தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

13 July 2019

மாதாந்திரக் கூட்டம் - ஜூலை 2019





ஜூலை மாதக் கூட்டம், 
 13-07-2019, மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமையன்று 
 காலை 10:30 மணிக்கு சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. 

கூட்டத்திற்கு மாநில உதவிச் செயலர் திரு.என். அம்பிகாபதி அவர்கள் தலைமையேற்றுக் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். 

அண்மையில், 08-07-2019 அன்று மறைந்த P.தாமஸ், (OS(TG) ஓய்வு, அவர்களுக்கு அவை தன் அஞ்சலியைச் செலுத்தியது. 

மாவட்டச் செயலர் திரு.எஸ். சுப்பையா, இணைச் செயலர் எம்.பர்னபாஸ், பொருளாளர் எஸ்.பால்சாமி, அமைப்புச் செயலர் வி.கோவிந்தன், செயற்குழு உறுப்பினர் எஸ்.சிவசங்கர நயினார், ஆகியோர் பங்கேற்றுத் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். 

 கூட்டத்தில் கீழ்கண்டவை குறித்த விவாதங்கள் நடந்தேறின: 

1 ஆண்டுவிழா நடைபெறவிருக்கும் D.A கல்யாண மண்டபம், வடக்கு ரத வீதி, தூத்துக்குடியில் நல்லவொரு ஒலியமைப்பு மற்றும் மதிய உணவு குறித்த ஏற்பாடுகள் செய்வது. 

2 70 அகவை நிறைவு செய்த ஆறு தோழர்களைக் கௌரவிப்பது. 

3 மாநிலச் செயற்குழுவுக்கான வரவேற்புக் குழு, உணவு வழங்கள் குழு, நிதிக் குழு ஆகியவற்றிற்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பது. 

4 மாநிலச் செயற்குழுக் கூட்டத்திற்கான தங்குமிடம், துண்டுப் பிரசுரங்கள் மற்றும் விளம்பர பலகைகள் வைப்பது 

5 ஆண்டு விழா மற்றும் மாநிலச் செயற்குழுவுக்கான நிதிநிலை ஆதாரத்தைப் பெருக்குவது. 

விவாதங்களில் அனைத்துத் தோழர்களும் சிறப்பாகப் பங்கேற்றனர். 

கூட்டத்தில் 14 உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.