கடந்த 16-07-2019 அன்று உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா அவர்களின் வழிநடத்துதலில் அமைச்சர்கள் குழு (GoM) ஒன்று கூடி BSNL மற்றும் MTNLக்கு உயிர்ப்பூட்டம் தர பலவித முன்மொழிதல்களை (proposal) ஆலோசித்ததாகச் செய்தி ஊடகங்களில் வெளியாகி உள்ளது.
ஊழியர் எண்ணிக்கைதான் பிரச்சனையா?
இக்குழுவினுடைய செயல்பாட்டின் மொத்த அழுத்தமும் ஊழியர்களைக் குறைப்பதற்கே எனத் தெரிகிறது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இதைவிட அதிகமான BSNL ஊழியர்களைக் கொண்டு லாபம் ஈட்டியதை, அரசுக்கு அறிவுரை கூறும் வெளியுலக அறிவுப் பெட்டகங்களும் மறந்துவிட்டனர். இந்த அமைச்சர்கள் குழு ஊழியர்களுக்கு ‘VRS package’ குறித்து ஆலோசித்துள்ளது. இந்த பணபலன்(package) BSNLக்கு ₹.6364 கோடியும் MTNLக்கு 2120 கோடியும் செலவு தரக்கூடியதாக இருக்கும். முன்னர், இத்திட்டம் நிதித்துறையால் மறுக்கப்பட்டிருந்தது. அமைச்சகச் செயலர்களின் உயர்மட்டக் குழுவாலும் இது குறித்து தீர்மானம் எதுவும் எடுக்க முடியவில்லை.
4G அலைவரிசை :
4G அலைவரிசைக்கான செயல்பாட்டுச் செலவாக BSNLக்கு ₹.14000 கோடியும் MTNLக்கு 6000 கோடியும் ஆகும் என்று செய்தி ஊடகங்கள் அறிவிக்கின்றன.
அரசிடமிருந்து நிதியுதவி கிடைக்காது :
முன்னர், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் திரு. ரவி சங்கர் பிரசாத் அவர்கள் ₹.1000 கோடி நிதிநிலை அறிக்கையில்(budget) உடனடியாக ஒதுக்க வேண்டும் எனக் கேட்டிருந்தார். ஆனால், நிதித்துறை அமைச்சரோ இது குறித்து தனது நிதிநிலை அறிக்கை உரையில் ஏதும் குறிப்பிடாமல் விட்டு விட்டார்.
மேல் கூறியவாறு நடைபெற்ற ஆலோசனைக் குழுவில் திரு அமித்ஷா தவிர , திரு ரவி சங்கர் பிரசாத் அவர்களும், திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களும் உறுப்பினர்கள் என்பது அறியத் தக்கது.
.......
17-07-2019 : AIBSNLPWA CHQ செய்திக் குறிப்பு : தமிழாக்கம்