்கு கொடுத்த அளவுக்குள் தான்.
இதில் இன்னொரு முக்கியமான அம்சம் பணியாற்றிய காலத்தில் பிஎஸ்என்எல் பணியாளரின் உயர்ந்த பட்ச சம்பளம் விகிதத்திற்கு pension contribution ....பி எஸ் என் எல் நிர்வாகதால் அரசுக்கு செலுத்தப்பட்டுள்ளது உத்தேசமாக இதே சம நிலையில் உள்ள மத்திய அரசு ஊழியர்களுக்கு செலுத்தியதை விட பிஎஸ்என்எல் நிர்வாகம் 90 கோடி அதிகமாக செலுத்தியுள்ளது ).
தர்மம் வெல்லும்
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
UTK,NELLAI
தமிழாக்கம் : AIBSNLPWA, TIRUNELVELI
(நன்றி : U திருமலை குமாரசாமி, நெல்லை)
28 July 2019
23-07-2019 : தூத்துக்குடி மாவட்ட 9வது ஆண்டு விழா நிகழ்வுகள்
அகில இந்திய பி எஸ் என் எல் ஓய்வூதியர் நலச் சங்க தூத்துக்குடி மாவட்டக் கிளையின் 9வது ஆண்டு விழா பொதுக்கூட்டம்
நாள் : 23-07-2019 (செவ்வாய்க் கிழமை)
இடம் : DA கல்யாண மண்டபம், வடக்கு ரதவீதி, தூத்துக்குடி
நேரம் : காலை 10:30 மணி
ஆண்டு விழாத் தொடக்கமாக மாவட்டத் தலைவர் திரு எல்.தாமஸ் அவர்கள் தேசியக் கொடியினை ஏற்றிவைத்தார். அகில இந்தியத் துணைப் பொதுச் செயலர் தோழர். எஸ்.அருணாச்சலம் அவர்கள் சங்கக் கொடி ஏற்றினார். மாநிலத் துணைச் செயலர் விண்ணதிர முழக்கங்கள் எழுப்பினார்.
ஆண்டு விழா பொதுக்கூட்ட அவைக்கு மாவட்டத் தலைவர் எல்.தாமஸ் அவர்கள் தலைமையேற்றார்.
தமிழ் வாழ்த்துப் பா உடன் நிகழ்ச்சி இனிதே தொடங்கியது.
அஞ்சலி :
கடந்த ஆண்டு மறைந்த தோழர்களுக்கு அவையில் ஒரு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.
தலைவர் முன்னுரை :
அவைத் தலைவர் எல்.தாமஸ் தனது தலைமை உரையில், சங்க வளர்ச்சியின் தேவை குறித்தும் .பென்ஸன் ரிவிஷன் இன்றைய நிலை பற்றியும் முன்னுரையாகத் தந்தார்.
வரவேற்புரை :
மாவட்ட இணைச் செயலர் திரு எம்.திரு பர்னபாஸ் அவர்கள் தமது உரையில் மத்திய அரசு ஓய்வூதிய மாற்றம் 1.1.2017 முதல் ஏன் வழங்கிட வேண்டும் என்பது குறித்தும் அதன் நியாயங்கள் குறித்தும் விவரித்தார். முன்பு 2006 ல் நடந்த ஓய்வூதியம் மாற்றம் நடந்த நிகழ்வு போல் இதுவும் நமக்குத் தரப்படும் என உறுதியாகச் சொன்னார்.
பணியாளர் சங்கம், தங்களது சம்பள மாற்றத்துக்குப் பின்னர்தான் ஓய்வூதியம் மாற்றம் செய்ய வேண்டும் எனும் கோரிக்கையை முன்னெடுத்து உள்ளது. அது நமக்கு ஒரு தடைக்கல்லாக உள்ளது. ஆயினும் நாம் வெற்றி பெறுவோம்.
மேலும் நாம், 78.2 % DA இணைப்புடன் கூடிய ஓய்வூதியத்தை 1.1.2017 முதல் பின் தேதி கணக்கிட்டு நிலுவை வழங்கிடவும் கோரிக்கை வைத்துள்ளோம்.
பென்சனுக்கு வருமான வரி விலக்குக் கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் உள்ளது.
கேரளா வெள்ள நிவாரணம் மற்றும் கஜா புயல், புனே புயல் ஆகியவற்றிற்கும் நமது தோழர்கள் தாராளமாகப் பண உதவிகள் கொடுத்துள்ளதையும் குறிப்பிட்டு உரையாற்றினார்.
வாழ்த்துரை வழங்கியோர் :
மாவட்டத் துணைத் தலைவர் திரு எம். ஜீவானந்தம் அவர்கள் :
நமது சங்கத்தில் 70000 + உறுப்பினர்கள் உள்ளனர். மிகவும் வலிமையாய் உள்ளோம்; ஓய்வூதியர் நலம் காக்கும் முறையில் சிறப்பாய்.2009 ல் ஆரம்பித்து 10 வருடத்தில் இன்று மிகப் பெரிய சங்கமாய் உள்ளோம். 2006 க்கு முன்பு ஓய்வுபெற்றவருக்கு பென்ஸன் ரிவிஷன் போராடி வாங்கிக் கொடுத்த வரலாறு பற்றி விவரித்தார். 10 ஆண்டு பணி முடித்தோருக்கும் ஓய்வூதியம், கடைசி மாச சம்பளத்தில் 50%. குடும்ப பென்ஷன், ஆதரவற்ற கைம்பெண்ணுக்கும் சலுகை, எனப் பல சலுகைகளைப் பெற்றுத் தந்தது நமது சங்கம். நன்மைகள் தொடர்ந்து பல செய்யும் நமது சங்கம், தீராத கோரிக்களை நீதி மன்றத்தை அணுகி வழக்குகள் தொடர்ந்து போராடித் தீர்வு காணும் முயற்சி எடுக்கிறது என பரப்புரை தந்தார்.
திரு எஸ். இசக்கியப்பன் :
மாவடட பொறுப்பாளர்களின் சேவைகளைப் பாராட்டினார். சங்கம் பலம் பொருந்திய சங்கமாய் மிளிர்ந்திட வாழ்த்தினார்.
திரு எஸ்.பால்சாமி, மாவட்டப் பொருளாளர்:
சங்கம் வளர்பிறை போல வளரும் நிலையில், உறுப்பினர் பிரச்சனைகளை மாநில, அகில இந்தியத் தலைவர்கள் சரியாகப் புரிந்து தீர்த்து வருவது பாராட்டுக்கு உரியது என உரைத்தார். .
திரு ஏ. பரமசிவம், மாவட்டத் துணைத் தலைவர் :
2000 ல் DOT என்பது BSNL ஆக மாற்றப் பட்டபோது, அரசு ஓய்வூதியத்தை உறுதி செய்து போட்டது வரலாற்று ஒப்பந்தம் என்றார். கிராமங்களில் டெலிபோன் சேவைகள் தருவதால் பி எஸ் என் எல் பெரும் நிதி இழப்பு ஆகிறது. அதற்கு அரசு நிது உதவி தரவேண்டும் என்பது நியாயமான ஒன்று என்றார். ஆனால் இன்று உலா வரும் செய்திகள் மிகவும் கவலை தருவதாய் உள்ளது; பி எஸ் என் எல் சொத்துக்களைக் கபளீகரம் செய்திட சிலபல முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன என்பது பற்றியும் சொன்னார்.
திரு ஏ.மாடசாமி, மாவட்ட துணைச் செயலர் :
மத்திய, மாநில, மாவட்டச் சங்கத்தின் சாதனைகள் பற்றி விவரித்தார். ஓய்வுதியர் பிர ச்சனைகள் தீர்க்கும் முறையினை பாராட்டினார். சங்கத்தின் பொருளாதர நிலையை உயர்த்திட உதவிய உறுப்பினர்களை நன்றி பாராட்டினார். சங்க வளர்ச்சிக்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என கூறினார் .
நெல்லை பாலு, மாவட்ட அமைப்புச் செயலர் :
1968 போராட்டம் குறித்த தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். Fr 17 பற்றி விளக்கமும் தந்தார். தந்தார் .இதற்கு திரு அருணாச்சலம் அவர்கள் தரும் பதில் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்றார். பணியாளர் சங்க பழைய நிகழ்வுகளை நினைவு கூர்ந்தார். மருத்துவப் படிக்கான உதவித் தொகை ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் கோரிக்கை விடுத்தார். பணியாளர் பணியின் போது இறந்தால், அவர்ஊம் வாரிசுக்கு இனி மத்திய அரசுப் பணி வழங்கிட முயற்சிகள் செய்திடல் வேண்டும் என்றும் உரையாற்றினார்.
சிறப்புரை :
திரு.என்.அம்பிகாபதி, மாநிலத் துணைச் செயலர்
தோழர் எஸ். அருணாச்சலம், அகில இந்திய துணைச் செயலர் : (அவர்களது உரை, தனித் தொகுப்பாகத் தரப்பட்டுள்ளது)
ஆண்டறிக்கை :
கடந்த ஆண்டு நடைபெற்ற 8வது பொதுக் குழுவுக்குப் பின்னரான .. முதல் .. வரையிலான காலத்திற்கான ஆண்டறிக்கையினை அவையின் முன் மாவட்டச் செயலர் எஸ்.சுப்பையா அவர்கள் வாசித்தளித்தார். அவை ஒப்புதல் அளித்தது.
நிதி நிலை அறிக்கை :
… முதல் … வரையிலான காலத்திற்காண பொருளாதார நிதிநிலை அறிக்கையினை, திரு.எஸ்.பால்சாமி, மாவட்டப் பொருளாளர் அவர்கள் அவை முன் வாசித்தளித்தார். அவை ஒப்புதல் அளித்தது.
நன்றியுரை :
மாவட்ட இணைச் செயலர் திரு. கே.சித்திக் உமர் அவர்கள், கூட்டத்தில் கலந்துகொண்ட 162 உறுப்பினர்களுக்கும் மற்றும் நிகழ்வினைச் செம்மையாக நடாத்த உதவிய அனைவருக்கும் நன்றியுரை கூற, கூட்டம் இனிதே நிறைவுற்றது.
23-07-2019 : தூ-டி 9வது ஆண்டு விழா - 70 அகவை நிறைவு செய்தோருக்கு கௌரவம் செய்யப்பட்டது
தூத்துக்குடி மாவட்டச் சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள, 70 அகவையை நிறைவு செய்தவர்கள் (01-01-2019 முதல் 30-06-2019க்குள்) :
1. திரு. கே.பாலசுப்பிரமணியன், Retd. SDE, தூத்துக்குடி
2. திரு. ஆர்.ஜெயபால், Retd.SSS(O), தூத்துக்குடி
3. திரு. ஏ.குருநாதன், Retd.TM, தூத்துக்குடி
4. திரு. எம்.பால் கார்லோஸ் கனகு, Retd .SDE, தூத்துக்குடி
5. திரு. எம்.செல்வராஜ், Retd.TM, தூத்துக்குடி
6. திரு. ஜி.காந்தி சட்டநாதன், Retd.TM, கோவில்பட்டி
7. திரு. எஸ்.தொம்மை ஆரோக்கியம், Retd.JTO, கோவில்பட்டி
கூட்ட அவையில், நான்கு உறுப்பினர்களைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.
1. திரு. கே.பாலசுப்பிரமணியன், Retd. SDE, தூத்துக்குடி
2. திரு. ஆர்.ஜெயபால், Retd.SSS(O), தூத்துக்குடி
3. திரு. ஏ.குருநாதன், Retd.TM, தூத்துக்குடி
4. திரு. எம்.பால் கார்லோஸ் கனகு, Retd .SDE, தூத்துக்குடி
5. திரு. எம்.செல்வராஜ், Retd.TM, தூத்துக்குடி
6. திரு. ஜி.காந்தி சட்டநாதன், Retd.TM, கோவில்பட்டி
7. திரு. எஸ்.தொம்மை ஆரோக்கியம், Retd.JTO, கோவில்பட்டி
கூட்ட அவையில், நான்கு உறுப்பினர்களைப் பாராட்டிப் பொன்னாடை அணிவித்து மகிழ்ந்தோம்.
தூ-டி 9வது ஆண்டுவிழா - எஸ்.அருணாச்சலம் அவர்களின் சிறப்புரை
23-07-2019ல் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட 9வது ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தோழர் எஸ். அருணாச்சலம், அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர், அவர்களின் பரப்புரை :
10 வது ஆண்டில் நமது சங்கம் அடியெடுத்து வைக்கிறது. தூத்துக்குடியில் இப்போது உறுப்பினர் 400 + ஆக உள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டச் சங்கம் நமது மாநிலச் செயற்குழுவை ஏற்று நடத்தவுள்ளது. அதனை சிறப்பாய் முடிக்கத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடித் தொழிற்சங்கத்தின் சிறப்புகளை பெருமையுடன் நினைவு கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ' பி எஸ் என் எல் ஓய்வூதியம் போல் இப்பொழுது பணியாற்றும் பலருக்கு இதுபோல் உத்தரவாதமான பென்ஸன் இல்லை. மே வங்கம் தவிர இந்தியா முழுவதும் புதிய பென்ஸன் திட்டம் தான். ஆந்திராவில் பழைய பென்ஸன் வர இருக்கிறது. 2004 க்கு பிறகு வேலைக்கு சேர்ந்தவர் கள் சிலருக்கு பழைய பென்ஸன் வழங்கிட தீர்ப்பு வந்துள்ளது. கேரள நீதி மன்ற தீர்ப்பு பழைய பென்ஸனுக்கு சாதகமாய் உள்ளது. போராடினால் எல்லோருக்கும் இந்த பலன் கிடைக்கும்" என்றார்.
பி எஸ் என் எல் எம் ஆர் எஸ் மருத்துவத் திட்டம் :
தொடர்ந்து, பி எஸ் என் எல் எம் ஆர் எஸ் ..மருத்துவ உதவி மாற்று திட்டம் பற்றிய ஆலோஷனைகள் குறித்தும் பேசினார். இதுபற்றி அரசு இன்னும முடிவெடுக்க வில்லை என்றும் ஜூலைக்கு பிறகு தான் முடிவு வரலாம் என்றும் கூறினார். புதிய சி எம் டியின் பழைய நடவடிக்கைகழைப் பார்க்கும்போது, புதிய மரு தத்துவ திட்டம் எம் டி என் எல் போல் வர வாய்ப்பு உண்டு என்று கூறினார். பி எஸ் என் எல் ஆண்டு ஒன்றுக்கு 10000 கோடி பற்றாக்குறை இருப்பதால் பி எஸ் என் எல் எம் ஆர் எஸ் தொடர வாய்ப்பு குறைவு. அதனால், CGHS ல் சேர ஆலோசனை தந்தார். நெல்லையில் இந்த வசதி உள்ளது. இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதற்கு ஆண்டு கட்டணம் உண்டு. ஆனால் இதற்கு பி எஸ் என் எல் நிதி தரவும் விதி உள்ளது எனக் குறிப்பிட்டார்.
பென்ஸன் ரிவிஷன் :-
இன்னும் சிலர் பென்ஸன் ரிவிஷன் சம்பள ரிவிஷனுக்குப் பிறகு என சொல்லும் நிலை உண்டு. ஆனால் பென்ஸனர் கூட்டமைப்பு பென்ஸன் ரிவினை சம்பள ரிவிஷனிலிருந்து டி லிங்க் பண்ண கோரிக்கை கொடுத்துள்ளது. இப்போது எல்லோரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பென்ஸன் ரிவிஷன் எந்த பார்முலா?
DOT இன்னும் இதற்கான பதிலைத் தர வில்லை. ஆயினும், நமது துறைஅமைச்சர் திறமை சாலி. மதுரையில் அவரை நான் சந்திந்த போது (மதுரை திரு ஸ்ரீ நிவாசன் அவர்களின் உதவியால்) அவர், “பிரதம அமைச்சர் மற்றும் நிதிஅமைச்சர்தான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும்” மேலும், நமது தலைவர்கள் துறை மந்திரியைச் சந்தித்த போது கேட்கப்படட கேள்விக்கும் சரியான விளக்கம் தந்த பிறகு, DOT கொடுத்த பதில் பற்றியும் பேசினார். 2000 ல் நடந்த போராட்டத்தில் போட்ட அக்ரிமெண்ட் பற்றி விளக்கம் தந்தார். மேலும் அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், “ பி எஸ் என் எல் நிதி உதவி அரசு கொடுக்கும் . சொத்து முழுவதும் பி எஸ் என் எல் கணக்கில்தான் இருக்கும். இதற்குச் செலவு செய்ய வேண்டியது DOT . 2000 முதல் 2019 வரை தொழிற்சங்கம் கோரிக்கை வைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது” என்றார். இவ்வாறு அமைச்சர் கூறியதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து அ இ துணைச்செயலர் பேசினார்.
இன்றைய அரசின் தேர்தல் அறிக்கை விபரம் தந்தார் . வங்கியின் வாரக் கடன் தள்ளுபடி கார்ப்பரேட்டுக்குப் பெருமளவில் தந்திருப்பதைக் குறிப்பிட்டார். கார்ப்பரேட் ஆண்டு வருமானத்தில் 40000 கோடி வரை 25% வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றார்
சங்க வளர்ச்சி :
நமது சங்கத்தில் அகில இந்திய அளவில் 70000 உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் மீதம் உள்ள நண்பர்களை உறுப்பினர் ஆக்க அனைவரும் முயல வேண்டும் எனக் கூறினார். பென்ஸன் ரிவிஷனுக்கு சங்கம் நடாத்தவிருக்கும் போராட்டங்கள் பற்றி விவரித்தார். சங்கத்தின் வலிமையே எதிர்கால கோரிக்கைகள் நிறைவேற்றிட உதவும் என்றார்.
தொடர்ந்து, தூத்துக்குடியில் நடைபெறவிருக்கும் மாநிலச் செயற் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துத் தனது உரையை நிறைவேற்றினார்.
25-07-2019 அன்று சென்னையில் மத்திய சங்க செயலக கூட்டம் நடைபெற்றது. மத்திய சங்க தலைவர் தோழர் ராமன்குட்டி , பொதுசெயலர் தோழர் கங்காதர ராவ் , பொருளாளர் தோழர் விட்டோபன், துணை தலைவர்கள் தோழர் கோபாலகிருஷ்ணன் , நடராஜன் , சுகுமாரன் , துணைப் பொதுசெயலர்கள் தோழர் முத்தியாலு மற்றும் தோழர் வரப்பிரசாத் , உதவி பொது செயலர் தோழியர் ரத்னா , உதவி பொருளாளர் தோழர் ராமராவ் , தமிழ் மாநில செயலர் தோழர் வெங்கடாச்சலம் , சென்னை மாநில பொருளாளர் தோழர் கண்ணப்பன் ஆகியோர் கலந்துகொண்டனர் .
அதுபோழ்து நம் ஓய்வூதியர் பிரச்சினைகள் தீவிரமாக விவாதிக்கப்பட்டன . நம்முடைய பிரதான கோரிக்கையான மத்திய ஏழாவது சம்பள குழு பரிந்துரைகளின் அடிப்படையில் ஓய்வூதிய மாற்றம் அடைந்திட எடுக்கப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன .
அந்த விபரங்கள் விரைவில் மத்திய சங்க அறிக்கை மூலம் வெளி வரும்.
17 July 2019
23-08-2019 அதாலத் கூட்ட அறிவிப்பு
தோழர்களே,
கடந்த 21-06-2019 அன்று PCCA சென்னை அறிவித்திருந்த அதாலத் கூட்டத்தில் கலந்து கொண்டு 7 பிரச்சனைகளை நாம் முன்னெடுத்தோம். அது குறித்த தகவல்கள் முன்னதாகத் தரப்பட்டுவிட்டது.
இப்போது, இந்திய அளவிலான Department of Pension & Pension Welfare (DoP&PW) செயலர் அறிவிப்பின் தொடர்ச்சியாக 23-08-2019 அன்று மீண்டும் ஒரு அதாலத் சென்னையில் நடைபெற உள்ளது.
இதனை அரும் வாய்ப்பாகக் கொண்டு, குறைதீர் ஆயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பிரச்சனைகளை 24-07-2019க்குள் நமது சங்க அலுவலகத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த அதாலத் தேசிய அளவில் அனைத்து மத்திய ஊழியர்களுக்குமான அறிவிப்பின்படி கூட்டப் படுகிறது. ஆதலால், இது வழக்கமாக நடக்கும் அதாலத் போக கூடுதலான ஒன்று ஆகும்.
(குறிப்பு : PCCA , சென்னை அலுவலகம் அறிவித்திருந்த 20-09-2019 அன்றும் திருநெல்வேலியில் மற்றொரு 'அதாலத்' நடைபெறும் என்று நம்புகிறோம்)
கடந்த 21-06-2019 அன்று PCCA சென்னை அறிவித்திருந்த அதாலத் கூட்டத்தில் கலந்து கொண்டு 7 பிரச்சனைகளை நாம் முன்னெடுத்தோம். அது குறித்த தகவல்கள் முன்னதாகத் தரப்பட்டுவிட்டது.
இப்போது, இந்திய அளவிலான Department of Pension & Pension Welfare (DoP&PW) செயலர் அறிவிப்பின் தொடர்ச்சியாக 23-08-2019 அன்று மீண்டும் ஒரு அதாலத் சென்னையில் நடைபெற உள்ளது.
இதனை அரும் வாய்ப்பாகக் கொண்டு, குறைதீர் ஆயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பிரச்சனைகளை 24-07-2019க்குள் நமது சங்க அலுவலகத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இந்த அதாலத் தேசிய அளவில் அனைத்து மத்திய ஊழியர்களுக்குமான அறிவிப்பின்படி கூட்டப் படுகிறது. ஆதலால், இது வழக்கமாக நடக்கும் அதாலத் போக கூடுதலான ஒன்று ஆகும்.
(குறிப்பு : PCCA , சென்னை அலுவலகம் அறிவித்திருந்த 20-09-2019 அன்றும் திருநெல்வேலியில் மற்றொரு 'அதாலத்' நடைபெறும் என்று நம்புகிறோம்)
BSNL மற்றும் MTNLக்கு உயிர்ப்பூட்டம்
கடந்த 16-07-2019 அன்று உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களின் வழிநடத்துதலில் அமைச்சர்கள் குழு (GoM) ஒன்று கூடி BSNL மற்றும் MTNLக்கு உயிர்ப்பூட்டம் தர பலவித முன்மொழிதல்களை (proposal) ஆலோசித்ததாகச் செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஊழியர் எண்ணிக்கைதான் பிரச்சனையா? இக்குழுவினுடைய செயல்பாட்டின் மொத்த அழுத்தமும் ஊழியர்களைக் குறைப்பதற்கே எனத் தெரிகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதைவிட அதிகமான BSNL ஊழியர்களைக் கொண்டு லாபம் ஈட்டியதை, அரசுக்கு அறிவுரை கூறும் வெளியுலக அறிவுப் பெட்டகங்களும் மறந்துவிட்டனர். இந்த அமைச்சர்கள் குழு ஊழியர்களுக்கு ‘VRS package’ குறித்து ஆலோசித்துள்ளது. இந்த பணபலன்(package) BSNLக்கு ₹.6364 கோடியும் MTNLக்கு 2120 கோடியும் செலவு தரக்கூடியதாக இருக்கும். முன்னர், இத்திட்டம் நிதித்துறையால் மறுக்கப்பட்டிருந்தது. அமைச்சகச் செயலர்களின் உயர்மட்டக் குழுவாலும் இது குறித்து தீர்மானம் எதுவும் எடுக்க முடியவில்லை.
4G அலைவரிசை :
4G அலைவரிசைக்கான செயல்பாட்டுச் செலவாக BSNLக்கு ₹.14000 கோடியும் MTNLக்கு 6000 கோடியும் ஆகும் என்று செய்தி ஊடகங்கள் அறிவிக்கின்றன.
அரசிடமிருந்து நிதியுதவி கிடைக்காது :
முன்னர், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்கள் ₹.1000 கோடி நிதிநிலை அறிக்கையில்(budget) உடனடியாக ஒதுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். ஆனால், நிதித்துறை அமைச்சரோ இது குறித்து தனது நிதிநிலை அறிக்கை உரையில் ஏதும் குறிப்பிடாமல் விட்டு விட்டார்.
மேல் கூறியவாறு நடைபெற்ற ஆலோசனைக் குழுவில் திரு அமித்ஷா தவிர , திரு ரவி சங்கர் பிரசாத் அவர்களும், திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் உறுப்பினர்கள் என்பது அறியத் தக்கது. .......
17-07-2019 : AIBSNLPWA CHQ செய்திக் குறிப்பு : தமிழாக்கம்
ஊழியர் எண்ணிக்கைதான் பிரச்சனையா? இக்குழுவினுடைய செயல்பாட்டின் மொத்த அழுத்தமும் ஊழியர்களைக் குறைப்பதற்கே எனத் தெரிகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதைவிட அதிகமான BSNL ஊழியர்களைக் கொண்டு லாபம் ஈட்டியதை, அரசுக்கு அறிவுரை கூறும் வெளியுலக அறிவுப் பெட்டகங்களும் மறந்துவிட்டனர். இந்த அமைச்சர்கள் குழு ஊழியர்களுக்கு ‘VRS package’ குறித்து ஆலோசித்துள்ளது. இந்த பணபலன்(package) BSNLக்கு ₹.6364 கோடியும் MTNLக்கு 2120 கோடியும் செலவு தரக்கூடியதாக இருக்கும். முன்னர், இத்திட்டம் நிதித்துறையால் மறுக்கப்பட்டிருந்தது. அமைச்சகச் செயலர்களின் உயர்மட்டக் குழுவாலும் இது குறித்து தீர்மானம் எதுவும் எடுக்க முடியவில்லை.
4G அலைவரிசை :
4G அலைவரிசைக்கான செயல்பாட்டுச் செலவாக BSNLக்கு ₹.14000 கோடியும் MTNLக்கு 6000 கோடியும் ஆகும் என்று செய்தி ஊடகங்கள் அறிவிக்கின்றன.
அரசிடமிருந்து நிதியுதவி கிடைக்காது :
முன்னர், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்கள் ₹.1000 கோடி நிதிநிலை அறிக்கையில்(budget) உடனடியாக ஒதுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். ஆனால், நிதித்துறை அமைச்சரோ இது குறித்து தனது நிதிநிலை அறிக்கை உரையில் ஏதும் குறிப்பிடாமல் விட்டு விட்டார்.
மேல் கூறியவாறு நடைபெற்ற ஆலோசனைக் குழுவில் திரு அமித்ஷா தவிர , திரு ரவி சங்கர் பிரசாத் அவர்களும், திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் உறுப்பினர்கள் என்பது அறியத் தக்கது. .......
17-07-2019 : AIBSNLPWA CHQ செய்திக் குறிப்பு : தமிழாக்கம்
14 July 2019
தூத்துக்குடி மாவட்ட 9வது ஆண்டுவிழா பொதுக்கூட்ட அழைப்பிதழ்!
வருகின்ற செப்டம்பர் மாதம் 28.09.2019 & 29.09.2019 ஆகிய இரு நாட்கள் மாநிலச் செயற்குழு நமது மாவட்டத்தில் நடத்த வேண்டியிருப்பதால் உறுப்பினர் அனைவரும் மனமுவந்து நன்கொடை வழங்கக் கேட்டுக் கொள்கிறோம்.
13 July 2019
மாதாந்திரக் கூட்டம் - ஜூலை 2019
ஜூலை மாதக் கூட்டம்,
13-07-2019, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று
காலை 10:30 மணிக்கு
சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநில உதவிச் செயலர் திரு.என். அம்பிகாபதி அவர்கள் தலைமையேற்றுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அண்மையில், 08-07-2019 அன்று மறைந்த P.தாமஸ், (OS(TG) ஓய்வு, அவர்களுக்கு அவை தன் அஞ்சலியைச் செலுத்தியது.
மாவட்டச் செயலர் திரு.எஸ். சுப்பையா, இணைச் செயலர் எம்.பர்னபாஸ், பொருளாளர் எஸ்.பால்சாமி, அமைப்புச் செயலர் வி.கோவிந்தன், செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவசங்கர நயினார், ஆகியோர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர்.
கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின:
1 ஆண்டுவிழா நடைபெறவிருக்கும் D.A கல்யாண மண்டபம், வடக்கு ரத வீதி, தூத்துக்குடியில் நல்லவொரு ஒலியமைப்பு மற்றும் மதிய உணவு குறித்த ஏற்பாடுகள் செய்வது.
2 70 அகவை நிறைவு செய்த ஆறு தோழர்களைக் கௌரவிப்பது.
3 மாநிலச் செயற்குழுவுக்கான வரவேற்புக் குழு, உணவு வழங்கள் குழு, நிதிக் குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது.
4 மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்கான தங்குமிடம், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைப்பது
5 ஆண்டு விழா மற்றும் மாநிலச் செயற்குழுவுக்கான நிதிநிலை ஆதாரத்தைப் பெருக்குவது.
விவாதங்களில் அனைத்துத் தோழர்களும் சிறப்பாகப் பங்கேற்றனர்.
கூட்டத்தில் 14 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
10 July 2019
Pension - The responsibility of CCA Units
With the promulgation of Rule 37(A) of the CCS Pension Rules, the government has a critical role in the payment of pension to the erstwhile government servants absorbed in the BSNL. The CCA Unit is responsible for budgeting of pension expenditure and authorization of retirement benefits on CDA and IDA pay scale.
A Telecom Pensioner can avail the opportunity of drawing his pension from either a Public Sector Bank or Post Office. They also have the option to switch-over at any time from Bank to Post Office and vice-versa as per their convenience.
The office of the Controller of Communication Accounts, Tamil Nadu is responsible for budgeting, authorisation, monitoring of pension disbursement and its audit in the state of Tamil Nadu and UT of Puduchery for the retirees/pensioners of DoT, BSNL and MTNL. The pension unit of the office is located at Ist Floor, TNT Complex, 60, ETHIRAJ SALAI, Chennai-600008, TAMIL NADU.
The pensioners can approach the office of CCA TN through dedicated toll free line or by writng to us. There is a dedicated Pension Relation Manager for attending the pensioners' complaints and facilitate its prompt disposal.
In adddition the CCA office holds PENSION ADALAT periodically for speedy settlement of pensioners' grieveances
07 July 2019
பிஎஸ்என்எல் இழப்பு ₹ 14,000 கோடி?
அரசு நிறுவனமாகிய பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் கணக்கீடு செய்யப்பட்ட இழப்பீடு சுமார் ₹ 14,000 கோடி என்றும், 2018-19ஆம் ஆண்டு வருமானம் ₹.19,308 கோடி குறைந்துள்ளது என்றும் பாராளுமன்றத்தில் தகவல் தரப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனத்தின் இடைக்கால இழப்பீடு,
2015-16ல் ₹.4,859 கோடி
2016-17ல் ₹.4,793 கோடி
2017-18ல் ₹ 7,993 கோடி.
இந்த இழப்பு மேலும் விரிவடைந்து ₹ 14,202 கோடியாக 2018-19ல் உயரும் என மத்தியத் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்கள் எழுத்து வடிவமான பதிலை மக்கள் மன்றத்தில் தந்துள்ளார்.
"கைபேசிப் பிரிவில், கடினமான போட்டி காரணமாக வெகுவாகக் குறைக்கப்பட்ட கட்டணம், ஊழியர்களுக்கான செலவுகள், தொலைத் தொடர்புச் சந்தையில் தரவுகளே (data) மையமாகிப்போன உலகில் 4G சேவை இல்லாமை (சில இடங்கள் தவிர), ஆகிய இவையே பிஎஸ்என்எல் இழப்புக்கான காரணங்கள் " எனப் பிரசாத் கூறினார்.
தொலைத் தொடர்புச் சந்தையில் 2016ல் ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவுக்குப் பிந்தைய வரிசையான விளைவுகளில் ஒன்றாக பிஎஸ்என்எல் நிறுவனமும் வருமானச் சரிவைக் காண நேர்ந்துள்ளது.
06 July 2019
THE COURT CASES
As all of you know we had filed two cases before Ernakulam bench of Central Administrative Tribunal.
1. to get pension arrears with 78.2% IDA from 1-1-2007 instead of 10-6-2013, as granted. (Arrears Case in short)
2. to get pension refixed @ 50% of Last Pay Dawn for all BSNL Pensioners retired prior to 1-1-2006. (LPD case in short)
After many postponement again and again, The Arrears Case (338/18) is listed for 18-6-2019. We hope it will be taken up for hearing.
The LPD case (346/18) was also postponed again and again and finally listed for 7-6-2019. One day before that date it was re-posted for 12-6-2019 by notification. Again on 11-6-2019 it is once again posted to 21-6-2019 by notification.
Earlier there was only one judge. Now both judges are available. We hope that the Tribunal will take up the cases for hearing.
.......................................................................................
ANOMALY CASE: On 16-12-2016, CAT Principal bench pronounced its judgement in our favour in the anomaly case . Unfortunately, instead of respecting the court order, DoT preferred to file appeal in High Court. The high court of Delhi gave a very long gap to consider the case. Now, it is posted to 18, July 2019. More than 4200 BSNL employees retired from October 2000 to July 2001 have suffered huge loss in their pension due to the anomaly. Half of them have already left this earth. Remaining people are 79 years old. They are waiting for the justice.
02 July 2019
புதிய உறுப்பினர்கள் வரவு - ஜூன் 2019
ஜூன் 2019 மாதம் 10 புதிய உறுப்பினர்கள் நமது சங்கத்தில் இணைந்துள்ளார்கள்
தூத்துக்குடி :
1. K.சிவசைலம், Retd. DGM
2. S.ஜெபசிங் எழிலரசு, Retd. DGM
3. V.ராஜேந்திரன், Retd.TT
கோவில்பட்டி:
1. S. மல்லிகா, Retd. OS(P)
2. V. மேகநாதன், Retd. TT
3. S. ராமர், Retd. TT
4. A. ராஜேந்திரன், Retd. ATT
5. K. சண்முகவேல், Retd. ATT
6. J. இஸ்மாயில், Retd.TT
திருச்செந்தூர் :
1. M. சூசை மைக்கேல், Retd. TT
Subscribe to:
Posts (Atom)