28 July 2019
தூ-டி 9வது ஆண்டுவிழா - எஸ்.அருணாச்சலம் அவர்களின் சிறப்புரை
23-07-2019ல் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்ட 9வது ஆண்டுவிழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய தோழர் எஸ். அருணாச்சலம், அகில இந்திய துணைப் பொதுச் செயலாளர், அவர்களின் பரப்புரை :
10 வது ஆண்டில் நமது சங்கம் அடியெடுத்து வைக்கிறது. தூத்துக்குடியில் இப்போது உறுப்பினர் 400 + ஆக உள்ளது. மேலும், தூத்துக்குடி மாவட்டச் சங்கம் நமது மாநிலச் செயற்குழுவை ஏற்று நடத்தவுள்ளது. அதனை சிறப்பாய் முடிக்கத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். மேலும் தூத்துக்குடித் தொழிற்சங்கத்தின் சிறப்புகளை பெருமையுடன் நினைவு கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில், ' பி எஸ் என் எல் ஓய்வூதியம் போல் இப்பொழுது பணியாற்றும் பலருக்கு இதுபோல் உத்தரவாதமான பென்ஸன் இல்லை. மே வங்கம் தவிர இந்தியா முழுவதும் புதிய பென்ஸன் திட்டம் தான். ஆந்திராவில் பழைய பென்ஸன் வர இருக்கிறது. 2004 க்கு பிறகு வேலைக்கு சேர்ந்தவர் கள் சிலருக்கு பழைய பென்ஸன் வழங்கிட தீர்ப்பு வந்துள்ளது. கேரள நீதி மன்ற தீர்ப்பு பழைய பென்ஸனுக்கு சாதகமாய் உள்ளது. போராடினால் எல்லோருக்கும் இந்த பலன் கிடைக்கும்" என்றார்.
பி எஸ் என் எல் எம் ஆர் எஸ் மருத்துவத் திட்டம் :
தொடர்ந்து, பி எஸ் என் எல் எம் ஆர் எஸ் ..மருத்துவ உதவி மாற்று திட்டம் பற்றிய ஆலோஷனைகள் குறித்தும் பேசினார். இதுபற்றி அரசு இன்னும முடிவெடுக்க வில்லை என்றும் ஜூலைக்கு பிறகு தான் முடிவு வரலாம் என்றும் கூறினார். புதிய சி எம் டியின் பழைய நடவடிக்கைகழைப் பார்க்கும்போது, புதிய மரு தத்துவ திட்டம் எம் டி என் எல் போல் வர வாய்ப்பு உண்டு என்று கூறினார். பி எஸ் என் எல் ஆண்டு ஒன்றுக்கு 10000 கோடி பற்றாக்குறை இருப்பதால் பி எஸ் என் எல் எம் ஆர் எஸ் தொடர வாய்ப்பு குறைவு. அதனால், CGHS ல் சேர ஆலோசனை தந்தார். நெல்லையில் இந்த வசதி உள்ளது. இது நமக்கு ஒரு நல்ல வாய்ப்பு. இதற்கு ஆண்டு கட்டணம் உண்டு. ஆனால் இதற்கு பி எஸ் என் எல் நிதி தரவும் விதி உள்ளது எனக் குறிப்பிட்டார்.
பென்ஸன் ரிவிஷன் :-
இன்னும் சிலர் பென்ஸன் ரிவிஷன் சம்பள ரிவிஷனுக்குப் பிறகு என சொல்லும் நிலை உண்டு. ஆனால் பென்ஸனர் கூட்டமைப்பு பென்ஸன் ரிவினை சம்பள ரிவிஷனிலிருந்து டி லிங்க் பண்ண கோரிக்கை கொடுத்துள்ளது. இப்போது எல்லோரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பென்ஸன் ரிவிஷன் எந்த பார்முலா?
DOT இன்னும் இதற்கான பதிலைத் தர வில்லை. ஆயினும், நமது துறைஅமைச்சர் திறமை சாலி. மதுரையில் அவரை நான் சந்திந்த போது (மதுரை திரு ஸ்ரீ நிவாசன் அவர்களின் உதவியால்) அவர், “பிரதம அமைச்சர் மற்றும் நிதிஅமைச்சர்தான் இது குறித்து முடிவு எடுக்க வேண்டும்” மேலும், நமது தலைவர்கள் துறை மந்திரியைச் சந்தித்த போது கேட்கப்படட கேள்விக்கும் சரியான விளக்கம் தந்த பிறகு, DOT கொடுத்த பதில் பற்றியும் பேசினார். 2000 ல் நடந்த போராட்டத்தில் போட்ட அக்ரிமெண்ட் பற்றி விளக்கம் தந்தார். மேலும் அமைச்சர் தொடர்ந்து பேசுகையில், “ பி எஸ் என் எல் நிதி உதவி அரசு கொடுக்கும் . சொத்து முழுவதும் பி எஸ் என் எல் கணக்கில்தான் இருக்கும். இதற்குச் செலவு செய்ய வேண்டியது DOT . 2000 முதல் 2019 வரை தொழிற்சங்கம் கோரிக்கை வைத்திருந்தால் இந்த நிலை வந்திருக்காது” என்றார். இவ்வாறு அமைச்சர் கூறியதைக் குறிப்பிட்டுப் பேசினார்.
தொடர்ந்து அ இ துணைச்செயலர் பேசினார்.
இன்றைய அரசின் தேர்தல் அறிக்கை விபரம் தந்தார் . வங்கியின் வாரக் கடன் தள்ளுபடி கார்ப்பரேட்டுக்குப் பெருமளவில் தந்திருப்பதைக் குறிப்பிட்டார். கார்ப்பரேட் ஆண்டு வருமானத்தில் 40000 கோடி வரை 25% வரியாகக் குறைக்கப்பட்டுள்ளது என்றார்
சங்க வளர்ச்சி :
நமது சங்கத்தில் அகில இந்திய அளவில் 70000 உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் மீதம் உள்ள நண்பர்களை உறுப்பினர் ஆக்க அனைவரும் முயல வேண்டும் எனக் கூறினார். பென்ஸன் ரிவிஷனுக்கு சங்கம் நடாத்தவிருக்கும் போராட்டங்கள் பற்றி விவரித்தார். சங்கத்தின் வலிமையே எதிர்கால கோரிக்கைகள் நிறைவேற்றிட உதவும் என்றார்.
தொடர்ந்து, தூத்துக்குடியில் நடைபெறவிருக்கும் மாநிலச் செயற் குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துத் தனது உரையை நிறைவேற்றினார்.