அரசு நிறுவனமாகிய பிஎஸ்என்எல் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் கணக்கீடு செய்யப்பட்ட இழப்பீடு சுமார் ₹ 14,000 கோடி என்றும், 2018-19ஆம் ஆண்டு வருமானம் ₹.19,308 கோடி குறைந்துள்ளது என்றும் பாராளுமன்றத்தில் தகவல் தரப்பட்டுள்ளது.
பொதுத்துறை நிறுவனத்தின் இடைக்கால இழப்பீடு,
2015-16ல் ₹.4,859 கோடி
2016-17ல் ₹.4,793 கோடி
2017-18ல் ₹ 7,993 கோடி.
இந்த இழப்பு மேலும் விரிவடைந்து ₹ 14,202 கோடியாக 2018-19ல் உயரும் என மத்தியத் தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் அவர்கள் எழுத்து வடிவமான பதிலை மக்கள் மன்றத்தில் தந்துள்ளார்.
"கைபேசிப் பிரிவில், கடினமான போட்டி காரணமாக வெகுவாகக் குறைக்கப்பட்ட கட்டணம், ஊழியர்களுக்கான செலவுகள், தொலைத் தொடர்புச் சந்தையில் தரவுகளே (data) மையமாகிப்போன உலகில் 4G சேவை இல்லாமை (சில இடங்கள் தவிர), ஆகிய இவையே பிஎஸ்என்எல் இழப்புக்கான காரணங்கள் " எனப் பிரசாத் கூறினார்.
தொலைத் தொடர்புச் சந்தையில் 2016ல் ரிலையன்ஸ் ஜியோவின் நுழைவுக்குப் பிந்தைய வரிசையான விளைவுகளில் ஒன்றாக பிஎஸ்என்எல் நிறுவனமும் வருமானச் சரிவைக் காண நேர்ந்துள்ளது.