தூத்துக்குடி மாவட்ட ஓய்வூதியர் சங்க இணையதளம் உங்களை அன்போடு வரவேற்கிறது

17 July 2019

23-08-2019 அதாலத் கூட்ட அறிவிப்பு

தோழர்களே,

கடந்த 21-06-2019 அன்று PCCA சென்னை அறிவித்திருந்த அதாலத் கூட்டத்தில் கலந்து கொண்டு 7 பிரச்சனைகளை நாம் முன்னெடுத்தோம். அது குறித்த தகவல்கள் முன்னதாகத் தரப்பட்டுவிட்டது.

 இப்போது, இந்திய அளவிலான Department of Pension & Pension Welfare (DoP&PW) செயலர் அறிவிப்பின் தொடர்ச்சியாக 23-08-2019 அன்று மீண்டும் ஒரு அதாலத் சென்னையில் நடைபெற உள்ளது.

 இதனை அரும் வாய்ப்பாகக் கொண்டு, குறைதீர் ஆயத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய பிரச்சனைகளை 24-07-2019க்குள் நமது சங்க அலுவலகத்தில் தருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இந்த அதாலத் தேசிய அளவில் அனைத்து மத்திய ஊழியர்களுக்குமான அறிவிப்பின்படி கூட்டப் படுகிறது.  ஆதலால், இது வழக்கமாக நடக்கும் அதாலத் போக கூடுதலான ஒன்று ஆகும்.

(குறிப்பு : PCCA , சென்னை அலுவலகம் அறிவித்திருந்த 20-09-2019 அன்றும் திருநெல்வேலியில் மற்றொரு  'அதாலத்' நடைபெறும் என்று நம்புகிறோம்)